தங்கத்தால காரை உருவாக்க போறாங்களா! எத்தன மாசத்துல உருவாக்க போறாங்க தெரியுமா?

24 கேரட் ரோஸ் கோல்ட் தங்கத்தால் பிரபல நிறுவனம் அதன் முக்கியமான ஓர் கார் மாடலை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

தங்கத்தால காரை உருவாக்க போறாங்களா! எத்தன மாசத்துல உருவாக்க போறாங்க தெரியுமா?

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான புகாட்டி (Bugatti), அதன் பிரபல கார் மாடல் ஒன்றை 24 கேரட் ரோஸ் கோல்டு எனப்படும் விலையுயர்ந்த தங்கத்தால் கட்டமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏற்கனவே, இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் பல மடங்கு அதிக விலைக் கொண்டவையாக இருக்கின்றன.

தங்கத்தால காரை உருவாக்க போறாங்களா! எத்தன மாசத்துல உருவாக்க போறாங்க தெரியுமா?

இந்த நிலையில் அதன் மதிப்பை இன்னும் பல மடங்கு உயர்த்துகின்ற வகையில் 24 கேரட் ரோஸ் கோல்டால் தனது முக்கியமான ஓர் கார் மாடலை உருவாக்க இருக்கின்றது. லா வோயர் நோய்ரே (La Voiture Noire) எனும் கார் மாடலையே நிறுவனம் தங்கத்தால் அலங்கரிக்க திட்டமிட்டுள்ளது.

தங்கத்தால காரை உருவாக்க போறாங்களா! எத்தன மாசத்துல உருவாக்க போறாங்க தெரியுமா?

இதன் உருவாக்க பணிக்காக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல ஆபரண நிறுவனமான ஆஸ்பிரீ (Asprey) உடன் புகாட்டி இணைந்திருக்கின்றன. இணைவைத் தொடர்ந்து இரு நிறுவனங்களும் தங்கக் காரை உருவாக்கும் பணியைத் துரிதப்படுத்தியிருக்கின்றன.

தங்கத்தால காரை உருவாக்க போறாங்களா! எத்தன மாசத்துல உருவாக்க போறாங்க தெரியுமா?

இந்நிலையில், இக்காரை முழுமையாக உருவாக்க நான்கு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என ஆஸ்பிரீ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புகாட்டி நிறுவனம் விரைவில் தங்கத்தால் உருவாக்கப்பட உள்ள லா வோயர் நோய்ரே காரின் மாதிரி படங்களை வெளியிட்டிருக்கின்றது.

தங்கத்தால காரை உருவாக்க போறாங்களா! எத்தன மாசத்துல உருவாக்க போறாங்க தெரியுமா?

என்எஃப்டி தொழில்நுட்பத்தின் வாயிலாக இக்காரை உருவாக்க புகாட்டி திட்டமிட்டிருக்கின்றது. தொடர்ந்து, மிக சிறந்த மற்றும் எக்ஸ்க்ளூசிவ் தயாரிப்பாகவும் அதன் வருகை அமையும் எனவும் அது கூறியிருக்கின்றது. இக்காரில் தங்கம் மட்டுமின்றி 261 சிறிய மற்றும் மிகவும் பிரத்யேகமான ஸ்டெர்லிங் வெள்ளி பொருட்களை தாங்கள் பயன்படுத்த போவதாகவும் புகாட்டி கூறியிருக்கின்றது.

தங்கத்தால காரை உருவாக்க போறாங்களா! எத்தன மாசத்துல உருவாக்க போறாங்க தெரியுமா?

ஆகையால், மிக மிக சிறப்பான காராக புகாட்டி லா வோயர் நோய்ரே உருவாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அதேவேலையில், இக்காரை நிறுவனம் தங்க சிற்பம் என்றும் அழைக்கத் தொடங்கியிருக்கின்றது. புகாட்டி நிறுவனம் குவாட்-டர்போ 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்ஜினையே லா வோயர் நோய்ரே காரில் பயன்படுத்தி வருகின்றது.

தங்கத்தால காரை உருவாக்க போறாங்களா! எத்தன மாசத்துல உருவாக்க போறாங்க தெரியுமா?

இந்த மோட்டார் 1,500 பிஎஸ் பவரையும், 1,600 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 380 கிமீ வேகம் ஆகும். இதுபோன்று பன்முக சிறப்புகளைக் கொண்டிருக்கின்ற ஓர் காரையே புகாட்டி நிறுவனம் இன்னும் பல மடங்கு சிறப்பானதாக மாற்ற இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti la voiture noire made up with 24k rose gold here is full details
Story first published: Saturday, February 26, 2022, 19:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X