டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் இவ்ளோ பிரச்சனை இருக்கா!! புதுசா கார் வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க

கார்களில் ஏசி வழங்கப்பட்டதே ஆச்சிரியமாக பார்த்த காலம் போய், தற்போதைய மாடர்ன் கார்களில் மொபைல் போன் இணைப்பு, ரிவர்ஸில் வருவதற்கு உதவியாக சென்சார்கள் & கேமிராக்கள் என ஏகப்பட்ட அதிநவீன தொழிற்நுட்பங்கள் வந்துவிட்டன.

Recommended Video

Maruti Alto K10 Launched At Rs 3.99 Lakh In TAMIL | What’s New On The Hatchback? Dual-Jet VVT & AMT

குறிப்பாக, பொழுதுப்போக்கிற்காகவும், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கவும் உதவும் இன்ஃபோடெயின்மெண்ட் திரைகள் பெரும்பாலான கார்களில் தொடுத்திரைகளாக மாறிவிட்டன.

டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் இவ்ளோ பிரச்சனை இருக்கா!! புதுசா கார் வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க

அதேநேரம் சில நிறுவனங்கள் தொடர்ந்து பொத்தான்களை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை வழங்குகின்றன. இவை இரண்டில் எது சிறந்தது? எது பயண சூழலின்போது மிகவும் இணக்கமானது என்பது குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் இவ்ளோ பிரச்சனை இருக்கா!! புதுசா கார் வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க

இதுகுறித்து ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பத்திரிக்கை நிறுவனம் ஒன்று 12 கார்கள் மற்றும் அவற்றின் அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களுடன் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ், டாசியா சாண்டேரோ, ஹூண்டாய் ஐயோனிக் 5, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்பி கிளாஸ், எம்ஜி மார்வல் ஆர், நிஸான் குவாஷ்கை, சியட் லியோன், சுபாரு அவுட்பேக், டெஸ்லா மாடல் 3, ஃபோக்ஸ்வேகன் ஐடி.3, வால்வோ சி40 மற்றும் வால்வோ வி70 என்பன இந்த 12 கார்களாகும்.

டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் இவ்ளோ பிரச்சனை இருக்கா!! புதுசா கார் வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க

கைவிடப்பட்ட விமான ஓடுப்பாதையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கார்களை மணிக்கு 110kmph வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டன. மேலும் அத்தகைய வேகத்தில் செல்லும்போது ஓட்டுனர்களுக்கு இன்ஃபோடெயின்மெண்ட் சார்ந்த சோதனைகள் கொடுக்கப்பட்டன. இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்ட கார்கள் 2005இல் இருந்து 2022 வரையில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன.

டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் இவ்ளோ பிரச்சனை இருக்கா!! புதுசா கார் வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க

இருப்பினும், இவை அனைத்தும் இன்ஃபொடெயின்மெண்ட் தொழிற்நுட்ப வசதிகளை கொண்டவையாக இருந்தன. நம் மக்களிடத்தில் டிஜிட்டல் தொடுத்திரையை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை பயணத்தின்போது கண்ட்ரோல் செய்வது எளிது என்கிற கருத்து உள்ளது.

டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் இவ்ளோ பிரச்சனை இருக்கா!! புதுசா கார் வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க

தொடுத்திரை என்றால் எளிதாக திரையில் விரல்களை வைத்து கண்ட்ரோல் செய்துவிடலாம் என்றுதான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால் ஸ்வீடன் நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் வேறு மாதிரியான பதிலை நமக்கு தருகின்றன. இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்ட 17 வருடம் பழமையான வால்வோ வி70 கார் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் இவ்ளோ பிரச்சனை இருக்கா!! புதுசா கார் வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க

2005ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த வால்வோ காரில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்ய பொத்தான்கள் வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும் இந்த கார் சிறப்பாக, ஓட்டுனரின் பயன்பாட்டிற்கு எளிமையான இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை கொண்டுள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் இவ்ளோ பிரச்சனை இருக்கா!! புதுசா கார் வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க

அதுவே 19.4-இன்ச்சில் அளவில் நன்கு பெரியதாக தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை கொண்ட எம்ஜி மார்வல் ஆர் கார் ஆய்வு முடிவில் மிகவும் பின்தங்கியுள்ளது. இத்தனைக்கும் இந்த மாடர்ன் எம்ஜி காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் திரைகள் கூட ஓட்டுனரின் பார்வைக்கு எதிரே நன்கு பெரியதாக வழங்கப்பட்டுள்ளன.

டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் இவ்ளோ பிரச்சனை இருக்கா!! புதுசா கார் வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க

இருப்பினும், கொடுக்கப்பட்ட அனைத்து சோதனைகளையும் எம்ஜி மார்வல் ஆர் காரில் செய்து முடிக்க அதன் ஓட்டுனருக்கு 45 வினாடிகள் தேவைப்பட்டுள்ளது. இதுதான் மேற்கூறப்பட்ட 12 கார்களில் கடைசி இடத்தை பிடித்த மதிப்பீடாகும். அதுவே பொத்தான் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை கொண்ட வால்வோ வி70 காரில் வெறும் 10 வினாடிகளில் இந்த சோதனைகள் அனைத்தையும் முடிக்க முடிந்துள்ளது.

டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் இவ்ளோ பிரச்சனை இருக்கா!! புதுசா கார் வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க

ஏற்கனவே கூறியதுதான், இந்த சோதனைகள் அனைத்தும் கைவிடப்பட்ட, வெற்றிடமான விமான ஓடுப்பாதையில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நம் இந்திய சாலைகள் இதற்கு அப்படியே எதிர்மறையாக இருக்கும். அதனால் 45 வினாடிகளை எடுத்து மார்வல் ஆர் காரின் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை நம் நாட்டு சாலைகளில் 110kmph வேகத்தில் பயணிக்கும்போது கண்ட்ரோல் செய்வது என்பது தற்போதைக்கு கிட்டத்தட்ட முடியாத காரியமே.

டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் இவ்ளோ பிரச்சனை இருக்கா!! புதுசா கார் வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க

இதற்கு முக்கிய காரணம், தொடுத்திரைகளை பயன்படுத்தும்போது நமது கவனத்தை சாலையில் இருந்து விலக்கி, இன்ஃபோடெயின்மெண்ட்டிற்கு கொண்டுவர வேண்டியதாக உள்ளது. இந்த பிரச்சனையை சரிச்செய்ய கார் தயாரிப்பு நிறுவனங்கள் வெவ்வேறான வடிவங்களில், வெவ்வேறான பொசிஷன்களில் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை பொருத்தினாலும் பெரியதாக உதவிகரமாக இருப்பதுபோல் தெரியவில்லை.

டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் இவ்ளோ பிரச்சனை இருக்கா!! புதுசா கார் வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க

தொடர்ந்து பயன்படுத்தினால் வேண்டுமாயின் இத்தகைய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டங்கள் நமக்கு பழக்கப்பட்டதாக மாறும், ஆனால் அதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஆனால் பொத்தான்களை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட்கள் விரைவாகவே உரிமையாளருடன் ஒன்றிவிடுகின்றன. 2,3 பயணங்களிலேயே ஓட்டுனரின் கை தன்னிச்சையாக சரியான பொத்தானையோ, க்னாப்-ஐயோ நோக்கி செல்கிறது.

Most Read Articles
English summary
Cars with touchscreen infotainment vs buttons infotainment
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X