2022 பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வெளியீடு!! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

பிரபலமான எம்8 காம்பெடிஷன் (M8 Competition) வரிசை கார்களை பிஎம்டபிள்யூ க்ரூப் உலகளவில் வெளியீடு செய்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்களை பற்றி முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வெளியீடு!! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வரிசையில் எம்8 காம்பெடிஷன் கூபே, எம்8 காம்பெடிஷன் கன்வெர்டபிள் மற்றும் எம்8 காம்பெடிஷன் க்ரான் கூபே உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை மூன்றும்தான் 2022ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்களை வெளிப்புறம் மற்றும் உட்புறங்களிலும் பெற்றுள்ளன.

2022 பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வெளியீடு!! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் மாடலின் அதி-செயல்திறன்மிக்க வெர்சன்களான இவற்றில் 2022 அப்கிரேட்களாக வெளிப்பக்கத்தில் புதிய நிறத்தேர்வுகள், உட்புற கேபினில் புதிய 12.3-இன்ச் மைய திரை, புதிய பிரத்யேக-எம் உள்ளீடுகள், பிரத்யேக-எம் பக்கெட் இருக்கைகள் உள்பட சில கூடுதல் தேர்வு வசதிகளும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.

2022 பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வெளியீடு!! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்த அப்டேட்கள் எம்8 காம்பெடிஷன் கார்கள் வரிசையை புத்துணர்ச்சியானதாக மாற்றியுள்ளது மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் அல்லாத மாடல்களின் தயாரிப்பு & விற்பனைக்கும் ஓர் முடிவுக்கட்டி உள்ளன. எம்8 காம்பெக்டிஷன் வரிசை கார்கள் பெற்றுள்ள புதிய நிறத்தேர்வுகளாவன, ஸ்கைஸ்க்ராபர் க்ரே மெட்டாலிக், ப்ரோலின் க்ரே மெட்டாலிக், ஐல் ஆஃப் மேன் க்ரீன் மெட்டாலிக், டான்ஸனைட் நீலம் 2 மெட்டாலிக் மற்றும் ஃப்ரோஜன் ப்யூர் க்ரே மெட்டாலிக் என்பவை ஆகும்.

2022 பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வெளியீடு!! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்த புதிய எம்8 காம்பெடிஷன் கார்களின் முன்பக்கத்தில் எம் ஷேடோவ்லைன் உள்ளீடுகளை கொண்ட லேசர்லைட் உடன் தகவமைத்து கொள்ளக்கூடிய எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பருத்த வடிவில், அதி-பளபளப்பான கருப்பு நிறத்தில் சட்டகத்தை கொண்ட ‘கிட்னி' வடிவ க்ரில் உள்ளிட்டவை அப்டேட்டாக வழங்கப்பட்டுள்ளன.

2022 பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வெளியீடு!! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

காரை சுற்றிலும் பொனெட், ட்ரங்க் மற்றும் சக்கர மூடிகளில் வழங்கப்படும் பிராண்டின் லோகோவில் கூட இரு விதமான தேர்வுகளை பிஎம்டபிள்யூ வழங்கியுள்ளது. உட்புறத்தில் மிக முக்கியமான மாற்றமாக புதிய பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனருக்கு சரியாக நேரெதிராக வழங்கப்படும் இந்த நேரலை காக்பிட் பகுதியில் 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் மற்றும் ஹெட்-அப் திரை உள்ளிட்டவை அடங்குகின்றன.

2022 பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வெளியீடு!! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

மைய கண்ட்ரோல் திரை ஆனது 10.25 இன்ச்சில் இருந்து 12.3 இன்ச்சிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பை காட்டிலும் வேகமாக இயங்கக்கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரையில் பிஎம்டபிள்யூ வரைப்படங்கள் உடனான நாவிகேஷன், பிஎம்டபிள்யூ இண்டெலிஜண்ட் தனிப்பயன்பாட்டு உதவி மற்றும் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவை அடங்கிய 7ஆம் தலைமுறை பிஎம்டபிள்யூ ஐட்ரைவ் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

2022 பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வெளியீடு!! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இவற்றுடன், புதிய எம்8 காம்பெடிஷன் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எம் கார்பன் இருக்கை தேர்வையும் வழங்க பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தலையணைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த பிரத்யேக அமைப்பானது பிளாஸ்டிக் மூலமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதால், இலகுவானது. எலக்ட்ரிக் மூலமாக மடக்கும் வசதி கொண்டதாக உள்ள இந்த எம் கார்பன் இருக்கைகளில் தலையணைகள் ‘எம்8' என்கிற முத்திரைகளை கொண்டுள்ளன.

2022 பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வெளியீடு!! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இதில் ஓட்டுனர் இருக்கைக்கு நினைவக செயல்பாடும் உள்ளது. ஒட்டுமொத்த கேபினும் இம்முறை மெரினோ லெதர் மற்றும் அல்காண்ட்ரா ட்ரிம் மூலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்த பிஎம்டபிள்யூ எம்8 கார்களின் உட்புற கேபினானது கருப்பு/ பழுப்பு நிறங்களில் இருந்தது. அது தற்போது கருப்பு/ ஆரஞ்ச் நிறங்களாக மாற்றப்பட்டுள்ளது. கருப்பு நிற அல்காண்ட்ரா லெதர்கள் டேஸ்போர்டு மற்றும் கதவு பேனல்களின் மேற்பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

2022 பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வெளியீடு!! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கூபே, கன்வெர்டபிள் மற்றும் க்ரான் கூபே கார்கள் மூன்றிலும் எம் இரட்டைபவர் டர்போ உடன் 4.4 லிட்டர், வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 617 பிஎச்பி மற்றும் 750 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு எம் ஸ்டெப்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

2022 பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வெளியீடு!! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இது இயக்க ஆற்றலை காரின் அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் வழங்கும். 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பிஎம்டபிள்யூ எம்8 கார்களின் டாப் ஸ்பீடு 306kmph ஆகும். பிரத்யேக எம் ஓட்டுனருக்கான தொகுப்பை பெறும் இவற்றில் எம்8 ஜிடிஇ பந்தய காரின் உள்ளீடுகளின் மூலம் பிஎம்டபிள்யூ நிறுவனம் மெருக்கேற்றியுள்ளது.

2022 பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் கார்கள் வெளியீடு!! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்த உள்ளீடுகளில் தகவமைத்து கொள்ளக்கூடிய எம் சஸ்பென்ஷன் அடங்குகிறது. இது காரின் உடற் அசைவுகள், சாலையின் தரங்கள் மற்றும் ஸ்டேரிங்கிற்கு கொடுக்கப்படும் உள்ளீடுகளை பொறுத்து மின்காந்த வால்வுகளின் உதவியுடன் ஒவ்வொரு டேம்பரை அட்ஜெஸ்ட் செய்கிறது. இந்திய சந்தையில் இந்த எம்8 காம்பெடிஷன் கார்கள் இந்தியாவில் 2022ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Bmw revealed updated 2022 m8 competition range find here all details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X