மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

இந்தியாவின் மிக முக்கியமான கார் நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ். சமீப காலமாக இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருந்து வருகிறது. இதன் காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களின் விற்பனையும் சிறப்பாக காணப்படுகிறது.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

இந்த சூழலில், தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த செய்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ள பல்வேறு புதிய கார்கள் பற்றிய தகவல்களை பட்டியலிட்டுள்ளோம்.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

புதிய டாடா நெக்ஸான் சிஎன்ஜி (New Tata Nexon CNG)

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் உள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். சமீப காலமாக டாடா நெக்ஸான் காரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் வகையில், நெக்ஸான் காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யவுள்ளது.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

நெக்ஸான் சிஎன்ஜி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களும் கூட ஏற்கனவே வெளியாகியுள்ளன. எனவே டாடா நெக்ஸான் சிஎன்ஜி கார் இந்திய சந்தையில் வெகு விரைவிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் (Tata Altroz EV)

இந்திய சந்தையில் டாடா அல்ட்ராஸ் மிகவும் பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக உள்ளது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை, அதாவது அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற எக்ஸ்போவிலேயே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான தேதி தற்போது நெருங்கி வருகிறது. டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப விபரங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு நெருக்கமாகவோ அல்லது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளிலோ வெளியிடப்படும்.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

இருப்பினும் இந்த எலெக்ட்ரிக் கார், ஒரு முறை முழுமையாக நிரப்பினால் சுமார் 300 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யக்கூடிய திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரியை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவிக்கும் ரேஞ்ச் ஆக இருக்கலாம். நடைமுறை பயன்பாட்டில் இந்த எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் குறைந்தபட்சம் 250 கிலோ மீட்டர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

டாடா பன்ச் ஐ-டர்போ (Tata Punch i-Turbo), டாடா பன்ச் எலெக்ட்ரிக் (Tata Punch EV)

இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள மைக்ரோ எஸ்யூவி கார்களில் ஒன்றாக டாடா பன்ச் திகழ்கிறது. இந்த சிறிய எஸ்யூவி கார் வெகு விரைவில் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ (Tata Altroz i-Turbo) காரில் இருக்கும் அதே டர்போ-பெட்ரோல் இன்ஜின்தான் டாடா பன்ச் ஐ-டர்போ காரிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி ஏற்கனவே வாடிக்கையாளர்களை கவரும் தயாரிப்பாகவே இருக்கிறது. இந்த சூழலில் டர்போ-பெட்ரோல் வழங்கப்பட்டால், டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி கார் கூடுதல் பவர் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தும். இதன் காரணமாக இன்னும் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து, விற்பனை எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

மேலும் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வது குறித்தும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பரிசீலனை செய்து வருகிறது. சந்தைக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்வதிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பன்ச் எலெக்ட்ரிக் கார் தன்வசம் வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

ஆனால் டாடா பன்ச் காரின் தொழில்நுட்ப விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரின் டிசைன், அதன் ஐசி இன்ஜின் வெர்ஷனை போலவேதான் இருக்கும் என தெரிகிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார் என்பதை வெளிக்காட்டும் வகையில் ஒரு சில டிசைன் அம்சங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

புதிய டாடா ஹாரியர் (New Tata Harrier)

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் டாடா ஹாரியரும் ஒன்று. இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2022ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த புதிய மாடலின் தோற்றத்தில் மிகச்சிறிய அளவிலான அப்டேட்கள் மட்டுமே செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

எனினும் அப்டேட் செய்யப்பட்ட டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு புதிய வசதிகள் கூடுதலாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. டாடா ஹாரியர் கார் தற்போதைய நிலையில் டீசல் இன்ஜின் தேர்வுடன் மட்டுமே கிடைத்து வருகிறது. ஆனால் புதிதாக விற்பனைக்கு வரவுள்ள மாடலில் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

புதிய டாடா சஃபாரி (New Tata Safari)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரி காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலையும் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடலில் புதிய டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படலாம். இதே டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வுதான் புதிய டாடா ஹாரியர் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

டாடா கர்வ் (Tata Curvv), டாடா அவின்யா (Tata Avinya)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் காரை, எலெக்ட்ரிக் கான்செப்ட் வடிவில் சமீபத்தில் வெளியிட்டது. இந்த கார் வரும் 2024ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூபே ஸ்டைல் எஸ்யூவி கார், முதலில் எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகம் செய்யப்படும். அதை தொடர்ந்து ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

ஐசி இன்ஜின் வெர்ஷனில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அவின்யா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. டாடா அவின்யா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை வெர்ஷன் வரும் 2025ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி, ஹூண்டாயை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை... கங்கணம் கட்டிய டாடா... தரமான சம்பவம் காத்திருக்கு!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி தொடர்கிறது. ஆனால் ஒரு காலத்தில் 2வது இடத்தில் பிரச்னையில்லாமல் அமர்ந்திருந்த ஹூண்டாய் தற்போது அந்த இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் மல்லுக்கட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழலில் தனது புதிய தயாரிப்புகள் மூலம் ஹூண்டாய் நிறுவனத்துடன் சேர்த்து, மாருதி சுஸுகி நிறுவனத்திற்கும் கடுமையான போட்டியை ஏற்படுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
8 upcoming cars from tata motors in india nexon cng to altroz ev
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X