அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எந்த காருங்க அது?..

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் பிஒய்டி (BYD), இந்தியாவில் விற்பனைக்கு வழங்கும் இ6 (e6) எனும் எலெக்ட்ரிக் கார் நாட்டிலேயே அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்' (India Book of Records) -இல் இடம் பிடித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எத்தன கிமீ பயணிச்சிருக்கு தெரியுமா?

இந்தியாவில் விற்பனக்குக் கிடைக்கும் ஒரே ஒரு எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரே பிஒய்டி (BYD) நிறுவனத்தின் இ6 (e6). இந்த காரே இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ் (India Book of Records)இல் தற்போது இடம் பிடித்திருக்கின்றது. மும்பை - டூ - புதுதில்லி இடையிலான 2,203 கிமீ தூரத்தை ஆறு நாட்களில் கடந்ததன் காரணத்தினால் காரின் பெயர் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டிருக்கின்றது.

அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எத்தன கிமீ பயணிச்சிருக்கு தெரியுமா?

இதற்கு முன்னதாக இந்த மாதிரியான ஓர் சாதனையை எந்தவொரு மின்சார காரும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சாதனை பயணத்தின் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் கார் நான்கு மாநிலங்களில் உள்ள ஒன்பது முக்கிய நகரங்களைக் கடந்திருக்கின்றது. குறிப்பாக, ஈகோ-சென்சிடீவ் ஜோன்கள் என்றழைக்கப்படும் பகுதிகளையும் இந்த கார் கடந்து வந்திருக்கின்றது.

அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எத்தன கிமீ பயணிச்சிருக்கு தெரியுமா?

அதாவது, காற்றை அசுத்தப்படுத்தும் வாகனங்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியை இது கடந்திருக்கின்றது. பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் கார் துளியளவும் மாசினை வெளிப்படுத்தாது என்ற காரணத்தினால் அது பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எத்தன கிமீ பயணிச்சிருக்கு தெரியுமா?

தற்போது பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் கார் பயணித்த தூரத்தை ஓர் வழக்கமான எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனம் கடந்திருக்கும் எனில் சுமார் 413 கிலோ கார்பன் வாயுக்களை அது வெளியேறியிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. "நிலையான இந்தியாவிற்கான நிலையான இயக்கம்" என்ற பெயரிலேயே பிஒய்டி நிறுவனம் இந்த சாகச பயணத்தை மேற்கொண்டிருக்கின்றது.

அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எத்தன கிமீ பயணிச்சிருக்கு தெரியுமா?

இதுமட்டுமின்றி, மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பு செய்யும் ஒரு பகுதியாகவும் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. நாட்டில் உள்ள மக்கள் பலர் மின்சார வாகனத்தை வாங்கினால் அவற்றை எப்படி தடையில்லாமல் பயன்படுத்துவது என்ற கேள்வியை முன் வைக்கின்றனர்.

அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எத்தன கிமீ பயணிச்சிருக்கு தெரியுமா?

போதிய அளவில் சார்ஜ் மையம் இல்லாத காரணத்தினால் அவை பாதியிலேயே சார்ஜ் இல்லாமல் நிற்க நேரிடும். இந்த நிலை பெருத்த சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்கிற காரணத்தினால் பலர் மின் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். பலர் எலெக்ட்ரிக் கார் மீது அதீத விருப்பம் கொண்டிருக்கின்ற நேரத்திலும் இந்த மாதிரியான காரணத்தினாலேயே எலெக்ட்ரிக் பிளானை தள்ளிப் போட்டிருக்கின்றனர்.

அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எத்தன கிமீ பயணிச்சிருக்கு தெரியுமா?

இத்தகைய சூழ்நிலையிலேயே சார்ஜ் இல்லை என்ற பற்றாக்குறையை சந்திக்காமல் பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் கார் 2,203 கிமீ பயணித்துச் சாதனைப் படைத்திருக்கின்றது. இதன் வாயிலாக நாட்டின் முக்கிய பகுதிகளில் சார்ஜ் மையங்கள் இருக்கின்றன என்பது உறுதியாகியுள்ளது. பிஒய்டி இ6 ஓர் பிரீமியம் தர எலெக்ட்ரிக் காராகும். 2021 ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எத்தன கிமீ பயணிச்சிருக்கு தெரியுமா?

பிரத்யேகமாக வர்த்தக துறைக்காக மட்டுமே விற்பனையில் உள்ளது. ஆம், தனி நபர் பயன்பாட்டிற்காக இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியாது. 580 லிட்டர் பூட் ஸ்பேஸ், ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்கும் இருக்கை வசதிகளுடன் பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் எம்பிவி கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எத்தன கிமீ பயணிச்சிருக்கு தெரியுமா?

இந்த எலெக்ட்ரிக் எலெக்ட்ரிக் காரில் 71.7 kWh பிளேடு பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 520 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். பிளேட் பேட்டரி தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்ட முதல் எலெக்ட்ரிக் கார் இதுவே ஆகும். இந்த தொழில்நுட்பம் 2020ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எத்தன கிமீ பயணிச்சிருக்கு தெரியுமா?

இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பானது, அதிக ரேஞ்ஜை தரக் கூடியது மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டது என்ற ராட்டுக்களை உலகளவில் பெற்றிருக்கின்றது. லித்தியம் அயர்ன் பாஸ்பேட்டாலயே இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது . மேலும், ஏசி மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் என இரண்டிலும் பேட்டரி சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எத்தன கிமீ பயணிச்சிருக்கு தெரியுமா?

இதில் டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி பேட்டரியை சார்ஜ் செய்தால் 30 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 35 நிமிடங்களிலேயே ஏற்றிக் கொள்ள முடியும். இந்த சூப்பர் திறன் மட்டுமின்றி எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளும் காரில் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், 10.1 இன்ச் தொடுதிரை சிஸ்டம், ப்ளூடூத் மற்றும் வைஃபை இணைப்பு, லெதர் இருக்கைகள், டிரைவர் மற்றும் முன்பக்க பயணியின் இருக்கையை 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதிகள் பிஒய்டி இ6 காரில் வழங்கப்பட்டுள்ளன.

அதிக தூரம் பயணித்து 'இந்தியா புக் ஆஃப் தி ரெகார்ட்ஸ்'இல் இடம் பிடித்த எலெக்ட்ரிக் கார்... எத்தன கிமீ பயணிச்சிருக்கு தெரியுமா?

இந்த மாதிரியான அம்சங்களை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இது பிரீமியம் தர காராக பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி பட்டியல் போட்டால் நீண்டு செல்லும் வகையில் இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளையும் இக்கார் தாங்கியிருக்கின்றது. எனவே இந்த காரின் விலையும் சற்று அதிகமானதாக உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 29.15 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இது ஒற்றை தேர்வில் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Byd e6 e car enters india book of records for covering 2203 km distance with in 6 days
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X