பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே 50 ஜாஹ்ரே எம் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1.53 கோடி

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அதன் எம்4 காம்பெடிஷன் கூபே காரில் புதியதாக 50 ஜாஹ்ரே எம் எடிசனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து இனி பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே 50 ஜாஹ்ரே எம் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1.53 கோடி

பிஎம்டபிள்யூவின் எம் பிரிவு கார்கள் செயல்திறன்மிக்கவைகளாக விளங்குகின்றன. ஆரம்பத்தில் ஸ்டாண்டர்ட் கார்களையே பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்துவந்தது. அதன்பின்பே என்ஜின், சஸ்பென்ஷன், பிரேக் உள்ளிட்டவற்றில் செயல்படுதிறன்மிக்க எம் பிரிவு கார்கள் தயாரிக்கப்பட ஆரம்பித்தன.

பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே 50 ஜாஹ்ரே எம் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1.53 கோடி

பொதுவாக எம் பிரிவு கார்கள் தங்களது பெயரில் ‘எம்' எழுத்தை கொண்டவைகளாக உள்ளன. இத்தகைய எம் பிரிவு துவங்கப்பட்டு 50 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பிஎம்டபிள்யூ நிறுவனம் 50 ஜாஹ்ரே எம் எடிசன் கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்படி கடந்த மாதங்களில் பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ், 6 சீரிஸ் ஜிடி மற்றும் 5 சீரிஸ் கார்களில் 50 ஜாஹ்ரே எம் எடிசன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே 50 ஜாஹ்ரே எம் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1.53 கோடி

அவற்றை தொடர்ந்து தற்போது எம்4 காம்பெடிஷன் கூபே காரில் 50 ஜாஹ்ரே எம் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.1,52,90,000 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எம்4 காம்பெடிஷன் கூபே கார் உலகளவிலேயே மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே 50 ஜாஹ்ரே எம் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1.53 கோடி

பிஎம்டபிள்யூவின் புதிய 50 ஜாஹ்ரே எம் எடிசன் கார்கள் அவற்றின் ஸ்டாண்டர்ட் மாடல்களை காட்டிலும் பிரத்யேகமான பெயிண்ட் உடன் ஸ்டைலிஷான தோற்றத்தை பெற்றுள்ளன. இந்த பாணி ஆனது எம்4 காம்பெடிஷன் கூபே 50 ஜாஹ்ரே எம் எடிசனிலும் தொடரப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் பிஎம்டபிள்யூ பிராண்டிற்கு உண்டான ‘கிட்னி' வடிவ க்ரில்லில் ‘எம்' லோகோ பொருத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே 50 ஜாஹ்ரே எம் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1.53 கோடி

இவற்றிற்கு மேல், பிஎம்டபிள்யூ பிராண்டின் லோகோ சற்று வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது. ‘எம்' லோகோக்களை காரின் பின்பக்கம் மற்றும் சக்கரங்களின் மையத்திலும் காண முடிகிறது. சக்கர வளைவு கவர்ந்திழுக்கக்கூடியதாக நன்கு மேடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தகவமைத்து கொள்ளக்கூடிய முன்பக்க எல்இடி ஹெட்லைட்கள் பிஎம்டபிள்யூவின் லேசர் விளக்குடன் வழங்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே 50 ஜாஹ்ரே எம் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1.53 கோடி

காரின் உடலமைப்பிற்கு ஏற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் அதி பளபளப்பான கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இந்த கண்ணாடிகள் மட்டுமின்றி, மேற்கூரையில் ஃபின்கள், பின்பக்கத்தில் ஸ்பாய்லர் மற்றும் எக்ஸாஸ்ட் குழாய்களும் காரின் காற்றியக்கவியல் பண்பிற்கு இணக்கமானவைகளாக வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே 50 ஜாஹ்ரே எம் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1.53 கோடி

உட்புற கேபினில் டேஸ்போர்டு எந்தவொரு குறையும் கூற முடியாத அளவிற்கு மிகவும் சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுனரின் கவனம் எந்த இடத்திலும் சிதறாது என்பது உறுதி. ‘50 ஜாஹ்ரே எம் எடிசன்' லோகோவை காரின் உட்புற கதவு பேனல்கள், மைய கன்சோல் மற்றும் இருக்கைகளின் தலையணைகளில் காண முடிகிறது.

பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே 50 ஜாஹ்ரே எம் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1.53 கோடி

இவற்றுடன் எம்4 காம்பெடிஷன் கூபே காரில் வழங்கப்படும் பிரத்யேகமான எம் பிராண்ட் வசதிகள் அனைத்தும் இந்த ஸ்பெஷல் எடிசனிலும் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புற மேற்கூரை ஆனது உயர் தரத்திலான வலுவூட்டப்பட்ட கார்பன் ஃபைபர் பாலிமரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் மைய ஈர்ப்பு விசை குறைந்துள்ளதால், எடை குறைந்துள்ளது மட்டுமின்றி, செயல்படுதிறன் மேம்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே 50 ஜாஹ்ரே எம் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1.53 கோடி

இயக்க ஆற்றலை வழங்க 3.0 லிட்டர் நேரடி 6-சிலிண்டர் எம் GmbH என்ஜின் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. எம் இரட்டைபவர் டர்போ தொழிற்நுட்பத்தின் லேட்டஸ்ட் வெர்சன் உடன் வழங்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 510 எச்பி மற்றும் 2,750- 5,500 ஆர்பிஎம்-இல் 650 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே 50 ஜாஹ்ரே எம் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1.53 கோடி

இது ஒவ்வொரு கியர் மாற்றத்தையும் மென்மையாக மற்றும் விரைவாக மேற்கொள்ளக்கூடியது. இவற்றின் உதவியுடன் இந்த ஸ்பெஷல் எடிசன் எம்4 காம்பெடிஷன் கூபே காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடலாம். என்ஜினின் பண்பை மாற்ற எஃபிசியண்ட், ஸ்போர்ட் & ஸ்போர்ட் ப்ளஸ் என்ற மோட்களும், சேசிஸின் பண்பை மாற்ற கம்ஃபர்ட், ஸ்போர்ட் & ஸ்போர்ட் ப்ளஸ் மோட்களும் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Bmw launched the all new m4 competition coupe 50 jahre m edition in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X