கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!

இந்தியாவில் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-Road SUV) ரக கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் சிறப்பான ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!

இந்தியாவில் முன்பெல்லாம் சிறிய ஹேட்ச்பேக் ரக கார்கள் மற்றும் செடான் ரக கார்களுக்கு அதிக மவுசு இருந்து வந்தது. ஆனால் தற்போது எஸ்யூவி ரக கார்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. எஸ்யூவி செக்மெண்ட்டின் உட்பிரிவுகளான சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி என அனைத்து பிரிவுகளை சேர்ந்த கார்களுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!

இதற்கு ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்களும் விதிவிலக்கு அல்ல. கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்ள விரும்பும் கார் ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்களுக்கான தேவையும் உயர்ந்து வருகிறது. இந்த செய்தியில், இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள் பற்றிய தகவல்களை உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!

மஹிந்திரா தார் (Mahindra Thar)

இந்திய சந்தையில் தற்போது கிடைக்க கூடிய மிகச்சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்களின் பட்டியலில் புதிய மஹிந்திரா தாருக்கு மிக முக்கியமான இடம் உள்ளது. குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2 இன்ஜின் தேர்வுகளில் வழங்கப்படுகின்றன. இதில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 130 பிஹெச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மறுபக்கம் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஹெச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக உள்ளது.

கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!

மஹிந்திரா தார் எஸ்யூவியில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் ஆஃப்-ரோடு திறன்களுக்கு உதவும் வகையில், ஷிஃப்ட்-ஆன்-ஃப்ளை 4-வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு மிகவும் உற்சாகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.

கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!

ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha)

புத்தம் புதிய ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி காரில், 2.6 லிட்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 91 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் தற்போது பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!

ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவியில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. அத்துடன் மென்மையான கியர் ஷிஃப்ட்களுக்காக 'ஹைட்ராலிக் ஆக்டிவேட்டட் க்ளட்ச் பூஸ்டர்' அம்சமும் இடம்பெற்றுள்ளது. மேலும் வலிமையான 4-வீல் டிரைவ் சிஸ்டத்தையும், ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி பெற்றுள்ளது. எனவே இந்த பட்டியலில் ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவிக்கு முக்கியமான இடம் உண்டு.

கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் (Jeep Compass Trailhawk)

வியக்க வைக்கும் ஆஃப்-ரோடு திறன்களை கொண்ட எஸ்யூவிக்களில் ஒன்றாக ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் திகழ்கிறது. இதுதவிர சொகுசான கேபினையும் இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. இந்த எஸ்யூவியில் வழங்கப்பட்டுள்ள வசதிகளின் பட்டியலையும் அடுக்கி கொண்டே போகலாம். ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியில் சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!

இது 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 167.72 பிஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இன்ஜின் சக்தியானது, 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலமாக, காரின் நான்கு சக்கரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆஃப்-ரோடு திறன்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அம்சங்களை இந்த எஸ்யூவி பெற்றுள்ளது.

கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!

இதில், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு நட்பான 17 இன்ச் அலாய் வீல்கள் முக்கியமானவை. இதுதவிர 'ராக் மோடு' (Rock Mode), சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் போன்ற அம்சங்களையும் குறிப்பிடலாம். இந்தியாவில் கிடைக்க கூடிய சற்று விலை உயர்ந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்களில் ஒன்றாக ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் திகழ்கிறது.

Most Read Articles
English summary
Best off road suv s you can buy in india mahindra thar force gurkha jeep compass trailhawk
Story first published: Wednesday, May 18, 2022, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X