என்ன சொல்றீங்க! சிட்ரோன் சி3 சிஎன்ஜி தேர்வில் வரபோகுதா? தமிழக சாலையில் சுற்றி திரிந்தோபோது எடுக்கப்பட்ட படம்!

சிட்ரோன் சி3 காரின் சிஎன்ஜி (Citroen C3 CNG) வெர்ஷன் ஸ்பை செய்யப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும், என்னமாதிரியான சிறப்பு வசதிகள் எல்லாம் இந்த வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

என்ன சொல்றீங்க! சிட்ரோன் சி3 சிஎன்ஜி தேர்வில் வரபோகுதா? தமிழக சாலையில் சுற்றி திரிந்தோபது எடுக்கப்பட்ட படங்கள்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் அண்மையில் சி3 (Citroen C3) ஹேட்ச்பேக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் நிலவி வந்தநிலையில் இந்த காரை யாரும் எதிர்பார்த்திராத மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிட்ரோன் நிறுவனம். பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே இக்கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

என்ன சொல்றீங்க! சிட்ரோன் சி3 சிஎன்ஜி தேர்வில் வரபோகுதா? தமிழக சாலையில் சுற்றி திரிந்தோபது எடுக்கப்பட்ட படங்கள்!

இந்த நிலையை மாற்றும் விதமாக, அதாவது, கூடுதல் மோட்டார் தேர்வை சி3 கார் மாடலில் வழங்கும் முயற்சியில் சி3 நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் சிஎன்ஜி வெர்ஷனில் உருவாக்கியிருக்கும் சி3 கார் மாடல் இந்திய சாலையில் ஸ்பை செய்யப்பட்டிருக்கின்றது. ஆம், நிறுவனம் சிஎன்ஜி வெர்ஷனில் சி3 காரை உருவாக்கியிருக்கின்றது.

என்ன சொல்றீங்க! சிட்ரோன் சி3 சிஎன்ஜி தேர்வில் வரபோகுதா? தமிழக சாலையில் சுற்றி திரிந்தோபது எடுக்கப்பட்ட படங்கள்!

விரைவில் இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை முன்னிட்டு தற்போது அவ்வாகனம் தீவிர பரலபரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை இந்த பதிவில் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். காடிவாடி தளமே இதுகுறித்த படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

என்ன சொல்றீங்க! சிட்ரோன் சி3 சிஎன்ஜி தேர்வில் வரபோகுதா? தமிழக சாலையில் சுற்றி திரிந்தோபது எடுக்கப்பட்ட படங்கள்!

அந்த படத்தில் சி3 கார் சிஎன்ஜி டெஸ்டிங் கிட்டுடன் சாலையில் இயங்கிக் கொண்டிருப்பதைக் காண்பிக்கின்றது. ஆனால், இக்காரின் உருவம் தெரியா வண்ணம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது ஓர் பரிசோதனை மாடல் என்பதாலும், சிஎன்ஜி வெர்ஷனில் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் மாற்றங்கள் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவும் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் அவ்வாகனத்தை சிட்ரோன் நிறுவனம் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றது.

என்ன சொல்றீங்க! சிட்ரோன் சி3 சிஎன்ஜி தேர்வில் வரபோகுதா? தமிழக சாலையில் சுற்றி திரிந்தோபது எடுக்கப்பட்ட படங்கள்!

இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களுக்கு பல மடங்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாகவே இந்த பிரிவை டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்கள் விரிவாக்கும் செய்கின்ற வகையிலான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில், டாடா மோட்டார்ஸ் அதன் டிகோர் கார் மாடலில் மூன்றாவதாக ஓர் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுதவிர, அல்ட்ராஸ் கார் மாடலில் புதிதாக சிஎன்ஜி தேர்வை அறிமுகப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

என்ன சொல்றீங்க! சிட்ரோன் சி3 சிஎன்ஜி தேர்வில் வரபோகுதா? தமிழக சாலையில் சுற்றி திரிந்தோபது எடுக்கப்பட்ட படங்கள்!

இதேபோல், மாருதி சுஸுகி நிறுவனமும் அதன் புதுமுக கார் மாடல்கள் சிலவற்றில் சிஎன்ஜி தேர்வை அறிமுகம் செய்யும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. சமீபத்தில் ஸ்விஃப்ட் கார் மாடலில் இந்நிறுவனம் முதல் முறையாக சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது, ரூ. 8 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

என்ன சொல்றீங்க! சிட்ரோன் சி3 சிஎன்ஜி தேர்வில் வரபோகுதா? தமிழக சாலையில் சுற்றி திரிந்தோபது எடுக்கப்பட்ட படங்கள்!

இந்த நிலையிலேயே சிஎன்ஜி மார்க்கெட்டில் தன்னுடய பங்கினை வகிக்கும் விதமாக சிட்ரோன் நிறுவனம் அதன் சி3 காரை தயார்படுத்தி வருகின்றது. சிட்ரோன் சி3 தற்போது இந்திய சந்தையில் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் மோட்டார் ஆகிய இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவையிரண்டும் சூப்பரான பவரை வெளியேற்றக் கூடியவை ஆகும்.

என்ன சொல்றீங்க! சிட்ரோன் சி3 சிஎன்ஜி தேர்வில் வரபோகுதா? தமிழக சாலையில் சுற்றி திரிந்தோபது எடுக்கப்பட்ட படங்கள்!

இதில், நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டாரிலேயே சிஎன்ஜி வெர்ஷனை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிஎன்ஜி கிட்டை கூடுதலாக வழங்க இருக்கின்ற காரணத்தினால், சி3 காரின் விலை சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்திய சந்தையில் சிட்ரோன் சி3 கார் ரூ. 6 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

என்ன சொல்றீங்க! சிட்ரோன் சி3 சிஎன்ஜி தேர்வில் வரபோகுதா? தமிழக சாலையில் சுற்றி திரிந்தோபது எடுக்கப்பட்ட படங்கள்!

இந்த வாகனத்தின் மிகக் குறைவான விலைக்கு காரணம், சிட்ரோன் நிறுவனம் சி3இன் உற்பத்தியை முழுக்க முழுக்க உள்ளூர் மயமாக்கியிருக்கின்றது. இதன் விளைவாகவே ரூ. 5.7 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து சிட்ரோன் சி3 விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த காரின் வருகை மாருதி சுஸுகி இக்னிஸ், டாடா பஞ்ச், நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

என்ன சொல்றீங்க! சிட்ரோன் சி3 சிஎன்ஜி தேர்வில் வரபோகுதா? தமிழக சாலையில் சுற்றி திரிந்தோபது எடுக்கப்பட்ட படங்கள்!

சிட்ரோன் நிறுவனம் அதன் பெட்ரோல் வெர்ஷனைப் போலவே சிஎன்ஜி வெர்ஷன் சி3 காரையும் உள்ளூர் உற்பத்தியாக உருவாக்க இருக்கின்றது. 90 சதவீதம் இதன் உற்பத்தி உள்ளூர் மயமாகக் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. ஆகையால், இதுவும் சற்று குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சி3 சிஎன்ஜி வெர்ஷனில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் டிரான்ஸ் மிஷன் போன்ற சூப்பரான அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், இதன் வருகை எப்போது அமையும் என்கிற அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கூடிய விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen c3 cng spied while testing here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X