சன்ரூஃப் மட்டுமில்லைங்க.. சிஎன்ஜி தேர்விலும் வரும் புதிய மாருதி பிரெஸ்ஸா கார்!!

புதிய மாருதி பிரெஸ்ஸா காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. அத்துடன் இதன் சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

காத்திருந்தது போதும்... புதிய மாருதி பிரெஸ்ஸா காருக்கான புக்கிங் துவங்கியாச்சு!!

இந்திய காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவு வருடத்திற்கு வருடம் போட்டி மிகுந்ததாக மாறி வருகிறது. சமீபத்தில்தான் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் வென்யூ மாடலை புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் அறிமுகப்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து வென்யூவிற்கு நேரடி போட்டி மாடலாக விளங்கும் விட்டாரா பிரெஸ்ஸாவையும் மாருதி சுஸுகி நிறுவனம் அப்டேட் செய்ய தயாராகி வருகிறது.

காத்திருந்தது போதும்... புதிய மாருதி பிரெஸ்ஸா காருக்கான புக்கிங் துவங்கியாச்சு!!

இதற்கிடையில்தான் சிஎன்ஜி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மாருதி பிரெஸ்ஸா கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக தி இந்தியன் மோட்டார் ஹெட்ஸ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படத்தை கீழே காணலாம். இதில் இருந்து புதியதாக சிஎன்ஜி தேர்விலும் பிரெஸ்ஸா விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதை அறிய முடிகிறது.

காத்திருந்தது போதும்... புதிய மாருதி பிரெஸ்ஸா காருக்கான புக்கிங் துவங்கியாச்சு!!

Source

இதன் மூலமாக சிஎன்ஜி தேர்வை பெறவுள்ள இந்தியாவின் முதல் எஸ்யூவி காராக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விளங்கவுள்ளது. மாருதி சுஸுகியை போன்று டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்களும் தங்களது நெக்ஸான் மற்றும் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி கார்களில் சிஎன்ஜி தேர்வை கொண்டுவரும் திட்டத்தில் உள்ளன.

காத்திருந்தது போதும்... புதிய மாருதி பிரெஸ்ஸா காருக்கான புக்கிங் துவங்கியாச்சு!!

புதிய பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில் சிஎன்ஜி தொகுப்பை மாருதி சுஸுகி நிறுவனம் தொழிற்சாலையிலேயே பொருத்தி வழங்க உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய விட்டாரா பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் மைலேஜ் 25kmpkg-இல் இருந்து 30kmpkg வரையில் இருக்கலாம். மாருதி சுஸுகி எர்டிகா காரில் ஏற்கனவே சிஎன்ஜி தேர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதில் அதிகப்பட்சமாக 26.11kmpkg வரையிலான மைலேஜ் கிடைக்கிறது.

காத்திருந்தது போதும்... புதிய மாருதி பிரெஸ்ஸா காருக்கான புக்கிங் துவங்கியாச்சு!!

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரில் சிஎன்ஜி தேர்வானது அதன் புதிய தலைமுறை அப்கிரேடில் இருந்து வழங்கப்பட உள்ளது. நடப்பு 2022 ஜூன் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய விட்டாரா பிரெஸ்ஸா காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மாருதி சுஸுகியின் அரேனா டீலர்ஷிப்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள படத்தினை கீழே காணலாம்.

காத்திருந்தது போதும்... புதிய மாருதி பிரெஸ்ஸா காருக்கான புக்கிங் துவங்கியாச்சு!!

இந்த முன்பதிவிற்கான டோக்கன் தொகை எவ்வளவு என்பது இப்போதைக்கு நமக்கு தெரியவரவில்லை. ஆனால் ஏற்கனவே துவங்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளுக்கு ரூ.10,000 டோக்கன் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது. 2022 பிரெஸ்ஸா காரை பற்றிய விபரங்கள் ஏற்கனவே சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாக ஆரம்பித்துவிட்டன.

காத்திருந்தது போதும்... புதிய மாருதி பிரெஸ்ஸா காருக்கான புக்கிங் துவங்கியாச்சு!!

குறிப்பாக புதிய மாடல் வெறும் 'பிரெஸ்ஸா' என்கிற பெயரில் மட்டுமே அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அரேனா டீலர்ஷிப்களின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள படத்திலும் பிரெஸ்ஸா என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்பக்கத்தில் ஸ்போர்டியரான தோற்றத்தை பெற்றுவரும் புதிய பிரெஸ்ஸா கார் அதேநேரம் உட்புறத்திலும் ஏகப்பட்ட அப்கிரேட்களை ஏற்றுவரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காத்திருந்தது போதும்... புதிய மாருதி பிரெஸ்ஸா காருக்கான புக்கிங் துவங்கியாச்சு!!

இதன்படி டிஆர்எல்கள் & ஹெட்லேம்ப்கள், க்ரில், ஃபாக் விளக்கிற்கான குழிகள் மற்றும் பம்பர் உள்ளிட்டவற்றில் மாற்றங்களுடன் அப்டேட்டான முன்பக்கத்தை 2022 பிரெஸ்ஸா கார் பெற்றுவரவுள்ளது. இந்த காரின் பக்கவாட்டு பகுதி அகலமான உடல் க்ளாடிங்குகள் & கதவு மோல்டிங்குகளுடன் புதிய இரட்டை-நிற அலாய் சக்கரங்களை ஏற்றுவரவுள்ளது. இவற்றின் விளைவாக புதிய பிரெஸ்ஸா கார் முன்பை காட்டிலும் கூடுதல் முரட்டுத்தனமானதாக காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காத்திருந்தது போதும்... புதிய மாருதி பிரெஸ்ஸா காருக்கான புக்கிங் துவங்கியாச்சு!!

பின்பக்கத்தில் புதிய வடிவில் டெயில்லேம்ப்கள், புதிய 'பிரெஸ்ஸா' எழுத்துகள் மற்றும் அப்டேட்டான பூட் லிட் & பம்பர் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம். இவ்வாறான மாற்றங்கள் இருப்பினும், மாருதி பிரெஸ்ஸாவின் வழக்கமான பரிமாண அளவுகளில் பெரியதாக மாற்றம் இருக்காது என்றே கூறப்படுகிறது. 2022 பிரெஸ்ஸா காரின் உட்புற கேபினில் மிக முக்கிய அம்சமாக சன்ரூஃப் வழங்கப்பட உள்ளது.

காத்திருந்தது போதும்... புதிய மாருதி பிரெஸ்ஸா காருக்கான புக்கிங் துவங்கியாச்சு!!

இதன் மூலமாக சன்ரூஃப்-ஐ பெறும் முதல் மாருதி காராக புதிய பிரெஸ்ஸா விளங்கவுள்ளது. இருப்பினும் சிங்கிள்-பேன் சன்ரூஃப்-ஆகவே இது இருக்குமே தவிர்த்து விலையுயர்ந்த கார்களில் உள்ளதை போல் பனோராமிக் சன்ரூஃப்-ஆக இருக்க வாய்ப்பில்லை. இதனுடன் பெரிய அளவிலான தொடுத்திரை & ஓட்டுனருக்கான திரை உள்ளிட்டவற்றையும் எதிர்பார்க்கிறோம்.

NOTE: Images were used for representative purpose only.

Most Read Articles
English summary
All new maruti brezza bookings open
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X