Just In
- 1 hr ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 2 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 12 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- 16 hrs ago
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
Don't Miss!
- Technology
5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் அறிமுகமாகும் சூப்பரான Samsung போன்.!
- News
'எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல'.. தேஜஸ்விக்கு பாஜக செய்த ரகசிய கால் - போட்டு உடைத்த நிதீஷ் கட்சி
- Finance
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!
- Movies
முதல் ரவுண்டில் ப்ளாக் பஸ்டர் கொடுத்த டாப் ஹீரோஸ்: இரண்டாவது ரவுண்ட்ல சக்சஸ் பண்ண முடிஞ்சுதா?
- Sports
காமன்வெல்த்-ல் அனல்பறந்த குத்தாட்டம்.. அரங்கையே ஆட வைத்த தமிழர்கள்.. சர்வதேச அளவில் பெருமை - வீடியோ!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சொன்னபடியே 2வது காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திட்டாங்க... இதுவும் மேட்-இன்-சென்னை தயாரிப்புதாங்க!
கொடுத்த வாக்குறுதியை உறுதிப்படுத்தும் வகையில் பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் இரண்டாவது சிறப்பு பதிப்பு சொகுசு காரையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), '6 சீரிஸ் 50 ஜஹ்ரே எம் எடிசன்' (6 Series 50 Jahre M Edition,) எனும் சிறப்பு பதிப்பு லக்சூரி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. நிறுவனம் எம் சீரிஸின் ஐம்பதாண்டு நிறைவைக் கொண்டாடி வருகின்றது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் 10 புதிய எம் சிறப்பு பதிப்பு வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் செயலில் தற்போது நிறுவனம் களமிறங்கியுள்ளது. ஆமாங்க, நிறுவனம் புதிய சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகத்தை சரவெடி போல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆறு நாட்களுக்கு (ஜூன் 24) முன்னர் சென்னை ஆலையில் வைத்து உற்பத்தி செய்யப்பட்ட புதிய எம்340ஐ 50 ஜஹ்ரே எம் எடிசன் காரை அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, தற்போது இதே 50 ஜஹ்ரே எம் எடிசனில் 6 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்தியிருக்கின்றது. முந்தைய புதுமுக காரின் அறிமுகம் அரங்கேறி ஒரு வாரம்கூட முழுமையாக ஆகாத நிலையில் அடுத்த தயாரிப்பை பிஎம்டபிள்யூ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.

புதிய காரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அறிமுகமாக ரூ. 72.90 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பிஎம்டபிள்யூ நிறுவனம் இக்காரையும் உள்ளூரில் வைத்தே உருவாக்கியிருக்கின்றது. அதாவது, சென்னை ஆலையில் வைத்தே 50 ஜஹ்ரே எம் எடிசன் 6 சீரிஸ் காரை உற்பத்தி செய்திருக்கின்றது.

பெட்ரோல் எஞ்ஜினில் மட்டுமே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இக்காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அதிகாரப்பூர்வ வலைதளத்தின் வாயிலாக இப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பிஎம்டபிள்யூ நிறுவனம் பன்முக நிற தேர்வில் புதிய 50 ஜஹ்ரே எம் எடிசன் 6 சீரிஸ் சொகுசு காரை விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

டன்ஸனைட் ப்ளூ மெட்டாலிக், எம் கார்பன் பிளாக், பெர்னினா கிரே ஆம்பர் எஃபக்ட் மற்றும் மினரல் ஒயிட் ஆகிய நிற தேர்வுகளிலேயே சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கும். இதுமட்டுமின்றி, இந்த காரை பிரீமியம் தர நேச்சுரல் லெதராலும் பிஎம்டபிள்யூ நிறுவனம் அலங்கரித்திருக்கின்றது. டகோடா லெதரே காரின் இருக்கைகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த சொகுசு காரில் ட்வின் பவர் டர்போ டெக்னாலஜி கொண்ட 2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினையே பயன்படுத்தியுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 258 எச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 6.5 செகண்டுகளிலேயே தொட்டிவிடும்.

இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தை 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வாயிலாகவே 6 சீரிஸ் 50 ஜஹ்ரே எம் எடிசன் வெளியேற்றும். தொடர்ந்து, காரின் ஸ்டியரிங் வீலில் பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் பிரேக்கிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகாரின் இயக்கத்தை கூடுதல் சிறப்பானதாக மாற்ற உதவும். இதுதவிர, சொகுசான பயணத்தை வழங்கும் விதமாக அடாப்டீவ் 2-ஆக்ஸில் ஏர் சஸ்பென்ஷன் செல்ஃப் லெவல்லிங் அம்சத்துடன் வழங்கப்பட்டிருக்கின்றது.

காரின் கேபினுக்குள் மிக சிறப்பான தொழில்நுட்ப வசதிகளாக 7.0 ஆபரேட்டிங் சிஸ்டம், 3டி நேவிகேஷன், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை மற்றும் 12.3 அங்குல கான்ட்ரோல் திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி,பிஎம்டபிள்யூவின் விர்சுவல் அசிஸ்டண்ட் அம்சமும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இது காரில் உள்ள பயணிகளின் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட சில சேவைகளை செய்ய உதவும். இத்துடன் கூடுதல் சிறப்பு வசதியாக ஒயர்லெஸ் சார்ஜர், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ அம்சங்களும் இச்சிறப்பு பதிப்பு காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், கம்ஃபோர்ட், கம்ஃபோர்ட் பிளஸ், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் அடாப்டீவ் ஆகிய டிரைவிங் மோட்களும் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.
-
வெளியானது அதிரடி உத்தரவு... இனி வண்டிகளை நிப்பாட்டி காசு வசூல் பண்ண முடியாது... போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க!
-
பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
-
இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!