நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

திடீரென 'சடன் பிரேக்' பிடித்தால், காரில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

இந்திய சாலைகளில் எப்போது என்ன நடக்கும்? என்பதை கணிக்கவே முடியாது. எனவே காரில் பயணித்து கொண்டிருப்பவர்கள் திடீர் திடீரென 'சடன் பிரேக்' பிடிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. டிரைவர்கள் 'சடன் பிரேக்' பிடிப்பதற்கு 2 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் அவர்கள்தான். இரண்டாவது காரணம் மற்றவர்கள்.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

இங்கு பெரும்பாலானவர்கள் செல்போனில் பேசி கொண்டும், உடன் பயணம் செய்பவர்களுடன் அரட்டை அடித்து கொண்டும், ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டும் கார் ஓட்டுகின்றனர். இதனால் டிரைவர்களின் கவனம் சிதறி விடுவதால், திடீரென 'சடன் பிரேக்' பிடித்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

மறுபக்கம் இந்தியாவில் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் விதிகளை பின்பற்றுவதில்லை. மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். சில சமயங்களில் அவர்கள் திடீரென காரின் குறுக்கே வந்து விடுகின்றனர். இதன் காரணமாக 'சடன் பிரேக்' பிடித்தாக வேண்டிய சூழலுக்கு டிரைவர்கள் தள்ளப்படுகின்றனர்.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

இதில் எந்த காரணத்திற்காக நீங்கள் 'சடன் பிரேக்' பிடித்தாலும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை விட இந்த பாதிப்புகளின் வீரியம் மிகப்பெரியது. உங்கள் காரின் பல்வேறு பாகங்கள் இதனால் பாதிப்பிற்கு உள்ளாகும். முதலில் தேவையில்லாமல் உங்கள் காரின் ஏபிஎஸ் (ABS) தூண்டப்படலாம்.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

இன்றைய அதிநவீன கார்களில் இருக்கும் மிகவும் முக்கியமான பாதுகாப்பு வசதிகளில் ஒன்று ஏபிஎஸ் அல்லது ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti-lock Braking System). நீங்கள் திடீரென 'சடன் பிரேக்' பிடித்தால், தேவையில்லாமல் உங்கள் காரின் ஏபிஎஸ் தூண்டப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் உரிய காலத்திற்கு முன்னரே ஏபிஎஸ் அமைப்பு தேய்மானம் அடையலாம்.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

ஒருவேளை ஏபிஎஸ் வசதி இல்லாத பழைய கார்களை நீங்கள் ஓட்டி கொண்டிருந்தால், நமக்கு இதனால் ஒரு பிரச்னையும் இல்லை என நினைத்து விட வேண்டாம். ஏனெனில் 'சடன் பிரேக்' காரணமாக உங்கள் காரின் டயர்கள் பாதிக்கப்படலாம். நீங்கள் திடீரென 'சடன் பிரேக்' பிடித்தால், உங்கள் காரின் டயர்களில் 'ஃப்ளாட் ஸ்பாட்' (Flat Spot) உருவாகலாம்.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

மற்ற பகுதிகளை காட்டிலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் அதிக த்ரெட்டை (Tread) இழந்த டயர்களை பார்த்துள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் பார்த்ததற்கு பெயர்தான் 'ஃப்ளாட் ஸ்பாட்'. இது ஏற்பட்டால், டயர்களின் 'க்ரிப் லெவல்' பாதிக்கப்படும். அத்துடன் காரின் ரைடு குவாலிட்டியையும் இது சீரழித்து விடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

கார் டயர்களில் ஏற்படும் 'ஃப்ளாட் ஸ்பாட்' இதுபோன்ற பல்வேறு கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும். காரை ஓட்டுவதற்கு பாதுகாப்பதற்காகவும் மாற்றி விடும். நீங்கள் திடீரென 'சடன் பிரேக்' பிடித்தால், கார் சர்ரெர்ன முன்னோக்கி இழுத்து செல்லும். அப்போது என்ன நடக்குமென்றால், காரின் வீல்கள் 'லாக்' ஆகி விடும். அதாவது வீல்கள் சுழலாது. ஆனால் கார் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

இதன் காரணமாக அனைத்து டயர்களின் குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டும், சாலையில் மிக கடுமையாக தேய்ந்து கொண்டிருக்கும். இப்படி நடக்கும்போது, சாலையில் மிக கடுமையாக தேய்ந்து கொண்டிருக்கும் அனைத்து டயர்களின் குறிப்பிட்ட அந்த பகுதிகள் மட்டும், வழக்கத்தை விட அதிக உராய்வு மற்றும் வெப்பத்திற்கு ஆளாகும்.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

இதனால் அந்த பகுதிகளில் மட்டும் 'த்ரெட்' தேய்ந்து, 'ஃப்ளாட் ஸ்பாட்' ஏற்படுகிறது. 'ஃப்ளாட் ஸ்பாட்' இருக்கும் டயருடன் காரை தொடர்ந்து ஓட்டினால் விபத்து நிகழலாம். டயர்கள் மட்டுமல்லாது, காரின் இன்னும் பல்வேறு பாகங்களையும் உரிய காலத்திற்கு முன்னரே தேய்மானம் அடைய செய்து, அடிக்கடி பழுது பார்க்க வேண்டிய சூழலை 'சடன் பிரேக்' உருவாக்குகிறது.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

அத்துடன் கார் அதிக அழுத்தத்தின் கீழ் வேலை செய்ய வேண்டியிருப்பதால், எரிபொருளும் அதிகமாக செலவு ஆகும். இப்படி 'சடன் பிரேக்' பிடிப்பதால் ஏற்படக்கூடிய பிரச்னைகளை அடுக்கி கொண்டே போகலாம். இவை அனைத்தையும் விட திடீரென 'சடன் பிரேக்' பிடிக்கும்போது, கார் உடனடியாக விபத்தில் சிக்க கூடிய அபாயமும் உள்ளது.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

திடீரென 'சடன் பிரேக்' பிடிப்பதால் கார் கட்டுப்பாட்டை இழக்கலாம். குறிப்பாக ஈரமான சாலைகளில் கார் கட்டுப்பாட்டை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிர்ஷ்டவசமாக நீங்கள் வேறு ஒரு காரின் மீது மோதவில்லை என்றாலும், 'சடன் பிரேக்' பிடிப்பதால், நீங்களோ அல்லது உங்களுடன் பயணிக்கும் பயணிகளோ முன்னால் தூக்கி வீசப்படலாம். இது மிகப்பெரிய காயங்களை ஏற்படுத்தும்.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

எனவே முடிந்தவரை 'சடன் பிரேக்' பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் டிரைவிங் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை செய்வதன் மூலம், 'சடன் பிரேக்' பிடிப்பதை தவிர்க்க முடியும். கவன சிதறல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதுதன் முதல் மாற்றம். அதாவது கார் ஓட்டி கொண்டே செல்போனில் பேசுவது போன்றவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும்.

நீங்க நினைக்கற மாதிரி இது சாதாரண விஷயம் இல்ல... 'சடன் பிரேக்' பிடித்தால் காரில் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா?

காரின் மியூசிக் சிஸ்டத்தில் பாடல்களை கேட்டால் கூட மிக குறைவான சத்தத்தில் கவனமாக கேட்பது நல்லது. அதேபோல் சுற்றுப்புறத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலமாக பாதசாரிகளோ அல்லது வேறு வாகனங்களோ திடீரென குறுக்கே வருவதையும் தவிர்க்கலாம். இந்த நடவடிக்கைகள் உங்களையும், உங்கள் கார் பாகங்களையும் பாதுகாப்பதுடன், உங்களை தலைசிறந்த டிரைவராகவும் மாற்றும்.

Most Read Articles
English summary
Car harsh sudden braking problems
Story first published: Friday, July 15, 2022, 18:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X