வெப்சைட்டில் இருந்து டஸ்டர் காரை தூக்கிய ரெனால்ட்... அண்மையில் உற்பத்தியை நிறுத்திய நிலையில் அதிரடி!

ரெனால்ட் (Renault) நிறுவனம் அதன் புகழ்பெற்ற டஸ்டர் காரை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வெப்சைட்டில் இருந்து டஸ்டர் காரை தூக்கிய ரெனால்ட்... அண்மையில் உற்பத்தியை நிறுத்திய நிலையில் அதிரடி!

இந்தியாவில் குறைந்த விலையில் கார்களை விற்பனைச் செய்து வரும் நிறுவனங்களில் ரெனால்ட் (Renault)-ம் ஒன்று. இந்நிறுவனம், அதன் பிரபல கார் மாடல் ஒன்றை, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கின்றது. ரெனால்டின் இந்த செயல் அப்புகழ்வாய்ந்த கார் மாடல் நாட்டை விட்டு விற்பனையில் இருந்து வெளியேற்றப்படுமோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கின்றது.

வெப்சைட்டில் இருந்து டஸ்டர் காரை தூக்கிய ரெனால்ட்... அண்மையில் உற்பத்தியை நிறுத்திய நிலையில் அதிரடி!

ரெனால்ட் அதன் டஸ்டர் (Duster) எஸ்யூவி ரக கார் மாடலையே அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இருந்து வெளியேற்றிருக்கின்றது. நிறுவனம், டஸ்டர், கைகர், ட்ரைபர் மற்றும் க்விட் உள்ளிட்ட கார் மாடல்களையே நாட்டில் விற்பனைக்கு வழங்கி வந்தது. இவற்றில் இருந்தே டஸ்டர் நீக்கப்பட்டுள்ளது. ஆகையால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தளப்பக்கத்தில் மூன்று கார்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

வெப்சைட்டில் இருந்து டஸ்டர் காரை தூக்கிய ரெனால்ட்... அண்மையில் உற்பத்தியை நிறுத்திய நிலையில் அதிரடி!

டஸ்டர் எஸ்யூவி காரின் அப்டேட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக இந்த நீக்கம் செய்யப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழும்பியிருக்கின்றது. ஆனால், நிறுவனம் சார்பில் இதுகுறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகையால், அப்டேட் டஸ்டர் இந்தியா வருவதும் சந்தேகமாகியுள்ளது.

வெப்சைட்டில் இருந்து டஸ்டர் காரை தூக்கிய ரெனால்ட்... அண்மையில் உற்பத்தியை நிறுத்திய நிலையில் அதிரடி!

ஆகையால், இக்காரை முழுமையாக இந்தியாவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ரெனால்ட் களமிறங்கியிருக்கின்றதோ என்ற எண்ணமே அனைவரின் மத்தியிலும் தோன்றியிருக்கின்றது. அண்மையில் இக்காரின் உற்பத்தி பணிகளை ரெனால்ட் நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையிலேயே தற்போது விற்பனையில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரை இந்தியா கொண்டு வந்து கிட்டதட்ட 10 வருடங்கள் ஆகிவிட்டன.

வெப்சைட்டில் இருந்து டஸ்டர் காரை தூக்கிய ரெனால்ட்... அண்மையில் உற்பத்தியை நிறுத்திய நிலையில் அதிரடி!

ஆரம்பத்தில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்தது. ஏன் தென்னிந்தியாவின் பல்வேறு படங்களில் ஹீரோக்கள் தொடங்கி முதன்மை கதாப்பாத்திரங்கள் பல இக்காரை பயன்படுத்துகின்ற வகையில் காட்சிகள் அமைந்திருக்கின்றன. இத்தகையே சூழலே தொடர் புதுமுகங்களின் வருகையால் அப்படியே தலை கீழாக மாற்றிவிட்டது. தற்போது டஸ்டர் விற்பனை பல மடங்கு சரிந்துக் காணப்படுகின்றது.

வெப்சைட்டில் இருந்து டஸ்டர் காரை தூக்கிய ரெனால்ட்... அண்மையில் உற்பத்தியை நிறுத்திய நிலையில் அதிரடி!

இதன் காரணத்தினாலேயே இக்காரை இந்திய சந்தையை விட்டு வெளியேற்றும் முயற்சியில் ரெனால்ட் களமிறங்கியிருக்கும் என யூகிக்கப்படுகின்றது. இந்திய சந்தையில் ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி காருக்கு போட்டியளிக்கும் வகையில் பல்வேறு கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன.

வெப்சைட்டில் இருந்து டஸ்டர் காரை தூக்கிய ரெனால்ட்... அண்மையில் உற்பத்தியை நிறுத்திய நிலையில் அதிரடி!

குறிப்பாக, கியா செல்டோஸ், ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹாரியர் உள்ளிட்ட கார் மாடல்களே மிக சிறந்த போட்டியாளனாக டஸ்டருக்கு இருக்கின்றன. இவற்றினால் தொடர்ச்சியாக விற்பனை வீழ்ச்சியை டஸ்டர் சந்தித்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையிலேயே இக்கார் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

வெப்சைட்டில் இருந்து டஸ்டர் காரை தூக்கிய ரெனால்ட்... அண்மையில் உற்பத்தியை நிறுத்திய நிலையில் அதிரடி!

ரெனால்ட் டஸ்டர் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலேயே நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. ஒன்று 1.5 லிட்டர் பெட்ரோல், மற்றொன்று 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைத்தது. இவற்றுடன் சேர்த்து, 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்பட்டன.

வெப்சைட்டில் இருந்து டஸ்டர் காரை தூக்கிய ரெனால்ட்... அண்மையில் உற்பத்தியை நிறுத்திய நிலையில் அதிரடி!

அதேநேரத்தில், ரெனால்ட் நிறுவனம் சர்வதேச சந்தைக்காக டஸ்டர் கார் மாடலை அப்டேட் செய்துக் கொண்டிருக்கின்றது. உலக நாடுகள் சிலவற்றில் இந்த கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்ற காரணத்தினால் ரெனால்ட் நிறுவனம் இந்த சூப்பரான முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. உருவாக்கத்தைப் பெற்று வரும் புதிய ட்ரைபர், விற்பனையில் இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு அதிக கட்டுமஸ்தான மற்றும் தொழில்நுட்பம் அடங்கிய வாகனமாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெப்சைட்டில் இருந்து டஸ்டர் காரை தூக்கிய ரெனால்ட்... அண்மையில் உற்பத்தியை நிறுத்திய நிலையில் அதிரடி!

நவீன அம்சங்கள் மட்டுமின்றி அதிக சொகுசு வசதிகளுடனும் அது எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் டஸ்டர் எனும் பெயரில் விற்பனைச் செய்யப்பட்டு வரும் இக்கார், டாசியா டஸ்டர் எனும் பெயரிலேயே உருவாகி வருகின்றது. இதன் அறிமுகம் 2023ம் ஆண்டிற்குள் அரங்கேவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அம்சங்களுடன் உருவாகி வரும் இக்கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Car maker renault removed duster suv from official site
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X