இந்தியாவில் அறிமுகமாகும் புதிய லெக்ஸஸ் கார் இதுதான்!! என்.எக்ஸ் 350எச்... முன்பதிவுகள் துவக்கம்!

இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக முற்றிலும் புதிய லெக்ஸஸ் என்எக்ஸ்350எச் காரின் டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய லெக்ஸஸ் கார் இதுதான்!! என்.எக்ஸ் 350எச்... முன்பதிவுகள் துவக்கம்!

ஜப்பானிய லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான லெக்ஸஸ் அதன் முற்றிலும் புதிய என்எக்ஸ் 350எச் எஸ்யூவி காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்த லக்சரி எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட துவங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய லெக்ஸஸ் கார் இதுதான்!! என்.எக்ஸ் 350எச்... முன்பதிவுகள் துவக்கம்!

இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய லெக்ஸஸ் என்.எக்ஸ் 350எச் எஸ்யூவி காரின் சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே காணலாம். உலகளவில் இந்த லெக்ஸஸ் லக்சரி எஸ்யூவி கார் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. டொயோட்டாவின் புதிய உலகளாவிய கட்டமைப்பு இயக்குத்தளம் (TNGA)-வின் ஜிஏ-கே வெர்சனின் அடிப்படையில் புதிய என்.எக்ஸ் 350எச் எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடலின் இந்திய அறிமுகம் குறித்து லெக்ஸஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் நவீன் சோனி கருத்து தெரிவிக்கையில், "லெக்ஸஸ் என்எக்ஸ் அதன் சுறுசுறுப்பு, விசாலமான செயல்பாடு மற்றும் ஸ்போர்ட்டினெஸ் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் உள்ள எங்கள் விருந்தினர்களால் மிகவும் விரும்பப்படும் மாடல்களில் ஒன்றாகும். இந்த புதிய என்எக்ஸ்-ஐ விரைவில் அறிமுகப்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய லெக்ஸஸ் கார் இதுதான்!! என்.எக்ஸ் 350எச்... முன்பதிவுகள் துவக்கம்!

மேலும் என்.எக்ஸ் ஆனது ஆடம்பர சந்தையில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்." என்றார். தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய லெக்ஸஸ் என்.எக்ஸ் 350எச் ஆனது புதிய கருப்பு நிறத்தில் சுழல் டிசைனிலான க்ரில் மற்றும் L-வடிவிலான டிஆர்எல்களை கொண்ட நேர்த்தியான ஹெட்லேம்ப்களுடன் மிகவும் புத்துணர்ச்சியானதாக காட்சியளிக்கிறது.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய லெக்ஸஸ் கார் இதுதான்!! என்.எக்ஸ் 350எச்... முன்பதிவுகள் துவக்கம்!

காற்று ஏற்பான்கள் இதன் முன்பக்கத்தில் C-வடிவில் வழங்கப்பட்டுள்ளன. ஃபாக் விளக்குகளுடன் வழங்கப்பட்டுள்ள இந்த காற்று ஏற்பான்கள் தான் உண்மையில் இந்த எஸ்யூவி காரின் முன்பக்க தோற்றத்தை மெருக்கூட்டுகின்றன. பின்பக்கத்தில் L-வடிவிலான டெயில்லேம்ப்களை இணைக்கும் விதமாக காரின் மொத்த அகலத்திற்கும் லைட் பார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய லெக்ஸஸ் கார் இதுதான்!! என்.எக்ஸ் 350எச்... முன்பதிவுகள் துவக்கம்!

லெக்ஸஸின் லோகோ ஆனது நம்பர் ப்ளேட்டிற்கு மேலாக வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு இது புதிய தலைமுறை லெக்ஸஸ் கார் என அடையாளப்படுத்துகிறது. பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், புதிய லெக்ஸஸ் என்.எக்ஸ் 350எச் காரின் நீளம் 4,661மிமீ, அகலம் 1,865மிமீ மற்றும் உயரம் 1,661மிமீ ஆகும். காரின் வீல்பேஸ் 2690மிமீ நீளத்தில் உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய லெக்ஸஸ் கார் இதுதான்!! என்.எக்ஸ் 350எச்... முன்பதிவுகள் துவக்கம்!

உட்புறத்தில் இந்த புதிய லெக்ஸஸ் கார் டஸுனா கான்செப்ட்டின் அடிப்படையில் நேர்த்தியான டிசைனில் கேபினை கொண்டுள்ளது. இதன் டேஸ்போர்டில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடிய 9.8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், 14-இன்ச் நாவிகேஷன் சிஸ்டம், வயர் இல்லா சார்ஜிங், 10 ஸ்பீக்கர்களுடன் லெக்ஸஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய லெக்ஸஸ் கார் இதுதான்!! என்.எக்ஸ் 350எச்... முன்பதிவுகள் துவக்கம்!

இவற்றுடன் பயணிகள் & வாகனத்தின் பாதுகாப்பிற்கு இ-க்ளட்ச் சிஸ்டம், பாதுகாப்பாக வெளியேறுவதற்கான உதவி, பனோராமிக் வியூ மானிடர், ரிமோட் செயல்பாட்டுடன் அதிநவீன ஓட்டுனர் உதவி தொழிற்நுட்பங்கள், மோதலுக்கு-முந்தைய பாதுகாப்பு, முன்பக்கத்தில் மற்றொரு வாகனம் குறுக்காக வருவதை எச்சரிக்கும் வசதி, ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், வாகனம் பாதை மாறுவதை எச்சரிக்கும் வசதி, சாலையில் பாதையை மாற்ற உதவி, ப்ரோ ஆக்டிவ் ஓட்டுனர் உதவி, இபிடி உடன் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் முன் & ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு தொழிற்நுட்பங்களை இந்த லக்சரி எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய லெக்ஸஸ் கார் இதுதான்!! என்.எக்ஸ் 350எச்... முன்பதிவுகள் துவக்கம்!

சர்வதேச சந்தைகளில் புதிய என்.எக்ஸ் 350எச் காரில் லெக்ஸஸ் பிராண்டின் எலக்ட்ரிக் ட்ரைவ் உடன் 2.5 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 236 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய தொடர்ச்சியாக வெவ்வேறான டிரான்ஸ்மிஷன் (ECVT) மற்றும் பெடல் ஷிஃப்டர்ஸ் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய லெக்ஸஸ் கார் இதுதான்!! என்.எக்ஸ் 350எச்... முன்பதிவுகள் துவக்கம்!

இவை என்ஜினின் ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் வழங்கும். கடைசியாக கடந்த அக்டோபர் மாதத்தில் 2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ.56.65 லட்சங்கள் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #லெக்ஸஸ் #lexus
English summary
All-New Lexus NX 350h Teased Ahead Of India Launch; Pre-Bookings Open.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X