"அணுகுண்டால் மட்டுமே இந்த காரை தகர்க்க முடியும்"... புதிய 'ஸ்கார்பியோ என்' இவ்வளவு பாதுகாப்பானதா? முழு விபரம்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் சேர்மேன் ஆனந்த் மஹிந்திரா, விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஸ்கார்பியோ என் காரை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியும் என டுவிட்டர் பதிவில் கூறியிருக்கின்றார். இதுகுறித்த மேலும் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் வெகு விரைவில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த புதிய தலைமுறை ஸ்கார்பியோ புதிய பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாக நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. ஸ்கார்பியோ என் (Scorpio N) என்கிற பெயரிலேயே அக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இப்புதிய ஸ்கார்பியோ என் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் கார் குறித்த டீசர் படங்களை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, புதிய ஸ்கார்பியோ அதிக பாதுகாப்பான காராக விற்பனைக்கு வர இருப்பதாக நிறுவனம் சமீபத்தில் ஹிண்ட் வழங்கியது.

சமீபத்தில் இன்ஸ்டா பதிவில் ஓர் இளைஞர் புதிய ஸ்கார்பியோ என் காரை கிண்டல் செய்யும் வகையில் பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிறுவனத்தின் சேர்மேன் ஆனந்த் மஹிந்திரா, "காரை தகர்க்க அணு குண்டால் மட்டுமே முடியும்" என தெரிவித்தார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிறுவனத்தின் பிற தயாரிப்புகளைப் போலவே அதிக பாதுகாப்பு வசதிகளுடன் புதிய ஸ்கார்பியோ என் விற்பனைக்கு வரவிருக்கின்றதோ என பலரை ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட் யோசிக்க வைத்துள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான எக்ஸ்யூவி700 குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் ஐந்திற்கு 5 ஸ்டார்களைப் பெற்று அதிக பாதுகாப்பான கார் என்ற பெறுமையை நிறுவனத்திற்கு தேடி தந்தது.

இதேபோல், எக்ஸ்யூவி300 மற்றும் தார் உள்ளிட்ட கார் மாடல்களும் அதிக பாதுகாப்பானவை என குளோபல் என்சிஏபி இடம் நற்சான்றை பெற்றிருக்கின்றன. இவற்றின் வரிசையில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஸ்கார்பியோ என் மாடலும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்கார்பியோ என் எஸ்யூவி காரில் 6 ஏர் பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் பல சிறப்பம்சங்களும் இக்காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர, பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன் ரூஃப், ட்யூவல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், மல்டி ஃபங்க்ஷன்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களும் ஸ்கார்பியோ என் இல் இடம்பெற இருக்கின்றன. இக்காரை வரும் ஜூன் 27ம் தேதி அன்று மஹிந்திரா வெளியீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இதன் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்க பெரிய ட்ரீட்டை வழங்கும் வகையில் இந்த தகவலை சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டது. அதேநேரத்தில் புதிய ஸ்கார்பியோ என்-இன் வருகை தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவின் விற்பனைக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது தெரிய வந்திருக்கின்றது.

அதாவது, இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமாக விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவை 'ஸ்கார்பியோ கிளாசிக்' எனும் பிரிவில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ என் காரை இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் உருவாக்கியிருக்கின்றது. அந்தவகையில், பிரீமியமான இன்டீரியர், சமீபத்திய தொழில்நுட்ப கருவிகள் மற்றும் மேம்பட்ட நவீன அம்சங்கள் ஆகியவற்றால் இக்கார் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இளைஞர்களுக்கு பிடித்தமான வசதிகளான மேனுவல், தானியங்கி டிரான்ஸ்மிஷன் மற்றும் 4X4 தொழில்நுட்பம் ஆஃப் ரோடு பயன்பாட்டு வசதிகளுடன் ஸ்கார்பியோ என் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இத்துடன், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வும் அதில் வழங்கப்பட இருக்கின்றது.

மேலும், பெரிய குடும்பங்கள் பயணிக்கும் வகையில் ஆறு மற்றும் 7 இருக்கைகள் தேர்வில் இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இக்கார் ரூ. 11 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார், எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Anand mahindra hinted new scorpio will have good occupant safety
Story first published: Tuesday, May 24, 2022, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X