China Lockdown: சீனாவால் மாருதிக்கு விழப்போகும் பலத்த அடி! இப்படி ஒரு நிலைமை வரும்னு நினைத்துக்கூட பார்க்கலயே!

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் லாக்டவுன் போடப்பட்டு வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள பல தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலையில் இருக்கிறது. இந்தியாவில் உள்ள மாருதி சுஸூகி நிறுவனத்திற்குத் தேவையான செமி-கண்டெக்டர்களை சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் சீனாவில் போடப்பட்ட லாக் டவுனால் மாருதி நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸூகி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.5 லட்சம் கார்களை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவில் உள்ள லாக்டவுனால் அந்நாட்டிலிருந்து செமி கண்டெக்டர்களை சப்ளை செய்யும் நிறுவனங்களால் இந்தியாவிற்குச் செமி கண்டெக்டர் கருவிகளை அனுப்ப முடியவில்லை. இதனால் மாருதி நிறுவனத்தின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

சீனாவால் மாருதிக்கு விழப்போகும் பலத்த அடி! இப்படி ஒரு நிலைமை வரும்னு நினைத்துக்கூட பார்க்கலயே!

இந்த டிசம்பர் மாதம் மாருதி நிறுவனம் மொத்தமே 1.35 முதல் 1.40 லட்சம் கார்களை மட்டுமே தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்தி கடந்த 13 மாதங்களில் குறைவான உற்பத்தியாகும். கடைசியாக 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருப்பதிலேயே குறைவாக 1.35 லட்சம் கார்கள் மட்டுமே உற்பத்தியாகி வந்தது. அதாவது வரும் டிசம்பர் மாதம் மாருத நிறுவனம் மொத்த உற்பத்தியில் குறைந்த பட்சம் 10 ஆயிரம் கார்களாவது குறையும் என எதிர்பார்க்கலாம்.

மாருதி நிறுவனம் தற்போது சராசரியாக ஒரு காரை ரூ5.51 லட்சத்திற்கு விற்பனை செய்து வருகிறது. தற்போது 10 ஆயிரம் கார்கள் உற்பத்தி குறைகிறது என்றால் இதன்படி நிறுவனத்திற்கு ரூ551 கோடி இழப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பார்க்க வெறும் 10 ஆயிரம் கார் உற்பத்தி குறைவு தான் என்றாலும் நஷ்டத்தின் அளவை கணக்கிடும் போது ரூ500 கோடிக்கு அளவிற்கு நஷ்டம் ஏற்படுகிறது. மிகப்பெரிய நஷ்டம் தான். இது இந்தியா பொருளாதார வளர்ச்சியைக் கூட பாதிக்கும்.

மாருதி நிறுவனம் அதிகபட்சமாகக் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 1.84 லட்சம் கார்களை உற்பத்தி செய்திருந்தது. அந்த காலகட்டத்தில் செமி கண்டெக்டர் தட்டுப்பாடு குறைந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் குறைந்ததால் வரிசையாக உற்பத்தி குறைந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் ரூ1.52 லட்சம் கார்கள் உற்பத்தியாகியிருந்தது.

இந்த 2022ம் ஆண்டை பொருத்தவரை மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய கார்களை மட்டும் மொத்தம் 13.18 லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ளனர். இதே காலகட்டத்தில் இந்த கார்களின் உற்பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாருதி நிறுவனம் அடுத்த 4 மாதங்களில் மாதம் 1.90 லட்சம் கார்களை தயாரித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அந்நிறுவனம் தனது வென்டர்களுக்கு இந்த அளவிலான உற்பத்திக்கு வாக்குறுதியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
China lockdown affects Maruti Suzuki production in December
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X