"ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமாக 10 சிறப்பு பதிப்பு கார்களை கொண்டு வர போகிறோம்"... அதிரடி காமிக்க தயாராகும் BMW!

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்தியாவில் இந்தாண்டிற்குள் பத்து சிறப்பு பதிப்பு கார்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஜெர்மனை மையமாகக் கொண்டு இயங்கும் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூவே இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம் மற்றும் எம் ஸ்போர்ட் வேரியண்டுகளிலேயே 10 சிறப்பு பதிப்புகளையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அனைத்தையும் இந்த ஆண்டிற்குள்ளாகவே விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் எம் பிரிவை அறிமுகம் செய்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வரலாற்று நிகழ்வை சிறப்பிக்கும் விதமாகவே எம் மற்றும் எம் ஸ்போர்ட் வேரியண்டுகளில் சிறப்பு பதிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

எம் என்பது மோட்டார்ஸ்போர்ட் என்பதை குறிக்கும் சொல்லாகும். இந்த பிரிவை 1972 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி அன்றே பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த பிரிவில் தயாரிக்கப்படும் கார் மாடல்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதன் விளைவாகவே 50 ஆண்டுகளைத் தாண்டியும் தற்போதும் இந்த பிரிவு துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இதனைக் கொண்டாடும் விதமாகவே 50 ஆம் ஆண்டு விழாவை மிக பெரிய அளவில் சிறப்பிக்க அது திட்டமிட்டுள்ளது. தற்போது விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் அனைத்து சிறப்பு பதிப்புகளும் இந்த ஆண்டிற்குள்ளாகவே இந்தியாவை வந்தடைய இருக்கின்றன.

ஆகையால், இதன் வருகையை எதிர்நோக்கி பிஎம்டபிள்யூ சொகுசு கார் பிரியர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கியிருக்கின்றனர். எம் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்கள் ரேஸ் கார்களுக்கு இணையானவை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் இந்த வகை கார்களுக்கு ரேஸ் கார் பிரியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே பத்து சிறப்பு பதிப்பு எம் மற்றும் எம் ஸ்போர்ட் கார்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது. இவற்றில் சிலவற்றை நாட்டிலேயே வைத்துக் கட்டமைக்க இருப்பதாகவும், சிலவற்றை சிபியூ வாயிலாகவும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பு பதிப்பு எம் மற்றும் எம் ஸ்போர்ட் வாகனங்கள் கிளாசிக் பெயிண்ட் பூச்சு மற்றும் கண்கவர் அழகு சாதனங்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. எம் பிரிவின் ஐம்பதாண்டுகள் வரலாற்றில் இல்லாத வகையில் இக்காரில் அடிக்கப்படும் வண்ண பூச்சுகள் இருக்கும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், இந்த ஐம்பதாண்டு கால வரலாற்றை நினைவுப்படுத்தும் வகையில் அவை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1972ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட லோகோவும் இந்த கார்களில் இடம் பெற இருக்கின்றன. இந்த மாதிரியான அம்சங்களால் சிறப்பு பதிப்பு வாகனங்கள் வேற லெவல் கவர்ச்சியானதாக இருக்கும் என்பதை இப்போதே நம்மால் யூகிக்க முடிகின்றது.

மேலும், நடப்பாண்டை சிறப்பிக்கும் விதமாக எம் மற்றும் எம் ஸ்போர்ட் சிறப்பு பதிப்புகளை ஒன்றன் ஒன்றாக வரிசையாக நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த வாகனங்கள் அதிக கவர்ச்சியானதாக மட்டுமின்றி அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியதாகவும் இருக்கும். அதாவது அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Bmw confirms ten special edition m and m sport sars variants for india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X