ஊருக்கு போகும் போது லக்கேஜை அள்ளி போட்டுட்டு போறவரா நீங்க? அப்போ இந்த கார்கள் அனைத்தும் உங்களுக்கு ஏத்ததுதான்!

அதிக பூட் ஸ்பேஸ் வசதிக் கொண்ட ஹேட்ச்பேக் ரக கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக ஐந்து ஹேட்ச்பேக் ரக கார்களின் லிஸ்டை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் அவை என்ன மாடல் என்பது பற்றிய தகவலைக் காணலாம்.

இந்தியாவின் நகர்புற பகுதிகளுக்கு ஹேட்ச்பேக் ரக கார்களே சிறந்தவை. நெரிசல் மிகுந்த சாலை மற்றும் தெருக்களில் ஹேட்ச்பேக் ரக கார்கள் அசால்டாக பயணிக்கும். பிற ரக வாகனங்களைக் காட்டிலும் இதில் பயணிப்பது சற்று சுலபமாக இருக்கும். எனவேதான், இந்தியர்கள் பலர் இப்போதும் ஹேட்ச்பேக் ரக கார்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுக்கின்றனர். குறிப்பாக, இந்தியாவின் டிரெண்ட் எஸ்யூவி காரின் பக்கம் மாறியிருக்கின்ற வேலையிலும் பலர் ஹேட்ச்பேக் ரக கார் விரும்பிகளாக இருக்கின்றனர்.

ஹேட்ச்பேக்

இதற்கு அவை அடக்கமான தோற்றத்திலும், ஸ்டைலிலும் இருப்பதும் ஓர் காரணமாக இருக்கின்றது. எனவேதான் ஒரு சிலர் சொகுசு வசதிகள் நிறைந்த பெரிய எஸ்யூவி ரக கார் தங்களிடம் இருக்கின்ற போதிலும், கூடுதலாக ஓர் சிறிய உருவம் கொண்ட ஹேட்ச்பேக் ரக காரையும் வாங்கிக் கொள்கின்றனர். இந்த ரக கார்களில் நகர்ப்புறங்களில் பயணப்பது மிக எளிதாக இருக்கும். அதுமட்டுமின்றி, அவற்றைப் பார்க் செய்ய பெரிய அளவில் இடம் தேவைப்படாது.

இந்த காரணத்திற்காகவே சுஸுகி வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் போன்ற ஹேட்ச்பேக் ரக கார்கள் இப்போதும் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றன. இந்த மாதிரியான ஹேட்ச்பேக் ரக கார் மாடல்கள் அதிகம் பூட் ஸ்பேஸுடனும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்தவகையில், தற்போதைய நிலவரப்படி அதிக பூட் ஸ்பேஸுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் ஐந்து ஹேட்ச்பேக் ரக கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி பலினோ:

மாருதி சுஸுகி பலினோ இந்தியாவின் பிரீமியம் வசதிகள் நிறைந்த ஹேட்ச்பேக் கர காராகும். இந்த காரையே டொயோட்டா நிறுவனம் கிளான்ஸா எனும் பெயரில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. கணிசமான மதிப்புக் கூட்டப்பட்ட அம்சங்களுடன் இந்த கார் சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. மாருதி பலினோவின் பூட் ஸ்பேஸ் 339 லிட்டர் ஆகும். இரண்டு பெரிய அளவுள்ள சூட்-கேஸைகூட இதில் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அதாவது, இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளைக் கொண்ட ஓர் தம்பதியினர் தங்களின் ஒரு வார தேவைக்கு ஏற்ப துணி மணிகளை இந்த காரில் தாராளமாக எடுத்துச் செல்ல முடியும். இதன் ஆரம்ப விலை ரூ. 6.49 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஹூண்டாய் ஐ20:

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக இட வசதிக் கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடல்களில் ஐ20-ம் ஒன்று. இந்த காரின் பூட் ஸ்பேஸ் 311 லிட்டர் ஆகும். இந்த காரிலும் ஓர் சிறிய குடும்பம் தங்களின் குறுகிய கால டிராவலுக்கான உடைகளை தாராளமாக எடுத்துச் செல்ல முடியும். இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹூண்டாய் காராகும். இதுமட்டுமின்றி, இபிடி மற்றும் ஏபிஎஸ் போன்று பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 7.07 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்:

இந்தியர்களின் ஃபேவரிட் கார் என இதனை கூறலாம். மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் இதன் புதிய தலைமுறை வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அந்த புதிய தலைமுறை ஒரு லிட்டருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரை மைலேஜ் தரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் காரின் பூட் ஸ்பேஸ் 268 லிட்டர் ஆகும். அதேவேலையில் இதன் பின்னிருக்கையில் மடக்கிக்கொண்டால் அதனை 600 லிட்டராக உயர்த்திக் கொள்ள முடியும். இதேபோல், இந்த காரில் ஐந்து பேர் வரை மிக தாராளமாக பயணிக்கலாம். இதன் ஆரம்ப விலை ரூ. 5.92 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டாடா அல்ட்ராஸ்:

டாடா நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் அல்ட்ராஸும் ஒன்று. இந்த காரிலும் பிரீமியம் அம்சங்கள் மிக அதிகளவில் வழங்கப்பட்டிருக்கும். இந்த காரின் பூட் ஸ்பேஸ் 345 லிட்டர் ஆகும். இது பூட் ஸ்பேஸில் மட்டும் சிறந்த கார் அல்ல. பாதுகாப்பு விஷயத்திலும் மிக சிறந்த காராக காட்சியளிக்கின்றது. இது ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற ஹேட்ச்பேக் காராகும். எனவேதான் இந்தியர்களின் ஃபேவரிட்டான ஹேட்ச்பேக் கார்களில் இதுவும் ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.

ஹோண்டா ஜாஸ்:

நாம் பார்த்த மற்ற ஹேட்ச்பேக் ரக கார்களைப் போலவே ஹோண்டா ஜாஸ்-ம் அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த வாகனம் ஆகும். இந்த காரின் பூட் ஸ்பேஸ் 354 லிட்டர் ஆகும். ஆம், நம்முடைய இந்த அதிகம் பூட் ஸ்பேஸ் கொண்ட ஹேட்ச்பேக் ரக கார்களின் லிஸ்டிலேயே மிக மிக அதிக பூட் ஸ்பேஸைக் கொண்டது ஜாஸ்தான். இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 7 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் ஹெட்ரூம் மற்றும் லெக்ரூமும் மிக தாராளமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: மேலே பார்த்த கார் மாடல்களில் சில சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றில் வாங்கும் முன் ஒன்றிற்கு பல முறை யோசித்துக் கொள்வது நல்லது. இந்த சிஎன்ஜி கார்கள் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக இருக்கலாம். ஆனால், அவற்றின் பூட் பகுதியிலேயே சிஎன்ஜி-யைச் சேமிக்கும் உருளை நிறுவப்படுகின்றன. பூட் ஸ்பேஸின் பெரும்பகுதி அந்த சிலிண்டருக்கே போதுமானதாக இருக்கும். ஆகையால், சிஎன்ஜி வாகனங்களில் பூட் ஸ்பேஸை எதிர்பார்ப்பது முற்றிலும் வேஸ்ட் ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Best five boot space hatchback cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X