ஆண்டுக்கு ஒன்று வீதம் 5எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்.. சூப்பரான முடிவு எடுத்திருக்காங்க!

ஆண்டுக்கு ஒன்று என 2025ம் ஆண்டு தொடங்கி 2030 வரை ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு எலெக்ட்ரிக் காரை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆண்டுக்கு ஒன்று வீதம் 5 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்... சூப்பரான முடிவு எடுத்திருக்காங்க!

மின் வாகனங்களுக்கான தேவை முன்பைக் காட்டிலும் தற்போது பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. பல ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், கடந்த 2021ம் ஆண்டில் இருந்தே அவற்றிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

ஆண்டுக்கு ஒன்று வீதம் 5 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்... சூப்பரான முடிவு எடுத்திருக்காங்க!

மத்திய அரசின் ஃபேம்2 திட்டம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவையே மக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தியிருக்கின்றன. முன்பு மிக அதிக விலையில் விற்கப்பட்டு வந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது மத்திய அரசின் ஃபேம்2 திட்டத்தால் பல மடங்கு குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆண்டுக்கு ஒன்று வீதம் 5 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்... சூப்பரான முடிவு எடுத்திருக்காங்க!

இதுமாதிரியான நிலையே உலகளவில் தென்படுகின்றது. அதாவது, உலக நாடுகள் அனைத்தும் தங்கள் மக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் விதமாக பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையின் காரணத்தினால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் பார்வையை மின் வாகன உற்பத்தியின் பக்கம் திருப்பியிருக்கின்றன.

ஆண்டுக்கு ஒன்று வீதம் 5 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்... சூப்பரான முடிவு எடுத்திருக்காங்க!

சில முன்னணி நிறுவனங்கள், மிக விரைவில் எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டு, வெறும் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை களமிறக்கப்போவதாக பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது.

ஆண்டுக்கு ஒன்று வீதம் 5 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்... சூப்பரான முடிவு எடுத்திருக்காங்க!

பென்ட்லீ (Bentley) மோட்டார்ஸ் நிறுவனமே அந்த அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் ஆகும். 2025ம் ஆண்டு தொடங்கி 2030ம் ஆண்டிற்குள் ஐந்து புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பையே நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. தனது முதல் எலெக்ட்ரிக் காரை 2025ம் ஆண்டில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

ஆண்டுக்கு ஒன்று வீதம் 5 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்... சூப்பரான முடிவு எடுத்திருக்காங்க!

பென்ட்லீ நிறுவனம் தனது மின் வாகன உற்பத்தி திட்டம் பற்றிய தகவலை கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டுவிட்டது. ஒற்றை எலெக்ட்ரிக் வாகனத்தை மட்டுமே 2025ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலே நிறுவனம் இன்னும் சில மின்சார கார்களை அறிமுகம் செய்ய இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. 2025ம் ஆண்டைத் தொடர்ந்து ஒவ்வொரு மாடலாக 2030ம் ஆண்டு வரை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

ஆண்டுக்கு ஒன்று வீதம் 5 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்... சூப்பரான முடிவு எடுத்திருக்காங்க!

இதுகுறித்து பென்ட்லீ மோட்டார்ஸின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அட்ரியன் ஹால்மார்க் கூறியதாவது, "பென்ட்லியின் பியாண்ட்100 திட்டம் தொடர்பான இந்த சமீபத்திய அறிவிப்பு, நிறுவனத்தின் நீண்ட மற்றும் புகழ்பெற்ற வரலாற்றில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் கட்டத்தின் தொடக்கத்தை உறுதிப்படுத்துகிறது. உலகம் மாறிக்கொண்டிருக்கிறது, நமது சுற்றுச்சூழல் பாதிப்பை நடுநிலையாக்குவதில் நாம் நமது பங்கை ஆற்ற வேண்டும்" என்றார்.

ஆண்டுக்கு ஒன்று வீதம் 5 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்... சூப்பரான முடிவு எடுத்திருக்காங்க!

பென்ட்லீ நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான ரோல்ஸ் ராய்ஸ், அதன் முதல் எலக்ட்ரிக் கார் ஸ்பெக்டரை அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்டன் மார்ட்டினும் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அனுபவத்தை வழங்கும் விதமாக மின்சார கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான ஃபெராரியும், மிக விரைவில் அதன் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய இருக்கின்றது. இதற்கான பணியில் நிறுவனம் மிக மும்மராக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Bentley planning to launch five ev s starting from 2025 to 2030
Story first published: Friday, January 28, 2022, 19:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X