லிட்டருக்கு 26.5கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி அறிமுகம்! பெட்ரோல் விக்குற விலைக்கு இப்படி ஒரு காருதாங்க தேவ!

லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி (Honda City e:HEV) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி அறிமுகம்... பெட்ரோல் விக்குற விலைக்கு இப்படி ஒரு காருதாங்க தேவை!

ஹோண்டா சிட்டி இ:எச்இவி (Honda City e:HEV) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்கார் மீது பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அறிமுக விலையாக ரூ. 19.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சிட்டி இசட்எக்ஸ் சிவிடி வேரியண்டைக் காட்டிலும் ரூ. 4.45 லட்சம் அதிகம் ஆகும். மேலும், இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி அறிமுகம்... பெட்ரோல் விக்குற விலைக்கு இப்படி ஒரு காருதாங்க தேவை!

என்ன சொல்றீங்க எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா... அப்படி என்னங்க இந்த காருல ஸ்பெஷல் அப்படினு கேக்குறீங்களா?, இதோ உங்களுக்கான பதில். ஹோண்டா நிறுவனம் இந்த காருல சிறப்பு வசதிகளை வாரி வழங்கியிருக்கின்றது. இதனால்தான் சிறப்பு வசதிகளை லோட் செய்யப்பட்ட மாடலாக சிட்டி இ:எச்இவி காட்சியளிக்கின்றது.

லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி அறிமுகம்... பெட்ரோல் விக்குற விலைக்கு இப்படி ஒரு காருதாங்க தேவை!

மிக முக்கியமான அம்சமாக சிட்டி இ:எச்இவி காரில் ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, அடாஸ் எனப்படும் அட்வான்ஸ்ட் டிரைவர் எய்ட்ஸ் சிஸ்டம் (Advanced Driver Aids System) என்கிற வசதியும் சிட்டி இ:எச்இவி மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.

லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி அறிமுகம்... பெட்ரோல் விக்குற விலைக்கு இப்படி ஒரு காருதாங்க தேவை!

இந்த அம்சத்தின் வாயிலாக பல்வேறு சிறப்பு வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹைபீம் அசிஸ்ட், கொள்ளிசன் மிடிகிஷன் பிரேக்கிங் சிஸ்டம், லேன் கீப்பிங் அசிஸ்ட் சிஸ்டம் மற்றும் ரோட் டிபார்ச்சர் மிடிகேஷன் உள்ளிட்ட அம்சங்களும் புதிய சிட்டி இ:எச்இவி மாடலில் வழங்கப்பட்டுள்ளன.

லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி அறிமுகம்... பெட்ரோல் விக்குற விலைக்கு இப்படி ஒரு காருதாங்க தேவை!

இதுதவிர, 37 வகையான இணைப்பு வசதிகளையும் ஹோண்டா இ:எச்இவி மாடலில் வழங்கியிருக்கின்றது. மேலும், ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு, அமேசான் அலெக்ஸா குரல் கட்டளை வசதி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பகல்நேர மின் விளக்கு, தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் டிரைவர் திரை, எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆட்டோ பிரேக் ஹோல்ட் ஆகிய அம்சங்களும் இ:எச்இவி சிட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன.

லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி அறிமுகம்... பெட்ரோல் விக்குற விலைக்கு இப்படி ஒரு காருதாங்க தேவை!

எனவேதான் இக்காரை சிறப்பு வசதிகளை லோடு செய்யப்பட்ட வாகனமாக பார்க்கப்படுகின்றது. மேலும், பாதுகாப்புக்காக பலதரப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், ஹோண்டாவின் லேன் வாட்ச் கேமிரா, பன்முக பார்வை திறன் கொண்ட ரியர் கேமிரா, வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மவுண்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி அறிமுகம்... பெட்ரோல் விக்குற விலைக்கு இப்படி ஒரு காருதாங்க தேவை!

மேலும், கூடுதல் சிறப்பு தொழில்நுட்ப வசதியாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை சிட்டி இ:எச்இவி காரில் வழங்கப்பட்டுள்ளன. இது ஹைபிரிட் சிஸ்டத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் சிட்டி இ:எச்இவி காரில் வழங்கப்பட்டுள்ள. இது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட திரை ஆகும்.

லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி அறிமுகம்... பெட்ரோல் விக்குற விலைக்கு இப்படி ஒரு காருதாங்க தேவை!

மேலே பார்த்தவற்றைக் காட்டிலும் மிக சிறப்பான அம்சமாக புததிய ஹைபிரிட் சிஸ்டம் இருக்கின்றது. அதாவது, சிட்டி இ:எச்இவி காரில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், இரட்டை எலெக்ட்ரிக் மோட்டாரும் காரின் இயக்கத்திற்காக இக்காரில் வழங்கப்பட்டுள்ளது.

லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி அறிமுகம்... பெட்ரோல் விக்குற விலைக்கு இப்படி ஒரு காருதாங்க தேவை!

இதில், முதல் மின் மோட்டார் ஸ்டார்டர் ஜெனரேட்டராகவும், மற்றொன்று, இழுவை மோட்டாராகவும் செயல்படும். முன் வீலுக்கு அது இழுவை திறனை வழங்கும். இரண்டும் சேர்ந்து 126 பிஎஸ் மற்றும் 253 என்எம் டார்க்கை வெளியேற்றும். மூன்று விதமான டிரைவிங் மோட்கள் சிட்டி ஹைபிரிட்டில் வழங்கப்பட்டுள்ளன. இவி டிரைவ் மோட், ஹைபிரிட் டிரைவ் மோட் மற்றும் எஞ்ஜின் டிரைவ் மோட் ஆகிய மோட்களே வழங்கப்பட்டுள்ளன.

லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி அறிமுகம்... பெட்ரோல் விக்குற விலைக்கு இப்படி ஒரு காருதாங்க தேவை!

ஹோண்டா சிட்டி இ:எச்இவி மாடலை இ-சிவிடி டிரான்ஸ்மிஷனில் மட்டுமே வாங்க முடியும். ஸ்டியரிங் வீலிற்கு பின் பக்கத்தில் பேடில் ஷிஃப்டர் வழங்கப்பட்டுள்ளது. இது பிரேக் ரீஜெனரேஷன் செய்ய உதவும். அதாவது, மின் மோட்டார்களுக்கான மின்சாரத்தை வழங்கும் பேட்டரியை சார்ஜ் செய்ய இந்த தொழில்நுட்பம் உதவும்.

லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி அறிமுகம்... பெட்ரோல் விக்குற விலைக்கு இப்படி ஒரு காருதாங்க தேவை!

இந்த பேட்டரிகள் காரின் பூட் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பூட் ஸ்பேஸ் லேசாக குறைந்திருக்கின்றது. அதாவது, 506 லிட்டரில் இருந்து 306 லிட்டராக குறைந்திருக்கின்றது. இப்புதிய மாடல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26.5 கிமீ வரை மைலேஜ் தரும். இது தற்போது விற்பனையில் இருக்கும் சிட்டி கார் மாடல்களைக் காட்டிலும் மிக அதிகம் ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda #honda city
English summary
Car maker honda launches city e hev hybrid in india at inr 19 5 lakhs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X