2021ம் ஆண்டை புகழ்ந்து தள்ளும் பிஎம்டபிள்யூ... பத்து ஆண்டுல இல்லாத விற்பனை போன வருஷத்துல கிடைச்சிருக்காம்!

பிஎம்டபிள்யூ நிறுவனம் 2020ம் ஆண்டைக் காட்டிலும் 2021-இல் மிக அதிக விற்பனையை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2021ம் ஆண்டை புகழ்ந்து தள்ளும் பிஎம்டபிள்யூ... பத்து ஆண்டுல இல்லாத விற்பனை போன வருஷத்துல கிடைச்சிருக்காம்!

கடந்த பத்து ஆண்டுகளிலேயே போன வருஷம்தான் மிக சிறப்பான ஆண்டாக அமைந்திருப்பதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அதாவது, கடந்த ஆண்டுகளிலேயே போன வருஷம்தான் நிறுவனத்தின் தயாரிப்புகள் மிக அதிகளவில் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

2021ம் ஆண்டை புகழ்ந்து தள்ளும் பிஎம்டபிள்யூ... பத்து ஆண்டுல இல்லாத விற்பனை போன வருஷத்துல கிடைச்சிருக்காம்!

இந்தியாவில் கடந்த காலங்களில் சொகுசு மற்றும் விலை உயர்ந்த வாகனங்களுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்காத நிலையே தென்பட்டது. ஆனால், இந்த நிலை தற்போது அப்படியே மாறிவிட்டது. இந்தியர்கள் மத்தியில் ஆடம்பர மற்றும் அதி-நவீன கார்களுக்கு மிக அதிகளவில் டிமாண்ட் நிலவி வருகின்றது.

2021ம் ஆண்டை புகழ்ந்து தள்ளும் பிஎம்டபிள்யூ... பத்து ஆண்டுல இல்லாத விற்பனை போன வருஷத்துல கிடைச்சிருக்காம்!

இதன் விளைவாகவே விலையுயர்ந்த சொகுசு கார்களை தயாரித்து வரும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகள் மிக அதிகளவில் கடந்த வருடத்தில் விற்பனையாகி இருக்கின்றது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2021ம் ஆண்டில் 8,876 யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது.

2021ம் ஆண்டை புகழ்ந்து தள்ளும் பிஎம்டபிள்யூ... பத்து ஆண்டுல இல்லாத விற்பனை போன வருஷத்துல கிடைச்சிருக்காம்!

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான விற்பனை எண்ணிக்கை இதுவாகும். இதேபோல், நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன. 5,191 யூனிட் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

2021ம் ஆண்டை புகழ்ந்து தள்ளும் பிஎம்டபிள்யூ... பத்து ஆண்டுல இல்லாத விற்பனை போன வருஷத்துல கிடைச்சிருக்காம்!

பிஎம்டபிள்யூ, மினி மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் ஆகிய பிராண்டுகளில் ஆடம்பர ரக வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதில், பிஎம்டபிள்யூ பிராண்டின்கீழ் 8,236 யூனிட் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. மினி பிராண்டின்கீழ் 640 யூனிட் சொகுசு கார்களும் விற்பனையாகி இருக்கின்றன.

2021ம் ஆண்டை புகழ்ந்து தள்ளும் பிஎம்டபிள்யூ... பத்து ஆண்டுல இல்லாத விற்பனை போன வருஷத்துல கிடைச்சிருக்காம்!

இது மிக பெரிய விற்பனை வளர்ச்சி ஆகும். பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் உற்பத்தி பணிகளை 40 சதவீதம் வரை உள்ளூர் மயமாக்கி இருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை கணிசமாக குறைந்தது. நிறுவனம் பிஎம்டபிள்யூ எக்ஸ்1, எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 ஆகிய கார் மாடல்களின் விலையைக் கணிசமாக குறைந்திருக்கின்றது.

2021ம் ஆண்டை புகழ்ந்து தள்ளும் பிஎம்டபிள்யூ... பத்து ஆண்டுல இல்லாத விற்பனை போன வருஷத்துல கிடைச்சிருக்காம்!

நிறுவனத்தின் எம் 340ஐ எக்ஸ்டிரைவ், எக்ஸ்7 மற்றும் 3 சீரிஸ் கிரான் லிமோசைன் ரக வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இவற்றின் வாயிலாகவே பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய புதிய விற்பனை மைல் கல்லை எட்டியிருக்கின்றது.

2021ம் ஆண்டை புகழ்ந்து தள்ளும் பிஎம்டபிள்யூ... பத்து ஆண்டுல இல்லாத விற்பனை போன வருஷத்துல கிடைச்சிருக்காம்!

குறிப்பாக நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் 5 சீரிஸ் மாடலில் கொண்டு வரப்பட்ட சிறப்பு பதிப்பு வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்பு இந்தியாவில் கிடைத்திருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்புகள் இந்தியாவில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021ம் ஆண்டை புகழ்ந்து தள்ளும் பிஎம்டபிள்யூ... பத்து ஆண்டுல இல்லாத விற்பனை போன வருஷத்துல கிடைச்சிருக்காம்!

பிஎம்டபிள்யூ பிராண்டைப் போலவே மினி பிராண்டும் 25 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றிருக்கின்றது. 2020ம் ஆண்டைக் காட்டிலும் 2021 இல் மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. நிறுவனத்தின் கன்ட்ரிமேன் மாடலுக்கு நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது.

2021ம் ஆண்டை புகழ்ந்து தள்ளும் பிஎம்டபிள்யூ... பத்து ஆண்டுல இல்லாத விற்பனை போன வருஷத்துல கிடைச்சிருக்காம்!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் 2020ம் ஆண்டைக் காட்டிலும் 2021ம் ஆண்டில் 102.5 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய இருசக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்பு நாட்டில் கிடைத்திருக்கின்றது. ஒட்டுமொத்த விற்பனையில் 90 சதவீத பங்கினை இவையே பெற்றிருக்கின்றன.

2021ம் ஆண்டை புகழ்ந்து தள்ளும் பிஎம்டபிள்யூ... பத்து ஆண்டுல இல்லாத விற்பனை போன வருஷத்துல கிடைச்சிருக்காம்!

நிறுவனத்தின் மற்ற புகழ்மிக்க மாடல்களாக எஸ் 1000 ஆர்ஆர், ஆர்1250 ஜிஎஸ்/ ஜிஎஸ்ஏ, எஃப் 900 ஆர்/எக்ஸ்ஆர், சி 400 ஜிடி ஸ்கூட்டர் மற்றும் ஆர் 18 ஆகிய மாடல்களுக்கும் நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. சுலப தவணை மற்றும் கடன் திட்டங்கள் உள்ளிட்டவையே மோட்டார்சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க காரணமாக இருக்கின்றது.

Most Read Articles
English summary
Bmw group india gets highest sale growth in 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X