முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ள சிட்ரோன் சி3 காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று சிட்ரோன் சி3 (Citroen C3). பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள இரண்டாவது கார் இதுவாகும். இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் கார் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி (C5 Aircross SUV).

முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி, மிகவும் விலை உயர்ந்த கார் ஆகும். ஆனால் சிட்ரோன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான சி3 கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதுதான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிக அளவில் இருந்து வருவதற்கு மிகவும் முக்கியமான காரணமாகும்.

முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

இந்த சூழலில், சி3 காருக்கு முன்பதிவுகளை (Pre-bookings) ஏற்கும் பணிகளை சிட்ரோன் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து வரும் ஜூலை 20ம் தேதி (July 20), சிட்ரோன் சி3 கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

லைவ் (Live) மற்றும் ஃபீல் (Feel) என 2 வேரியண்ட்களில், சிட்ரோன் சி3 கார் விற்பனைக்கு கிடைக்கும். இந்த காரின் உள்ளே 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான கண்ட்ரோல்களுடன் கூடிய தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

செயல்திறனை பொறுத்தவரையில், சிட்ரோன் சி3 காரில் 2 இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை இரண்டுமே பெட்ரோல் இன்ஜின்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி 81 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வை சிட்ரோன் சி3 கார் பெற்றுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

இதுதவிர 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் சிட்ரோன் சி3 கார் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 108 பிஹெச்பி பவரை உருவாக்கும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. சிட்ரோன் சி3 காரில் டீசல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) போன்ற கார்களுடன் சிட்ரோன் சி3 போட்டியிடவுள்ளது. சிட்ரோன் நிறுவனத்தின் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலையே தற்போதைய நிலையில் 32.24 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 33.78 லட்ச ரூபாய் ஆகும்.

முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி சிட்ரோன் சி3 கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரின் விலைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வரும் ஜூலை 20ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், சி3 காரின் விலையை சிட்ரோன் நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

விலையை தெரிந்து கொள்வதற்கு நாம் அதுவரை காத்திருக்க வேண்டும். இருந்தாலும் சிட்ரோன் சி3 காரின் ஆரம்ப விலை 5-5.50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால் சிட்ரோன் சி3 கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

சிட்ரோன் சி3 காரை நீங்கள் வாங்குவதற்கு விரும்பினால், சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யலாம். அல்லது உங்களுக்கு அருகாமையில் இருக்கும் சிட்ரோன் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்களிலும் உங்களால் சிட்ரோன் சி3 காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

சிட்ரோன் சி3 கார் எங்களை பல விதங்களிலும் கவர்ந்துள்ளது. நாங்கள் ஏற்கனவே இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து விட்டதால் இதனை கூறுகிறோம். குறைவான விலையில் பிரீமியம் ஹேட்ச்பேக் அல்லது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்களில் ஏதேனும் ஒரு காரை வாங்க நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு சிட்ரோன் சி3 நல்ல தேர்வாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen c3 bookings open ahead of official launch
Story first published: Friday, July 1, 2022, 14:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X