ஸ்டைலான காருக்கு இந்தியாவில் வர்த்தக பதிவு செய்த சீன நிறுவனம்! ஃபோர்டு ப்ரோன்கோ இடத்தை இது பூர்த்தி செய்யும்!

ஃபோர்டு ப்ரோன்கோ (Ford Bronco) காரை போல் காட்சியளிக்கும் ஹவல் டார்கோ (Haval Dargo) காருக்கான வர்த்தக பதிவை பிரபல சீன நிறுவனம் நாட்டில் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

முரட்டு தனமான தோற்றமுடைய காருக்கு இந்தியாவில் வர்த்தக பதிவு செய்த சீன நிறுவனம்! ஃபோர்டு ப்ரோன்கோ இடத்தை இது பூர்த்தி செய்யும்!

சீன வீரர்களின் அத்துமீறல் செயலினால் கடந்த 2020ம் ஆண்டு இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் நிலவியது. இந்த பதற்ற நிலை சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் கிரேட் வால் மோட்டார்ஸ் (Great Wall Motors) நிறுவனத்தின் இந்திய வருகை திட்டத்திற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது.

முரட்டு தனமான தோற்றமுடைய காருக்கு இந்தியாவில் வர்த்தக பதிவு செய்த சீன நிறுவனம்! ஃபோர்டு ப்ரோன்கோ இடத்தை இது பூர்த்தி செய்யும்!

நிறுவனம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் நாட்டில் நுழைய திட்டமிட்டிருந்தது. இதற்காக ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மஹாராஷ்டிரா மாநில அரசுடன் கிரேட் வால் மோட்டார்ஸ் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் 2020 மே மாதத்தில் செய்யப்பட்ட நிலையில், சீன வீரர்கள் அத்துமீறல் சம்பவம் ஜூன் மாதத்தில் அரங்கேறியது.

முரட்டு தனமான தோற்றமுடைய காருக்கு இந்தியாவில் வர்த்தக பதிவு செய்த சீன நிறுவனம்! ஃபோர்டு ப்ரோன்கோ இடத்தை இது பூர்த்தி செய்யும்!

இதன் விளைவாக கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மஹாராஷ்டிரா அரசு நிறுத்தி வைத்தது. இந்த அதிரடி நடவடிக்கை நிறுவனத்தின் அனைத்து இந்திய வருகை நடவடிக்கைக்கும் முற்று புள்ளியை ஏற்படுத்தியது. இருப்பினும், கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தியாவில் நுழைவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றது.

முரட்டு தனமான தோற்றமுடைய காருக்கு இந்தியாவில் வர்த்தக பதிவு செய்த சீன நிறுவனம்! ஃபோர்டு ப்ரோன்கோ இடத்தை இது பூர்த்தி செய்யும்!

நிறுவனம் பல வழிகளில் இந்தியாவில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டது. அந்தவகையில், தற்போது இறக்குமதி பிரிவை தேர்வு செய்திருக்கின்றது. அதாவது, சிகேடி (completely knocked-down kits) மற்றும் சிபியூ (completely built units) ஆகியவற்றின் வாயிலாக தனது வாகனங்களை இந்தியாவில் விற்பனைச் செய்ய இருக்கின்றது.

முரட்டு தனமான தோற்றமுடைய காருக்கு இந்தியாவில் வர்த்தக பதிவு செய்த சீன நிறுவனம்! ஃபோர்டு ப்ரோன்கோ இடத்தை இது பூர்த்தி செய்யும்!

நிறுவனத்தின் இந்த யுக்தியைத் தொடர்ந்து அதன் துணை பிராண்டான ஹவல்-இன் இணையதளம் இந்தியாவில் செயல்பாட்டுக் கொண்டு வரப்பட்டது. இந்த செயலைத் தொடர்ந்து இந்தியாவில் ஹவல் பிராண்டில் விற்பனைக்கு வர இருக்கும் வாகனங்களுக்கு ட்ரேட்மார்க் சான்றை பெறும் முயற்சியில் களமிறங்கியது.

முரட்டு தனமான தோற்றமுடைய காருக்கு இந்தியாவில் வர்த்தக பதிவு செய்த சீன நிறுவனம்! ஃபோர்டு ப்ரோன்கோ இடத்தை இது பூர்த்தி செய்யும்!

இதன் அடிப்படையில் ஹவல் டார்கோ (Haval Dargo) கார் மாடலுக்கு மிக சமீபத்தில் கிரேட் வால் மோட்டார்ஸ் வர்த்தக பதிவு செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், இன்னும் சில மாதங்களில் இக்கார் நம் நாட்டில் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகி இருக்கின்றன.

முரட்டு தனமான தோற்றமுடைய காருக்கு இந்தியாவில் வர்த்தக பதிவு செய்த சீன நிறுவனம்! ஃபோர்டு ப்ரோன்கோ இடத்தை இது பூர்த்தி செய்யும்!

ஹவல் நிறுவனத்தின் கூற்றுபடி டார்கோ என்பது 'டேர் டூ கோ' என்பதற்கான அர்த்தம் என தெரிய வந்திருக்கின்றது. சீனாவில் இந்த கார் பிக் டாக் (பெரிய நாய்) என்றும் அழைக்கப்படுகின்றது. ஃபோர்டு ப்ரோன்கோ (Ford Bronco) காரின் வெளிப்புற ஸ்டைலை இந்த கார் கொண்டிருக்கின்றது. ப்ரோன்கோ கார் தென்படுவதைப் போல மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தில் ஹவல் டார்கோ எஸ்யூவி காட்சியளிக்கின்றது.

முரட்டு தனமான தோற்றமுடைய காருக்கு இந்தியாவில் வர்த்தக பதிவு செய்த சீன நிறுவனம்! ஃபோர்டு ப்ரோன்கோ இடத்தை இது பூர்த்தி செய்யும்!

இந்த தோற்றத்திற்காக ட்ரபெசோடியல் க்ரில் மற்றும் கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட பம்பர், எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்டவை இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. க்ரில்லேயே வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த மின் விளக்கிலேயே ரிங் வடிவ எல்இடி டிஆர்எல்-ம் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது.

முரட்டு தனமான தோற்றமுடைய காருக்கு இந்தியாவில் வர்த்தக பதிவு செய்த சீன நிறுவனம்! ஃபோர்டு ப்ரோன்கோ இடத்தை இது பூர்த்தி செய்யும்!

தொடர்ந்து, காரின் பக்கவாட்டு பகுதியில் பெரிய வீல்கள், சங்கியான கருப்பு நிற கிளாடிங், குரோம் பூச்சு கொண்ட அணிகலன்கள் என பலவும் ஹவல் டார்கோவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, 12.3 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் ஏசி வெண்டுகள் உள்ளிட்டவை காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

முரட்டு தனமான தோற்றமுடைய காருக்கு இந்தியாவில் வர்த்தக பதிவு செய்த சீன நிறுவனம்! ஃபோர்டு ப்ரோன்கோ இடத்தை இது பூர்த்தி செய்யும்!

இவை அனைத்தும் ஹவல் டார்கோவை பிரீமியம் தர காரை தென்பட வைக்கின்றது. எஞ்ஜினை பொருத்தவை இரு விதமான தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளே வழங்கப்பட இருக்கின்றது.

முரட்டு தனமான தோற்றமுடைய காருக்கு இந்தியாவில் வர்த்தக பதிவு செய்த சீன நிறுவனம்! ஃபோர்டு ப்ரோன்கோ இடத்தை இது பூர்த்தி செய்யும்!

இதில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரானது 169 பிஎச்பியையும், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரானது 211 பிஎச்பி பவரையும் வெளியேற்றும். இத்துடன், 7 ஸ்பீடு டிசிடி தானியங்கி கியர்பாக்ஸ் வசதியும் வழங்கப்பட இருக்கின்றது. மேலும், கூடுதல் சிறப்பு தேர்வாக நான்கு வீல் இயக்கம் மற்றும் அனைத்து வீல்கள் இயக்கம் ஆகிய தேர்வுகளும் வழங்கப்படும்.

Most Read Articles
English summary
Chinese firm gwm filed trademark in india for haval dargo suv
Story first published: Wednesday, January 19, 2022, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X