பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசன் கார்!! ஸ்டைல் எல்லாம் ஓகே... விலை தான் எங்கயோ இருக்கு!

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசன் (5 Series 50 M Jahre Edition) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசன் கார்!! ஸ்டைல் எல்லாம் ஓகே... விலை தான் எங்கயோ இருக்கு!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் பிரிவானது ஸ்டைலிஷான தோற்றத்திலான, செயல்திறன்மிக்க கார்களை கொண்டதாக உள்ளது. இத்தகைய எம் பிரிவு துவங்கப்பட்டு 50 வருடங்கள் நிறைவடைந்ததை பிஎம்டபிள்யூ நிறுவனம் ஸ்பெஷல் எடிசன் கார்களின் மூலம் கொண்டாடி வருகிறது. இதன்படி எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் மற்றும் 6 சீரிஸ் ஜிடி கார்களின் 50 எம் ஜாஹ்ரே எடிசன்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசன் கார்!! ஸ்டைல் எல்லாம் ஓகே... விலை தான் எங்கயோ இருக்கு!

அவற்றை தொடர்ந்து தற்போது 5 சீரிஸ் லக்சரி செடான் காரின் 50 எம் ஜாஹ்ரே எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.67.50 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் காரை பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம்.

பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசன் கார்!! ஸ்டைல் எல்லாம் ஓகே... விலை தான் எங்கயோ இருக்கு!

வெளிப்புற தோற்றம்

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலின் விலைமிக்க வேரியண்ட்டாக விளங்கும் 530ஐ எம் ஸ்போர்ட்-இன் அடிப்படையில் இந்த புதிய 50 எம் ஜாஹ்ரே எடிசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லோகோக்கள் இந்த காரில் முன்பக்கத்தில், பின்பக்கத்தில் மற்றும் சக்கரங்களின் மையத்தில் வழங்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசன் கார்!! ஸ்டைல் எல்லாம் ஓகே... விலை தான் எங்கயோ இருக்கு!

இவை மட்டுமின்றி, காரின் கதவுகளை திறக்கும்போதும் வரவேற்பு ஒளியாக ‘எம் பிராண்டின் 50 வருடம்' என்ற முத்திரையை காண முடியும். அதேநேரம், இந்த ஸ்பெஷல் எடிசனில், 5 சீரிஸ் செடான் காரின் ‘கிட்னி' வடிவிலான க்ரில், முன் பம்பர், ஜன்னல் ஃப்ரேம்கள், பின்புறத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் மற்றும் எக்ஸாஸ்ட் குழாய் முனைகள் உள்ளிட்டவை பளபளக்கும் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசன் கார்!! ஸ்டைல் எல்லாம் ஓகே... விலை தான் எங்கயோ இருக்கு!

அத்துடன், காரின் 18 அங்குல எம் அலாய் சக்கரங்கள் ஜெட் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டிருக்க, இவற்றில் பிரத்யேக எம் பிரேக் காலிபர்கள் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன், கிட்டத்தட்ட 650 மீட்டருக்கு ஒளி பிரகாசத்தை வழங்கக்கூடிய லேசர் ஹெட்லைட்களை இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் பிஎம்டபிள்யூ நிறுவனம் பொருத்தியுள்ளது.

பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசன் கார்!! ஸ்டைல் எல்லாம் ஓகே... விலை தான் எங்கயோ இருக்கு!

மேலும், மற்ற வாகனங்களின் அதிக ஒளியினால் ஏற்படும் கண்க்கூச்சத்தை தவிர்க்கும் அம்சத்தையும் புதிய 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசனில் தயாரிப்பு நிறுவனம் சேர்த்துள்ளது. 5 சீரிஸ் செடான் மாடலின் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் காரை கார்பன் கருப்பு, பைடோனிக் நீலம், அல்பைன் வெள்ளை மற்றும் பெர்னினா க்ரே ஆம்பர் எஃபெக்ட் என மொத்தம் 4 விதமான மெட்டாலிக் பெயிண்ட் தேர்வுகளில் வாங்கலாம்.

பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசன் கார்!! ஸ்டைல் எல்லாம் ஓகே... விலை தான் எங்கயோ இருக்கு!

உட்புற அம்சங்கள்

இந்த காரின் உட்புற கேபின் காக்னாக் என்ற பிரத்யேக அடர் இளஞ்சிவப்பு நிறத்திலும், இதற்கேற்ப இருக்கை உள்ளிட்டவற்றில் தையல்கள் பளிச்சிடும் நிறத்திலும் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. வெளிப்பக்கத்தை காட்டிலும் உட்புறத்தில், எம் பிரிவு கார் என்பதை வெளிக்காட்டும் முத்திரைகள் அதிகளவில் உள்ளன. இவ்வளவு ஏன், சீட் பெல்ட்களில் கூட எம் பிரிவு லோகோ உள்ளது.

பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசன் கார்!! ஸ்டைல் எல்லாம் ஓகே... விலை தான் எங்கயோ இருக்கு!

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், 12.3-இன்ச் ஓட்டுனர் திரை, டேஸ்போர்டிற்கு மத்தியில் 12.3-இன்ச்சில் தகவல் திரை, 16 ஸ்பீக்கர்கள், 464-வாட் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், முன் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் மற்றும் 4-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் என 530ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழக்கமாக வழங்கும் அம்சங்கள் அனைத்தும் இந்த ஸ்பெஷல் எடிசனிலும் உள்ளன.

பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசன் கார்!! ஸ்டைல் எல்லாம் ஓகே... விலை தான் எங்கயோ இருக்கு!

என்ஜின்

புதிய 5 சீரிஸ் 50 எம் ஜாஹ்ரே எடிசனில் 1,998சிசி, இன்லைன்-4 சிலிண்டர், இரட்டை-டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின், 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அமைப்பின் மூலம் அதிகப்பட்சமாக 248 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். இந்த காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடலாமாம்.

Most Read Articles
English summary
Bmw launched 5 series 50 jahre edition in india find here price and features details
Story first published: Thursday, July 21, 2022, 16:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X