பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் காராக விரைவில் வரபோகிறது மலிவு விலை சி3... கியா கேரன்ஸுக்கு ஆப்பு ரெடி!

சிட்ரோன் நிறுவனம் அதன் சி3 காரை 7 சீட்டர் வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் காராக விரைவில் வரபோகிறது மலிவு விலை சி3... கியா கேரன்ஸுக்கு ஆப்பு ரெடி போலிருக்கே!

மிக உயரிய விலைக் கொண்ட சி5 ஏர்கிராஸ் கார் மாடலை மட்டுமே இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வந்தது. இந்-நிலையிலேயே யாரும் எதிர்பார்த்திராத மிகக் குறைவான விலையில் சி3 காரை அண்மையில் சிட்ரோன் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் காராக விரைவில் வரபோகிறது மலிவு விலை சி3... கியா கேரன்ஸுக்கு ஆப்பு ரெடி போலிருக்கே!

மலிவு விலை, பிரீமியம் அம்சங்கள் மற்றும் கவர்ச்சியான தோற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக இக்கார் பிரபலமடைந்துக் காணப்படுகின்றது. இந்த கார் மாடலிலேயே அதிக இருக்கைகள் வசதிக் கொண்ட தேர்வை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் சிட்ரோன் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. அது ஏழு இருக்கைகள் வசதியுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, இன்னும் பன்முக சிறப்பு வசதிகளுடன் அவ்வாகனம் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிக இருக்கைகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் சிட்ரோன் சி3 காரை சாலை சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது, சிட்ரோன் நிறுவனம். அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் காராக விரைவில் வரபோகிறது மலிவு விலை சி3... கியா கேரன்ஸுக்கு ஆப்பு ரெடி போலிருக்கே!

சி3 பிளஸ் அல்லது சி3 ஏர்கிராஸ் என்கிற ஏதேனும் ஓர் பெயரில் இந்த அதிக இருக்கைகள் கொண்ட வாகனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் அதிக இருக்கைகள் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே 7 இருக்கை வெர்ஷனில் சி3 காரை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது சிட்ரோன் நிறுவனம்.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் காராக விரைவில் வரபோகிறது மலிவு விலை சி3... கியா கேரன்ஸுக்கு ஆப்பு ரெடி போலிருக்கே!

வழக்கமான சி3 காரில் இருந்து பல மடங்கு மாறுபட்டுக் காட்சியளிக்கும் வகையில் இந்த அதிக இருக்கைகள் கொண்ட சி3 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் சற்றே மாறுபட்ட தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கார்குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. ஆகையால், அதிக இருக்கை உடன் உருவாகியிருக்கும் சிட்ரோன் சி3 பற்றிய முழு விபரங்களையும் வெளியிட முடியவில்லை.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் காராக விரைவில் வரபோகிறது மலிவு விலை சி3... கியா கேரன்ஸுக்கு ஆப்பு ரெடி போலிருக்கே!

தற்போது விற்பனையில் இருக்கும சிட்ரோன் சி3 கார் டாடா பஞ்ச், மாருதி சுஸுகி இக்னிஸ் உள்ளிட்ட வாகன மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. இதன் விலை ரூ. 5.7 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இத்தகைய மிக குறைவான விலை காரணமாக இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாக சிட்ரோன் சி3 காட்சியளிக்கின்றது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் காராக விரைவில் வரபோகிறது மலிவு விலை சி3... கியா கேரன்ஸுக்கு ஆப்பு ரெடி போலிருக்கே!

இரு விதமான பெட்ரோல் மோட்டார் தேர்வில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டுமே 1.2 லிட்டர், 3 சிலிண்டர் மோட்டார் ஆகும். ஆனால், ஒன்று நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் தொழில்நுட்பத்திலும், மற்றொன்று டர்போசார்ஜட் தரத்திலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டார் 80 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க்கையும், டர்போசார்ஜட் மோட்டார் 109 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் காராக விரைவில் வரபோகிறது மலிவு விலை சி3... கியா கேரன்ஸுக்கு ஆப்பு ரெடி போலிருக்கே!

இவ்விரு மோட்டார்களிலும் மேனுவல் கியர்பாக்ஸ் வசதி வழங்கப்படும். அதேவேலையில், நான் டர்போ மோட்டாரில் கூடுதல் தேர்வாக 5 ஸ்பீடு மேனுவலும், டர்போ பெட்ரோல் மோட்டார் தேர்வில் 6 ஸ்பீடு மேனுவல் தேர்வும் வழங்கப்படுகின்றது. இந்த காரை விரைவில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் தேர்வில் விரைவில் சிட்ரோன் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் காராக விரைவில் வரபோகிறது மலிவு விலை சி3... கியா கேரன்ஸுக்கு ஆப்பு ரெடி போலிருக்கே!

இந்த வாகனத்தின் டெஸ்டிங் பணிகளையும் ஏற்கனவே சிட்ரோன் நிறுவனம் தொடங்கிவிட்டது. இதுதவிர, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தேர்வும் சி3 காரில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கும் சி3 காரும் சற்று மலிவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் காராக விரைவில் வரபோகிறது மலிவு விலை சி3... கியா கேரன்ஸுக்கு ஆப்பு ரெடி போலிருக்கே!

தற்போது இந்திய சந்தையில் சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் காணப்படுகின்றது. பெட்ரோல், டீசல் விலையைக் காட்டிலும் இது சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுதவிர, அதிக ரேஞ்ஜை தரக் கூடியவையாக சிஎன்ஜி வாகனங்கள் இருக்கின்றன. ஆகையால், இந்தியர்கள் மத்தியில் சிஎன்ஜி வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுகின்றது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் காராக விரைவில் வரபோகிறது மலிவு விலை சி3... கியா கேரன்ஸுக்கு ஆப்பு ரெடி போலிருக்கே!

இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக சிட்ரோன் நிறுவனம் விரைவில் சி3-இல் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. இந்த காரை சிஎன்ஜி தேர்வில் மட்டுமில்லைங்க எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் சிட்ரோன் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகை 2023ம் ஆண்டின் முதல் பாதியில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், இந்த காரின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

Most Read Articles
English summary
Citroen c3 7 seats spied while testing video
Story first published: Tuesday, September 13, 2022, 13:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X