சொகுசா அமர்ந்து பயணிக்க ஆசையா! செம்ம சூப்பர் சூப்பரான அம்சங்களுடன் எக்ஸ்5 கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்!

செம்ம சூப்பரான சொகுசு வசதிகளுடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி எம் ஸ்போர்ட் (BMW X5 xDrive 30d M Sport) லக்சூரி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. சற்று கூடுதல் ஆடம்பர அம்சங்களுடன் இத்தேர்வு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சொகுசா அமர்ந்து பயணிக்க ஆசையா... செம்ம சூப்பர் சூப்பரான அம்சங்களுடன் எக்ஸ்5 சொகுசு காரில் புதிய தேர்வு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் எக்ஸ்5 (X5) மாடலில் புதிய வேரியண்ட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எக்ஸ்டிரைவ் 30டி எம் ஸ்போர்ட் (xDrive 30d M Sport) எனும் வேரியண்டையே அது விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. ஏற்கனவே பல தேர்வுகளில் எக்ஸ்5 லைன்-அப் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் புதிய தேர்விற்கான அவசியம் என்ன என்று நீங்கள் கேட்கலாம்.

சொகுசா அமர்ந்து பயணிக்க ஆசையா... செம்ம சூப்பர் சூப்பரான அம்சங்களுடன் எக்ஸ்5 சொகுசு காரில் புதிய தேர்வு அறிமுகம்!

இந்த தேர்வை சற்று கூடுதல் வசதிகள் நிரப்பப்பட்ட வாகனமாகவே பிஎம்டபிள்யூ நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. அதாவது, வாடிக்கையாளர்கள் சிலரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சற்று அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட தேர்வாக அதனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

சொகுசா அமர்ந்து பயணிக்க ஆசையா... செம்ம சூப்பர் சூப்பரான அம்சங்களுடன் எக்ஸ்5 சொகுசு காரில் புதிய தேர்வு அறிமுகம்!

குறிப்பாக, ஸ்போர்ட்-எக்ஸ் பிளஸ் வேரியண்டைக் காட்டிலும் அதிக அம்சங்கள் கொண்ட வாகனமாக இதனை பிஎம்டபிள்யூ உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இத்தேர்வில் இல்லாத பல சிறப்புகளை புதிய எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30 டி வேரியண்டில் நம்மால் காண முடியும். அந்தவகையில், மிக முக்கியமான அம்சமாக பேடில் ஷிஃப்டர் (Paddle Shifters), ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் புதிய தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றது.

சொகுசா அமர்ந்து பயணிக்க ஆசையா... செம்ம சூப்பர் சூப்பரான அம்சங்களுடன் எக்ஸ்5 சொகுசு காரில் புதிய தேர்வு அறிமுகம்!

இதுமட்டுமின்றி, கூடுதல் சிறப்பு வசதிகளாக லான்ச் கன்ட்ரோல், அடாப்டீவ் டூ ஆக்ஸில் ஏர் சஸ்பென்ஷன் (மிகுந்த சௌகரியமான பயண அனுபவத்தை வழங்க இது உதவும்), எலெக்ட்ரிக்கல்லாக கட்டுப்படுத்தக் கூடிய டெயில்கேட், பிஎம்டபிள்யூ லேசர் லைட் ஹெட்லேம்ப், கம்ஃபோர்டான இருக்கை அமைப்பு, 'எம்' ரக கார்களில் பயன்படுத்துவதைப் போன்ற லெதர் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்கள் புதிய தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றன.

சொகுசா அமர்ந்து பயணிக்க ஆசையா... செம்ம சூப்பர் சூப்பரான அம்சங்களுடன் எக்ஸ்5 சொகுசு காரில் புதிய தேர்வு அறிமுகம்!

இதுதவிர, டிராவல் மற்றும் கம்ஃபோர்ட் சிஸ்டம், பிஎம்டபிள்யூ டிஸ்பிளே கீ, ஹெட்ஸ் அப் திரை, 16 ஸ்பீக்கர்கள் அடங்கிய ஹர்மன் கர்டோன் மியூசிக் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, அனைத்து இருக்கைகளிலும் லெதர் மற்றும் 20 அங்குல எம்-ஸ்பெக் பயன்படுத்தப்படக் கூடிய அலாய் வீல்கள் உள்ளிட்டவை புதிய எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சொகுசா அமர்ந்து பயணிக்க ஆசையா... செம்ம சூப்பர் சூப்பரான அம்சங்களுடன் எக்ஸ்5 சொகுசு காரில் புதிய தேர்வு அறிமுகம்!

இதுமாதிரியான பல சூப்பரான வசதிகளைக் கொண்டதாகவே இப்புதிய பிஎம்டபிள்யூ கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. சிறப்பம்சங்கள் சற்று அதிகம் என்பதால் இந்த காரின் விலையும் சற்று அதிகமாகக் காட்சியளிக்கின்றது. ரூ. 97.90 லட்சம் சொகுசு காருக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

சொகுசா அமர்ந்து பயணிக்க ஆசையா... செம்ம சூப்பர் சூப்பரான அம்சங்களுடன் எக்ஸ்5 சொகுசு காரில் புதிய தேர்வு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30எம் ஸ்போர்ட் வேரியண்டில் சிறப்பு வசதிகளாக 'எம்' ரக வாகனத்தில் பயன்படுத்தப்படும் இன்னும் பல அம்சங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முன் பக்க அப்ரோன், சைடு ஸ்கர்ட், பாடி நிறத்திலான வீல் ஆர்ச், எஸ் ஸ்பெக் நீல பிரேக் காலிபர்கள், ரியர் டிஃப்யூசர், எம் ஸ்போர்ட் ஸ்பெக் கார் கீ, எம் ஸ்போர்ட் லோகோ ஆகியவை காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

சொகுசா அமர்ந்து பயணிக்க ஆசையா... செம்ம சூப்பர் சூப்பரான அம்சங்களுடன் எக்ஸ்5 சொகுசு காரில் புதிய தேர்வு அறிமுகம்!

இதுமட்டுமில்லைங்க சிறப்பான திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட தேர்வாகவும் இது காட்சியளிக்கின்றது. இதற்காக, 3.0 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் மோட்டாரே இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 262 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதன் இயக்கத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டிருக்கின்றது.

சொகுசா அமர்ந்து பயணிக்க ஆசையா... செம்ம சூப்பர் சூப்பரான அம்சங்களுடன் எக்ஸ்5 சொகுசு காரில் புதிய தேர்வு அறிமுகம்!

இதன் வாயிலாகவே காரின் வீல்களுக்கும் இயக்கம் கடத்தப்படுகின்றது. இக்காரின் அனைத்து வீல் இயக்கத்திற்காக எக்ஸ்டிரைவ் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் சேர்ந்தே புதிய எக்ஸ் எக்ஸ்டிரைவ் 30டி எம் ஸ்போர்ட் வேரியண்டை பிற வேரியண்டுகளைக் காட்டிலும் அதிக வசதிகள் கொண்டதாக காட்சியளிக்கச் செய்கின்றது.

Most Read Articles
English summary
Bmw x5 xdrive 30d m sport launched in india at inr 97 90 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X