ஆட்டோமொபைல்ஸ் துறையில் களமிறங்குகிறதா அதானி குழுமம்? இணையத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் என்ன சொல்கிறது?

அதானி குழுமம் (Adani Group), மிக விரைவில் வாகன உற்பத்தி துறையில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆட்டோமொபைல்ஸ் துறையில் களமிறங்குகிறதா அதானி குழுமம்? இணையத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் என்ன சொல்கிறது?

இந்தியாவை மையமாகக் கொண்டு பன்முக தொழிலில் ஈடுபட்டு வரும் அதானி குழுமம் (Adani Group), மிக விரைவில் ஆட்டோமொபைல் தொழில்துறையில் தனது கால் தடத்தை பதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் முக்கிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஆட்டோமொபைல்ஸ் துறையில் களமிறங்குகிறதா அதானி குழுமம்? இணையத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் என்ன சொல்கிறது?

'அதானி' என்ற பெயரில் வாகன உற்பத்திக்கான வர்த்தக முத்திரையை அதானி குடும்ப அறக்கட்டளை பதிவு செய்திருக்கின்றது. இதன் வாயிலாகவே நிறுவனம் மிக விரைவில் அதானி குழுமம் புதிதாக வாகன உற்பத்தி தொழிலிலும் களமிறங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

ஆட்டோமொபைல்ஸ் துறையில் களமிறங்குகிறதா அதானி குழுமம்? இணையத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் என்ன சொல்கிறது?

சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் களமிறங்க இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எனவே, அதானி க்ரீன் எனெர்ஜி லிமிடெட் (Adani Green Energy Ltd) என்ற பெயரில் வாகன உலகம் சார்ந்து பல்வேறு தொழில்களில் அது ஈடுபடும் என தெரிகின்றது.

ஆட்டோமொபைல்ஸ் துறையில் களமிறங்குகிறதா அதானி குழுமம்? இணையத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் என்ன சொல்கிறது?

அதானி குழுமம் ஓர் புதிய துணை நிறுவனத்தை மிக மிக சமீபத்தில் தொடங்கியது. அதானி நியூ இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Adani New Industries Ltd - ANIL) எனும் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த துணை நிறுவனம், க்ரீன் எனெர்ஜி ப்ராஜெக்ட்ஸ், குறைந்த கார்பன் எரிபொருள்கள் / ரசாயனங்களின் தொகுப்பு மற்றும் குறைந்த கார்பன் வாயிலாக மின்சாரத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பசுமை ஆற்றல் திட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றது.

ஆட்டோமொபைல்ஸ் துறையில் களமிறங்குகிறதா அதானி குழுமம்? இணையத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் என்ன சொல்கிறது?

இதுமட்டுமின்றி சோலார் கருவிகள், பேட்டரிகள், மின்னாக்கிகள், விண்ட் டர்பைன்ஸ் மற்றும் ஹைட்ரஜன் ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவைகளை தயாரிக்கும் பணியிலும் அதானி குழுமத்தின் புதிய துணை நிறுவனம் ஈடுபட இருக்கின்றது. உலகமே பசுமை இயக்கம் மற்றும் இயற்கை வாயுவால் இயங்கும் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது.

ஆட்டோமொபைல்ஸ் துறையில் களமிறங்குகிறதா அதானி குழுமம்? இணையத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் என்ன சொல்கிறது?

இதனை மையமாகக் கொண்டே அதானி குழுமத்தின் புதிய துணை நிறுவனம் நாட்டில் களமிறங்க இருக்கின்றது. மேலும், இது இந்திய அரசின் பசுமை வாகன இயக்க ஊக்குவிப்பு முயற்சிக்கு பல வகைகளில் உதவி புரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதானி குழுமம், அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் (Adani Transmission Ltd) எனும் பெயரில் புதுப்பிக்கதக்க எரிசக்தி (மின்சார ஆற்றல்) பரிமாற்ற நிறுவனத்தை மேற்கொண்டு வருகின்றது.

ஆட்டோமொபைல்ஸ் துறையில் களமிறங்குகிறதா அதானி குழுமம்? இணையத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் என்ன சொல்கிறது?

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை மின் பரிமாற்றம் நிறுவனம் இதுவாகும். இந்த நிறுவனத்தின் தற்போதைய 3 சதவீத கொள்முதல் பங்கை 30 சதவீத உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2023ம் ஆண்டை இலக்காக கொண்டு இப்பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

ஆட்டோமொபைல்ஸ் துறையில் களமிறங்குகிறதா அதானி குழுமம்? இணையத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் என்ன சொல்கிறது?

அதானி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கௌதம் அதானி, புதை படிவ எரிபொருளை போலவே புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும் சாத்தியமானதாக மாற்ற இருப்பதாக மிக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தற்போது செயல்படுத்தும் வகையிலேயே புதிய துணை நிறுவனம் தொடக்கம் மற்றும் வர்த்தக பதிவு உள்ளிட்ட பணிகளை தொடங்கியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Adani group trademark registered to foray into automobile sector
Story first published: Thursday, January 20, 2022, 16:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X