இதோட வேக திறனுக்கு முன்னால லம்போர்கினி உருஸ் காரே தோத்துபோய்ரும்! அதீத பவரை வெளியேற்றும் புதுமுக கார் அறிமுகம்

இந்தியாவில் அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் 707 (Aston Martin DBX 707) சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இதோட வேக திறனுக்கு முன்னால லம்போர்கினி உருஸ் காரே தோத்து போய்ரும்... அதீத பவரை வெளியேற்றும் எஸ்யூவி கார் அறிமுகம்!

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் டிபிஎக்ஸ் 707 (Aston Martin DBX 707) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் வேறு எந்த எஸ்யூவி காரும் வெளிப்படுத்தாத சூப்பரான வேகத்தை வெளியேற்றும் திறன் கொண்ட காராக இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. தெளிவாகக் கூற வேண்டுமெனில், இந்தியாவின் மோஸ்ட் பவர்ஃபுல் வாகனமான லம்போர்கினி எஸ்யூவி காரையே தோற்கடிக்கும் திறனை இந்த கார் கொண்டிருக்கின்றது.

இதோட வேக திறனுக்கு முன்னால லம்போர்கினி உருஸ் காரே தோத்து போய்ரும்... அதீத பவரை வெளியேற்றும் எஸ்யூவி கார் அறிமுகம்!

லம்போர்கினி உருஸ் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 3.6 செகண்டுகளில் தொட்டுவிடும். ஆகையால், இந்தியாவின் மிகவும் பவர்ஃபுல்லான எஸ்யூவி கார் என்ற மகுடத்தை இக்கார் சூடிக் கொண்டிருந்தது. இந்த பதவியையே தற்போது அஸ்டன் மார்ட்டினின் டிபிஎக்ஸ் 707 அக்காரிடம் இருந்து தட்டிப் பறித்திருக்கின்றது.

இதோட வேக திறனுக்கு முன்னால லம்போர்கினி உருஸ் காரே தோத்து போய்ரும்... அதீத பவரை வெளியேற்றும் எஸ்யூவி கார் அறிமுகம்!

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் 707 வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தைத் தொட்டுவிடும். இந்த மாதிரியான சூப்பர் ஃபவர்ஃபுல் திறன் கொண்ட காராகவே டிபிஎக்ஸ் 707 இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 4.63 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இதோட வேக திறனுக்கு முன்னால லம்போர்கினி உருஸ் காரே தோத்து போய்ரும்... அதீத பவரை வெளியேற்றும் எஸ்யூவி கார் அறிமுகம்!

இந்த அதீத திறன் வெளிப்பாட்டிற்காக அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் 707 காரில் ட்வின் டர்போ வி8 ட்யூன்ட் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 707 பிஎஸ் பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்தியாவில் உள்ள வழக்கமான எஸ்யூவி கார் மாடல்கள் 157 பிஎஸ் மற்றும் 200 என்எம் டார்க் வரையில் மட்டுமே வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதோட வேக திறனுக்கு முன்னால லம்போர்கினி உருஸ் காரே தோத்து போய்ரும்... அதீத பவரை வெளியேற்றும் எஸ்யூவி கார் அறிமுகம்!

அஸ்டன் மார்ட்டின் வெளிப்படுத்தும் பிஎஸ் மற்றும் என்எம் டார்க் திறன் ஆகியவையும் லம்போர்கினியைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றது. லம்போர்கினி உருஸ் எஸ்யூவி 640 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த வித்தியாசத்தின் காரணத்தினாலேயே அஸ்டன் மார்ட்டின் லம்போர்கினி உருஸைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்லக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது.

இதோட வேக திறனுக்கு முன்னால லம்போர்கினி உருஸ் காரே தோத்து போய்ரும்... அதீத பவரை வெளியேற்றும் எஸ்யூவி கார் அறிமுகம்!

டிபிஎக்ஸ் 707 காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே பயன்படுத்தப்பட்டுள்ளது. அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் மிக சிறந்த திறன் வெளிப்பாட்டிற்கு ஏதுவாகவே இந்த காரின் சேஸிஸ், சஸ்பென்ஷன், ஸ்டியரிங் வீல் மற்றும் கார் செராமிக்ஸ் பிரேக்குகள் ஆகியவற்றை பயன்படுத்தியிருக்கின்றது. அஸ்டன் மார்ட்டின் சொகுசு காரில் இதுபோன்று இன்னும் பல சொகுசு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதோட வேக திறனுக்கு முன்னால லம்போர்கினி உருஸ் காரே தோத்து போய்ரும்... அதீத பவரை வெளியேற்றும் எஸ்யூவி கார் அறிமுகம்!

அந்தவகையில் சொகுசு வசதிகளாக அல்கான்டரா மற்றும் லெதரால் இக்காரின் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. சாஃப்ட் குளோஸிங் டூர்கள், டார்க் குரோம் ட்ரிம் பிட் மற்றும் ஸ்போர்ட்ஸ் டைப் இருக்கைகள் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் முன் பக்க இருக்கையில் கூடுதலாக ஹீட்டிங், வென்டிலேஷன் மற்றும் 16 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இதோட வேக திறனுக்கு முன்னால லம்போர்கினி உருஸ் காரே தோத்து போய்ரும்... அதீத பவரை வெளியேற்றும் எஸ்யூவி கார் அறிமுகம்!

எனவே அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் 707 சூப்பர் பவர்ஃபுல் எஸ்யூவி-ஆக மட்டுமின்றி மிக அதிக சிறப்பு மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட காராகவும் காட்சியளிக்கின்றது. இதுமாதிரியான அம்சங்களை இதுக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இது அதிக விலையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

இதோட வேக திறனுக்கு முன்னால லம்போர்கினி உருஸ் காரே தோத்து போய்ரும்... அதீத பவரை வெளியேற்றும் எஸ்யூவி கார் அறிமுகம்!

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் 707 காரில் 10.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட திரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், சில புதிய கன்ட்ரோல் பொத்தான்களும் இந்த காரின் சென்ட்ரல் கன்சோலில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் ஸ்விட்ச் கியர்கள் டார்க் குரோமால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதுமாதிரியான சிறப்பு கருவிகளால் இன்னும் பல மடங்கு அழகுமிக்க காராக டிபிஎக்ஸ் 707 காட்சியளிக்கின்றது.

இதோட வேக திறனுக்கு முன்னால லம்போர்கினி உருஸ் காரே தோத்து போய்ரும்... அதீத பவரை வெளியேற்றும் எஸ்யூவி கார் அறிமுகம்!

இந்த சொகுசு காரின் வருகை லம்போர்கினி உருஸ், போர்ஷே கேயென்னே டர்போ ஜிடி மற்றும் பென்ட்லீ பென்டேகா உள்ளிட்டவற்றிற்கு போட்டியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, இதன் வருகை இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் உருஸ் சொகுசு எஸ்யூவி காருக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த இருக்கின்றது.

Most Read Articles
English summary
Aston martin dbx 707 launched in india at inr 4 63 cr
Story first published: Monday, October 3, 2022, 18:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X