காசு இருந்தாலும் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்குறது ரொம்ப கஷ்டம்!! விலை என்னமோ ரூ.1.2 கோடி தான், ஆனா...

பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய எக்ஸ்7 40ஐ எம் ஸ்போர்ட் 50 ஜாஹ்ரே எடிசன் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய பிஎம்டபிள்யூ சொகுசு காரின் விலை என்ன? என்பது உள்பட முழு விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

காசு இருந்தாலும் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்குறது ரொம்ப கஷ்டம்!! விலை என்னமோ ரூ.1.2 கோடி தான், ஆனா...

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் செயல்திறன்மிக்க கார்களை தனது எம் பிரிவின் வாயிலாக அறிமுகம் செய்து, விற்பனை செய்கிறது. நம் இந்தியாவில் கூட பிஎம்டபிள்யூவின் எம் பிரிவில் இருந்து சில கார்கள் விற்பனையில் உள்ளன. எம் பிரிவில் இருந்து வெளிவரும் செயல்படுதிறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்களின் பெயர்களில் ‘எம்' என்ற எழுத்து நிச்சயமாக இருக்கும்.

காசு இருந்தாலும் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்குறது ரொம்ப கஷ்டம்!! விலை என்னமோ ரூ.1.2 கோடி தான், ஆனா...

அதனை வைத்தே அவற்றை தனியாக அடையாளம் கண்டுக்கொள்ளலாம். இத்தகைய எம் பிரிவை பிஎம்டபிள்யூ நிறுவனம் துவங்கி இந்த 2022ஆம் ஆண்டுடன் 50 வருடங்கள் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக உலகளவில் எம் ஸ்போர்ட் 50 ஜாஹ்ரே எடிசன்களை தனது பல்வேறு மாடல்களில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

காசு இருந்தாலும் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்குறது ரொம்ப கஷ்டம்!! விலை என்னமோ ரூ.1.2 கோடி தான், ஆனா...

கடந்த வாரங்களில் கூட பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி, 5 சீரிஸ் மற்றும் எம்4 காம்பெடிஷன் கூபே கார்களில் எம் ஸ்போர்ட் 50 ஜாஹ்ரே எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டதை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக தற்போது, எக்ஸ்7 எஸ்யூவி மாடலின் 40ஐ என்ற பெட்ரோல் வேரியண்ட்டில் எம் ஸ்போர்ட் 50 ஜாஹ்ரே எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

காசு இருந்தாலும் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்குறது ரொம்ப கஷ்டம்!! விலை என்னமோ ரூ.1.2 கோடி தான், ஆனா...

ரூ.1.2 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 40ஐ எம் ஸ்போர்ட் 50 ஜாஹ்ரே எடிசனை வாங்குவது நீங்கள் நினைப்பதை காட்டிலும் மிகவும் கடினமாகும். ஏனெனில் வெறும் 10 யூனிட்கள் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிசன் காரை விற்பனை செய்ய உள்ளதாக பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது.

காசு இருந்தாலும் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்குறது ரொம்ப கஷ்டம்!! விலை என்னமோ ரூ.1.2 கோடி தான், ஆனா...

அதாவது வெறும் 10 நபர்களால் மட்டுமே பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசனை வாங்க முடியும். ஆதலால் வாங்க விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் இப்போதே பிஎம்டபிள்யூவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தின் வாயிலாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் வாயிலாகவோ புதிய எக்ஸ்7 40ஐ எம் ஸ்போர்ட் 50 ஜாஹ்ரே எம் எடிசனை முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.

காசு இருந்தாலும் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்குறது ரொம்ப கஷ்டம்!! விலை என்னமோ ரூ.1.2 கோடி தான், ஆனா...

வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வேறுப்படும் விதமாக பல்வேறு விதமான மாற்றங்களை வெளிப்பக்கத்தில் இந்த ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்7 கார் கொண்டுள்ளது. குறிப்பாக, எம் பிரிவு 50 வருடங்கள் நிறைவு செய்ததை குறிக்கும் லோகோக்கள் காரின் வெளிப்புறத்தை சுற்றிலும் இடம்பெற்றுள்ளன.

காசு இருந்தாலும் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்குறது ரொம்ப கஷ்டம்!! விலை என்னமோ ரூ.1.2 கோடி தான், ஆனா...

இந்த லிமிடெட் எடிசன் காரிலும் முன்பக்கத்தில் பளபளப்பான கருப்பு நிறத்தில் அளவில் பெரியதாக ‘கிட்னி' வடிவ க்ரில், நீல நிற X-வடிவ பாகங்களுடன் லேசர் ஹெட்லைட்கள், நேர்த்தியான மேற்கூரை, பின்பக்கத்தில் மெல்லியதான டெயில்லேம்ப்கள் மற்றும் இரண்டாக பிரிக்கப்பட்டதாக பின்கதவுகள் உள்ளிட்டவை தொடரப்பட்டுள்ளன.

காசு இருந்தாலும் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்குறது ரொம்ப கஷ்டம்!! விலை என்னமோ ரூ.1.2 கோடி தான், ஆனா...

அதேபோல் உட்புறத்திலும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட், 3டி நாவிகேஷன், பின் இருக்கை பயணிகளுக்கு 10.2 இன்ச்சில் இரு முழு-எச்டி பொழுதுப்போக்கு திரைகள், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

காசு இருந்தாலும் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்குறது ரொம்ப கஷ்டம்!! விலை என்னமோ ரூ.1.2 கோடி தான், ஆனா...

மேலும், இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய எக்ஸ்7 40ஐ எம் ஸ்போர்ட் 50 ஜாஹ்ரே எம் எடிசன் காரிலும் வழக்கமான 3.0 லிட்டர், இரட்டை-டர்போசார்ஜ்டு, 6-சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 340 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

காசு இருந்தாலும் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்குறது ரொம்ப கஷ்டம்!! விலை என்னமோ ரூ.1.2 கோடி தான், ஆனா...

இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் அனுப்புகிறது. இவற்றின் உதவியுடன் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய எக்ஸ்7 40ஐ எம் ஸ்போர்ட் 50 ஜாஹ்ரே எம் எடிசன் எஸ்யூவி காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 250கிமீ ஆகும்.

NOTE: First two images onlyare BMW X7 40i M Sport ‘50 Jahre M Edition'

Most Read Articles
English summary
Bmw x7 40i 50 jahre edition launched in india engine features details
Story first published: Thursday, August 25, 2022, 19:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X