இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனா விற்பனையே ஆகல...

இந்தியாவில் நல்ல கார்கள் பல மக்கள் வரவேற்பில்லாமல் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகாமல் இருக்கிறது. அந்த கார்களின் பட்டியலைக் கீழே காணலாம் வாருங்கள்.

இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை . . . ஆனா விற்பனையே ஆகல . . .

ஆண்டுதோறும் இந்தியாவில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதில் சில கார்கள் அறிமுகப்படுத்தப்படும்போது வெளியாகும் செய்தியுடன் நின்றுவிடுகிறது. அந்த கார்களை பற்றி அதன் பின் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அல்லது சாலைகளில் பார்த்திருக்கமாட்டோம். இதற்கு முக்கியமா காரணம் அந்த காரின் விலை, டிசைன், அதில் உள்ள அம்சங்கள் இப்படியாக ஏதாவது ஒரு நெகட்டிவ் மக்களை அந்த காரை வாங்குவதைத் தவிர்க்க வைத்திருக்கும்.

இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை . . . ஆனா விற்பனையே ஆகல . . .

ஆனால் சில கார்கள் எல்லாமே சரியாகவும் சிறப்பாகவும் இருந்திருக்கும். ஆனால் அது மோசமான மார்க்கெட்டிங் யுக்தி அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகச் சரியாக விற்பனையைச் சந்தித்திருக்காது. இப்படியாக தற்போது எல்லாமே சிறப்பாக உள்ள அதே நேரத்தில் விற்பனை குறைவாக உள்ள விரைவில் மார்கெட்டிலிருந்து வெளியேறவுள்ள கார்களின் பட்டியலைதான் காணப்போகிறோம்.

இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை . . . ஆனா விற்பனையே ஆகல . . .

மாருதி சுஸூகி எஸ்-கிராஸ்

மாருதி நிறுவனத்தின் கார்கள் எல்லாம் இந்தியாவில் பெரிய ஹிட் அடித்த கார்கள். இந்த எஸ்-கிராஸ் காரை அறிமுகப்படுத்திய போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பலர் இந்த கார்கள் சிறப்பாக விற்பனையாகும் என்றே கருதினர். ஆனால் இந்த கார் மாதம் 2 ஆயிரம் கார்கள் மட்டுமே விற்பனையானது மாருதி நிறுவனத்தின் மற்ற கார்கள் எல்லாம் மாதம் 10 ஆயிரம் கார்கள் வரை விற்பனையானது. எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை போகவில்லை.

இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை . . . ஆனா விற்பனையே ஆகல . . .

இதற்கு முக்கியமான காரணம் பட்ஜெட் எனக் கூறப்பட்டது. இந்த காருக்கு நியாயமான பட்ஜெட்டில் தான் வெளியானாலும் மாருதி கார்களை விரும்புபவர்கள் குறைவான விலை கார்களை வாங்குபவர்களாக இருந்தனர்.தரமான கார்களை விரும்புபவர்கள் மாருதி கார்களை விரும்பவில்லை மாருதி தரமில்லாத கார்களை தயாரிப்பதாகக் கருதினர். ஆனால் மாருதி எஸ்-கிராஸ் கார் சர்வதேச என்சிஏபி ரேட்டிங்கில் 4 ஸ்டார்கள் பெற்ற கார்.

இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை . . . ஆனா விற்பனையே ஆகல . . .

நிஸான் கிக்ஸ்

நிஸான் நிறுவனம் குறைந்த விலையில் கார்ஒன்றை களமிறக்கக் கடந்த 2018 ஆண்டு நிஸான் கிக்ஸ் காரை அறிமுகப்படுத்தியது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. இதில் உள்ள பிரச்சனை என்ன என ஆய்வு நடத்தி அதை மாற்றி 2020ம் ஆண்டு மீண்டும் புதிய மாடல் கிக்ஸ் காரை அறிமுகப்படுத்தியனர். ஆனால் அதுவும் சரியாக விற்பனையாகவில்லை.

இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை . . . ஆனா விற்பனையே ஆகல . . .

இதற்குக் காரணம் அந்த காரின் லுக் தான் என பலர் சொல்கிறார்கள் ஆனால் இந்த காரின் பில்டு குவாலிட்டி சிறப்பாக இருக்கிறது. செயல்திறனும் வெகு சிறப்பாக உள்ளது. 0-100 கி.மீ வேகத்தை வெறும் 10.5 நொடியில் செல்கிறது. இதில் பென்ஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே இன்ஜின் தான் இந்த காரிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை . . . ஆனா விற்பனையே ஆகல . . .

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ்

பிஎஸ்ஏ நிறுவனம் தனது சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் கார் மூலம் இந்தியாவிற்கு மீண்டும் நுழைய முயற்சி செய்தது. இந்த காரில் பல அம்சங்கள் சிறப்பாக இருந்தாலும் விற்பனை ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. ஆரம்பத்தில் மாதம் 100 கார்கள் விற்ற நிலையில் தற்போது வெறும் மாதம் வெறும் 41 கார்கள் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இந்த கார் விரைவில் மார்கெட்டிலிருந்துவெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை . . . ஆனா விற்பனையே ஆகல . . .

இதற்கு முக்கியமான காரணம் இதை விலை. புதிய பிராண்டை நம்பி மக்கள் ரூ30 லட்சத்திற்கு கார் வாங்க விரும்ப மாட்டார்கள். அதே போல அந்த மதிப்பில் கார் வாங்குபவர்கள் பெரும்பாலும் பிரிமியம் கார்களை எதிர்பார்ப்பார்கள். ஆனால் இந்த கார்ஃபங்கி லுக்கில் இருக்கிறது மற்றொரு முக்கியமான நெகட்டிவ் விஷயம் இது வெறும் டீசல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை . . . ஆனா விற்பனையே ஆகல . . .

மஹிந்திரா மராஸ்ஸோ

மஹிந்திரா நிறுவனம் இந்த காரை கடந்த 2018ம் ஆண்டு எர்டிகாவிற்கு போட்டியாக அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல வரவேற்பு குறைந்து வருகிறது. இந்த காரை நிறுத்தப்போவதாக மஹிந்திரா நிறுவனம் அறிவிக்கவில்லை.

இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை . . . ஆனா விற்பனையே ஆகல . . .

ஆனால் தொடர்ந்து விற்பனை சரிந்தால் அதைத் தவிர அந்நிறுவனத்திற்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது? இந்த காரில் டீசல் ஆப்ஷன் மட்டும் இருப்பது மற்றொரு பின்னடைவு, இதில் பெட்ரோல் ஆப்ஷன் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தும் அதிகமாகவுள்ளது. இந்த காரின் வெளிப்புற டிசைனை பெரிய அளவில் யாரும் விரும்பவில்லை. மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் பெரிய அளவில் இதை மார்கெட்டிங் செய்யவும் விரும்பவில்லை.

இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை . . . ஆனா விற்பனையே ஆகல . . .

டொயோட்டா கேம்ரி ஹைபிரிட்

டொயோட்டோ நிறுவனம் தனது கேம்ரி ஹைபிரிட் காரின் அப்டேட்டட் வெர்ஷனை கடந்த 2022 ஜனவரி மாதம் வெளியிட்டது. சர்வதேச அளவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று. ஆனால் இந்தியாவில் அப்படி அல்லது. இந்தியாவில் இந்த கார் விற்பனையை மந்தம் தான். இதற்கு முக்கியமான காரணம் வெளிநாடுகளில் இது பட்ஜெட் காராக உள்ளது. இந்தியாவில் அதிக விலை கொண்ட சொகுசு காராக விற்பனையாகிறது.

இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை . . . ஆனா விற்பனையே ஆகல . . .

ஒவ்வொரு மாதமும் 100-150 கார்கள் மட்டுமே விற்பனையாகிறது. இந்த காரின் முக்கியமான பிரச்சனை இதன் விலை தான். இறக்குமதி வரி காரணமாக இந்த காரின் விலை ரூ50 லட்சத்தைத் தாண்டுகிறது. இந்த காசுக்கு மக்கள் இந்தியாவில் ஃபார்ச்சூனர் அல்லது பென்ஸ், பிஎம்டபிள்யூ, போன்ற சொகுசு கார்களை கூட வாங்கிவிடலாம்.

Most Read Articles
English summary
Cars to be discontinue from India this year find the list
Story first published: Friday, May 27, 2022, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X