புதிய ஏ8 எல் சொகுசு காரின் அறிமுக தேதி வெளியிட்டது ஆடி! இதுல இருக்க லக்சூரி அம்சங்கள் நம்மையே வாங்க தூண்டுதே!

ஆடி நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட ஏ8 எல் (Audi A8 L) சொகுசு காரின் அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதிய ஏ8 எல் சொகுசு காரின் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... இதுல இருக்க லக்சூரி அம்சங்கள் நம்மையே வாங்க தூண்டுதே!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி, அதன் புதுப்பிக்கப்பட்ட ஏ8 எல் சொகுசு காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூலை 12ம் தேதி அன்றே இதன் இந்திய அறிமுகம் அரங்கேற இருக்கின்றது.

புதிய ஏ8 எல் சொகுசு காரின் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... இதுல இருக்க லக்சூரி அம்சங்கள் நம்மையே வாங்க தூண்டுதே!

இதன் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் ஆடி நிறுவனம் ஏ8 எல் சொகுசு காருக்கான புக்கிங் பணிகளைத் தொடங்கியிருக்கின்றது. இது ஓர் சொகுசு வசதிகள் நிரம்பிய செடான் ரக காராகும். இந்த வாகனத்திற்கு ஆடி நிறுவனம் ஐந்தாண்டுகள் மற்றும் அன்லிமிடெட் கிமீ வாரண்டியை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

புதிய ஏ8 எல் சொகுசு காரின் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... இதுல இருக்க லக்சூரி அம்சங்கள் நம்மையே வாங்க தூண்டுதே!

புதுப்பித்தலின் வாயிலாக கணிசமான புதிய அப்டேட்டுகளை ஏ8 எல் சொகுசு காரில் ஆடி நிறுவனம் வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், குரோம் ஃபினிஷ்ட் க்ரில் மற்றும் ஸ்லீக் ரக எல்இடி ஹெட்லேம்ப், புதிய கிராஃபிக்குகள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவற்றுடன் ஆடி ஏ8 எல் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

புதிய ஏ8 எல் சொகுசு காரின் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... இதுல இருக்க லக்சூரி அம்சங்கள் நம்மையே வாங்க தூண்டுதே!

அலாய் வீல்களை 18-21 அங்குல தேர்வுகளில் பெற்றுக் கொள்ள முடியும். குரோம் இன்செர்ட்டுகளுடன் இது கிடைக்கும். காரின் பின்பக்கத்திலும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஓஎல்இடி லைட்டுகள் கஸ்டமைஸ் செய்யப்படும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காரின் டிஃப்யூசர் இன்செர்டுகளும் மறு வடிவமைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஏ8 எல் சொகுசு காரின் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... இதுல இருக்க லக்சூரி அம்சங்கள் நம்மையே வாங்க தூண்டுதே!

இந்த அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனையே நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் உலகளவில் வெளியீடு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டது. மேலும், கடந்த மே மாதம் காருக்கான புக்கிங் பணிகளைத் தொடங்கியது. ரூ. 10 லட்சம் முன் தொகையிலேயே ப்ரீ புக்கிங் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் பற்றிய தகவல்கள் வெளியாகியள்ளன.

புதிய ஏ8 எல் சொகுசு காரின் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... இதுல இருக்க லக்சூரி அம்சங்கள் நம்மையே வாங்க தூண்டுதே!

இதேபோல் கணிசமான மாற்றங்களை காருக்குள்ளும் ஆடி செய்திருக்கின்றது. இதனால் கூடுதல் லக்சூரியான காராக அது மாறியிருக்கின்றது. இத்துடன், காரின் டேஷ்போர்டிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், 10.1 அங்குல மற்றும் 8.6 அங்குல திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஏ8 எல் சொகுசு காரின் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... இதுல இருக்க லக்சூரி அம்சங்கள் நம்மையே வாங்க தூண்டுதே!

இத்துடன், முழு டிஜிட்டல் விர்சுவல் க்ளஸ்டர் மற்றும் ஸ்போர்டி மல்டி-ஃபங்க்சனல் ஸ்டியரிங் வீல் ஆகியவையும் புதிய ஃபேஸ்லிஃப்ட் ஏ8 எல் சொகுசு காரில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், சில உயர் ரக தொழில்நுட்ப அம்சங்களும் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஏ8 எல் சொகுசு காரின் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... இதுல இருக்க லக்சூரி அம்சங்கள் நம்மையே வாங்க தூண்டுதே!

பல்வேறு அட்ஜெஸ்ட்மெண்ட் வசதிக் கொண்ட இருக்கைகள், பின் பக்க இருக்கையாளர்களுக்கான தனித்துவமான ஃபுட் ரெஸ்ட், எலெக்ட்ரானிக் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், ஆப்ஷனல் சென்டர் கன்டோல் உள்ளிட்ட அம்சங்கள் ஹை-என்ட் சிறப்பம்சங்களாக ஆடி ஏ8இல் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஏ8 எல் சொகுசு காரின் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... இதுல இருக்க லக்சூரி அம்சங்கள் நம்மையே வாங்க தூண்டுதே!

இதுதவிர, 4 ஜோன் ஆட்டோமேட்டிக் ஏர் கன்டிஷனிங் மற்றும் 10.1 அங்குல திரை ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. எஞ்ஜினைப் பொருத்தவரை இக்காரில் 3.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ வி6 மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இரண்டும் சேர்ந்து 340 பிஎச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க்கை அது வெளியேற்றும்.

புதிய ஏ8 எல் சொகுசு காரின் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... இதுல இருக்க லக்சூரி அம்சங்கள் நம்மையே வாங்க தூண்டுதே!

மோட்டாரை 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், 4.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ வெர்ஷனிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த மோட்டார் 460 பிஎச்பி பவரையும், 660 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இவ்விரு மோட்டார்களும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi a8 l facelift india launch timeline revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X