ரொம்பவும் சிம்பிளான காரில் வலம் வரும் நடிகை... இப்படியும் ஒரு நடிகையா?.. ஆச்சரியத்தில் திகைத்துபோன ரசிகர்கள்!

பிரபல நடிகை ஒருவர் மிகவும் சிம்பிளான காரில் வலம் வந்துக் கொண்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரொம்பவும் சிம்பிளான காரில் வலம் வரும் நடிகை... இப்படியும் ஒரு நடிகையா?.. ஆச்சரியத்தில் திகைத்துபோன ரசிகர்கள்!

திரை பிரபலங்கள் என்றாலே நம் நினைவிற்கு வருவது அவர்களின் ஆடம்பர வாழ்க்கைதான். அதிலும், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களைப் பார்த்து பொறாமைக் கொள்ளாதவர்களே இருக்க முடியாது. அந்தளவிற்கு மிகவும் உயரிய விலைக் கொண்ட சொகுசு கார்களை திரைப் பிரபலங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ரொம்பவும் சிம்பிளான காரில் வலம் வரும் நடிகை... இப்படியும் ஒரு நடிகையா?.. ஆச்சரியத்தில் திகைத்துபோன ரசிகர்கள்!

இத்தகையோருக்கு மத்தியில் பிரபல நடிகை ஒருவர் மிகவும் வழக்கமான (பட்ஜெட் விலைக் கொண்ட) கார் ஒன்றை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை ஸ்ரதா கபூரே அந்த நடிகை ஆவார். இவர் தனது தினசரி பயணங்களுக்கு பயன்படுத்தி வரும் கார் பற்றிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது. பாலிவுட் திரையுலகின் மிகவும் ஃபேமஸான நடிகைகளில் ஒருவராக ஸ்ரதா கபூர் உள்ளார்.

ரொம்பவும் சிம்பிளான காரில் வலம் வரும் நடிகை... இப்படியும் ஒரு நடிகையா?.. ஆச்சரியத்தில் திகைத்துபோன ரசிகர்கள்!

இளம் நடிகையான இவர் தனது தினசரி பயணங்களுக்கு மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவையேப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த கார் தற்போது பிரஸ்ஸா என்கிற பெயரில் சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மிக சமீபத்திலேயே பன்முக அப்டேட்டுகளுடன் இந்த கார் இந்திய சந்தையை வந்தடைந்தது. உடை மற்றம் எந்திர மாற்றம் என எக்கசக்க மாற்றங்களுடன் அது வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ரொம்பவும் சிம்பிளான காரில் வலம் வரும் நடிகை... இப்படியும் ஒரு நடிகையா?.. ஆச்சரியத்தில் திகைத்துபோன ரசிகர்கள்!

மேலும், பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகவும் அது உள்ளது. விலையில் மட்டுமல்ல பராமரிப்பிலும் பன்மடங்கு சிக்கனத்தை வழங்குகின்ற காராக பிரெஸ்ஸா இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்தியர்களின் பிரியமான காராக அது காட்சியளிக்கின்றது.

ரொம்பவும் சிம்பிளான காரில் வலம் வரும் நடிகை... இப்படியும் ஒரு நடிகையா?.. ஆச்சரியத்தில் திகைத்துபோன ரசிகர்கள்!

இத்தகைய ஓர் காரையே நடிகை பயன்படுத்தி வருகின்றார். ஆனால், அவர் பயன்படுத்திக் கொண்டிருப்பது முதல் தலைமுறை பிரெஸ்ஸா ஆகும். இதில், ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. ஆரம்பத்தில் இந்த மோட்டாருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

ரொம்பவும் சிம்பிளான காரில் வலம் வரும் நடிகை... இப்படியும் ஒரு நடிகையா?.. ஆச்சரியத்தில் திகைத்துபோன ரசிகர்கள்!

பின்னாளில் மாருதி சுஸுகி நிறுவனம் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை வழங்கியது. ஆனால், இப்போது விற்பனையில் இருக்கும் பிரெஸ்ஸாவில் இந்த அம்சங்கள் எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை. தெளிவாகக் கூற வேண்டுமானால் தற்போது விற்பனையில் இருக்கும் புதிய பிரெஸ்ஸா காரில் கே15சி ரக பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மோட்டாருடன் சேர்த்து 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ரொம்பவும் சிம்பிளான காரில் வலம் வரும் நடிகை... இப்படியும் ஒரு நடிகையா?.. ஆச்சரியத்தில் திகைத்துபோன ரசிகர்கள்!

இந்த மோட்டாருக்கு முன்னதாக பிரெஸ்ஸாவில் 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பையர்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டது. புதிய பிஎஸ் 6 மாசு உமிழ்வு தரம் அறிமுகத்தின் காரணமாக 1.3 லிட்டர் டீசல் மோட்டார் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, முற்றிலுமாக டீசல் கார்களின் விற்பனையை மாருதி நிறுத்தியது.

ரொம்பவும் சிம்பிளான காரில் வலம் வரும் நடிகை... இப்படியும் ஒரு நடிகையா?.. ஆச்சரியத்தில் திகைத்துபோன ரசிகர்கள்!

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தே 1.5 லிட்டர் மோட்டார் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முந்தைய 1.3 மோட்டாருக்கு கிடைத்ததைப் போலவே இதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது. இம்மோட்டார் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 137 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் இக்காருடன் வழங்கப்படுகின்றன.

ரொம்பவும் சிம்பிளான காரில் வலம் வரும் நடிகை... இப்படியும் ஒரு நடிகையா?.. ஆச்சரியத்தில் திகைத்துபோன ரசிகர்கள்!

இந்த நிலையிலேயே புதிய பிரெஸ்ஸாவை கே15சி மோட்டாருடன் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது, மாருதி. இதுமட்டுமின்றி எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாகவும் பிரெஸ்ஸாவை மாருதி விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார் இணைப்பு அம்சம், க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப்-திரை, தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் நவீன கால அம்சங்கள் பல இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ரொம்பவும் சிம்பிளான காரில் வலம் வரும் நடிகை... இப்படியும் ஒரு நடிகையா?.. ஆச்சரியத்தில் திகைத்துபோன ரசிகர்கள்!

இதுமாதிரியான அம்சங்களால் மக்கள் மத்தியில் மிகவும் அறியப்படும் காராக பிரெஸ்ஸா மாறியிருக்கின்றது. மேலும், இதன் பட்ஜெட் விலை இன்னும் அக்காரை ஃபேமஸானதாக மாற்றியிருக்கின்றது. புதிய பிரெஸ்ஸா ரூ. 7.99 லட்சம் தொடக்க விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உச்ச விலை ரூ. 13.96 லட்சம் ஆகும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ரொம்பவும் சிம்பிளான காரில் வலம் வரும் நடிகை... இப்படியும் ஒரு நடிகையா?.. ஆச்சரியத்தில் திகைத்துபோன ரசிகர்கள்!

ஸ்ரதா கபூர் இந்த காரை வைத்திருப்பதனால் அவர் மிகுந்த ஏழ்மையானவர் அல்லது அவரிடத்தில் மிகக் குறைவான கார்களே இருக்கின்ற கற்பனைக்கு எல்லாம் போய்விட வேண்டும். ஏனெனில், இவரிடத்திலும் பிற நடிகர்களிடத்தில் காணப்படுவதைப் போலவே விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் சில உள்ளன. அந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, ஆடி க்யூ7 மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் லக்சுரி செடான் உள்ளிட்டவை பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றுடனேயே பிரெஸ்ஸா போன்ற சில பட்ஜெட் கார்களும் ஸ்ரதாவிடத்தில் பயன்பாட்டில் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood actress shraddha kapoor roaming with maruti suzuki vitara brezza
Story first published: Friday, September 23, 2022, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X