பிரேசிலில் துவங்கியது சிட்ரோயன் சி3 எஸ்யூவி கார்கள் உற்பத்தி!! இந்தியாவில் இதுதான் விற்பனைக்குவர உள்ளது!

இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்குவரவுள்ள சி3 காம்பெக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை பிரேசில் நாட்டில் உள்ள தொழிற்சாலையில் சிட்ரோயன் துவங்கியுள்ளது. இது தொடர்பாக வெளிவந்துள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரேசிலில் துவங்கியது சிட்ரோயன் சி3 எஸ்யூவி கார்கள் உற்பத்தி!! இந்தியாவில் இதுதான் விற்பனைக்குவர உள்ளது!

இந்தியாவில் கடந்த சில வருடங்களில் எஸ்யூவி கார்களின் ட்ரெண்ட் வேகமாக நாடு முழுவதும் பரவியுள்ளது. இதனை நன்கு புரிந்துக்கொண்ட சிட்ரோயன் 2020இல் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் மூலம் இந்திய சந்தையில் களம்புகுந்தது. அதனை தொடர்ந்து மேலும் ஒரு எஸ்யூவி மாடலாக சி3 காம்பெக்ட்-எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ளது.

பிரேசிலில் துவங்கியது சிட்ரோயன் சி3 எஸ்யூவி கார்கள் உற்பத்தி!! இந்தியாவில் இதுதான் விற்பனைக்குவர உள்ளது!

புதிய சிட்ரோயன் சி3 காரின் இந்திய அறிமுகத்தினை வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் எதிர்பார்க்கிறோம். இதற்கிடையில், பிரேசிலிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்திய-சி3 காரின் தயாரிப்பு பணிகள் அந்த நாட்டின் போர்டோ ரியல் பகுதியில் உள்ள சிட்ரோயன் தொழிற்சாலையில் துவங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள படங்களை தான் இங்கே காண்கிறீர்கள்.

பிரேசிலில் துவங்கியது சிட்ரோயன் சி3 எஸ்யூவி கார்கள் உற்பத்தி!! இந்தியாவில் இதுதான் விற்பனைக்குவர உள்ளது!

இந்த சிட்ரோயன் காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு விற்பனையில் டாடா பஞ்ச், நிஸான் மேக்னைட் உள்ளிட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் போட்டியாக இருக்கும் அதேநேரத்தில், இத்தகைய தோற்றத்தை கொண்டிருப்பினும், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் போன்ற பிரபலமான ஹேட்ச்பேக் கார்களும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. சி5 ஏர்க்ராஸை காட்டிலும் குறைந்த விலையில் கொண்டுவரப்படுவதால், சி3 எஸ்யூவி மாடலின் அறிமுகத்திற்கு பிறகே இந்திய சந்தையில் சிட்ரோயன் பிராண்ட்டின் பயணம் துவங்கும் என கூறப்படுகிறது.

பிரேசிலில் துவங்கியது சிட்ரோயன் சி3 எஸ்யூவி கார்கள் உற்பத்தி!! இந்தியாவில் இதுதான் விற்பனைக்குவர உள்ளது!

உலகளாவிய வெளியீட்டின்போது தயாரிப்பு நிறுவனமும் புதிய தலைமுறை சி3 காம்பெக்ட் எஸ்யூவி காரினை ஆஹா... ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளது. முதன்முதலாக சி3 எஸ்யூவி மாடலை சர்வதேச சந்தைகளில் 2002இல் சிட்ரோயன் அறிமுகப்படுத்தியது. அதன்படி பார்க்கும்போது கிட்டத்தட்ட 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் இந்த மாடலின் புதிய தலைமுறையே இந்தியாவிலும், பிரேசிலிலும் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

பிரேசிலில் துவங்கியது சிட்ரோயன் சி3 எஸ்யூவி கார்கள் உற்பத்தி!! இந்தியாவில் இதுதான் விற்பனைக்குவர உள்ளது!

தோற்றத்தை பொறுத்தவரையில், சி5 ஏர்க்ராஸை அப்படியே சிறியதாக சுருக்கியதுபோல் சி3 காட்சியளிக்கிறது. ஏனெனில் இதிலிலும் சிட்ரோயன் பிராண்டின் தற்போதைய மாடர்ன் காலத்திற்கான அனைத்து தொடுதல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வகையில் பல-வண்ண ஹைலைட்களுடன் உள்ள சி3 காரின் முன்பக்கத்தில் நேர்த்தியான க்ரில் அமைப்பு, பிளவுப்பட்ட வடிவில எல்இடி ஹெட்லைட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பிரேசிலில் துவங்கியது சிட்ரோயன் சி3 எஸ்யூவி கார்கள் உற்பத்தி!! இந்தியாவில் இதுதான் விற்பனைக்குவர உள்ளது!

சி5 ஏர்க்ராஸில் உள்ளதுபோல், உடற்பகுதியை சுற்றிலும் கருப்பு நிற க்ளாடிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவையே காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன. பின்பக்கத்தில் சதுர வடிவிலான எல்இடி டெயில்லைட்கள் நம்மை வசீகரிக்கின்றன. ஒட்டு மொத்தமாக வெளிப்புறத்தில் புதிய தலைமுறை சி3 காம்பெக்ட் எஸ்யூவி மாடல் வெவ்வேறான உடல் மற்றும் மேற்கூரை நிறங்களை ஏற்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் துவங்கியது சிட்ரோயன் சி3 எஸ்யூவி கார்கள் உற்பத்தி!! இந்தியாவில் இதுதான் விற்பனைக்குவர உள்ளது!

உட்புறத்தில் டேஸ்போர்டில் ஒவ்வொரு இடத்திலும் இருக்க வேண்டிய கண்ட்ரோல்கள் அந்தந்த இடங்களில் கணகச்சிதமாக இருக்க, வெளிப்புறத்தை போல் டேஸ்போர்டிலும் ஏசி துளைகள் போன்ற சில பாகங்கள் ஸ்டைலிஷாக மாற்று-வண்ண நிறங்களில் வழங்கப்பட்டுள்ளன. 1-லிட்டர் க்ளோவ் பெட்டகம், முன்பக்கத்தில் இரு 2-லிட்டர் கதவு பாக்கெட்கள் மற்றும் பின்பக்கத்தில் ஒரு 1-லிட்டர் கதவு பாக்கெட் என காரின் கேபினுக்குள் ஆங்காங்கே தேவையான இடவசதிகள் உள்ளன.

பிரேசிலில் துவங்கியது சிட்ரோயன் சி3 எஸ்யூவி கார்கள் உற்பத்தி!! இந்தியாவில் இதுதான் விற்பனைக்குவர உள்ளது!

இவை தவிர்த்து, மைய கன்சோலில் இடவசதி மற்றும் கப் ஹோல்டர்களும் இடம்பெற்றுள்ளன. பின்பக்கத்தில் பொருட்களை வைத்து செல்ல 315-லிட்டர் கொள்ளளவில் இடவசதியை சி3 எஸ்யூவி கார் கொண்டுள்ளது. டேஸ்போர்டில், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடிய 10.1 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் 3 யுஎஸ்பி சார்ஜிங் துளைகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரேசிலில் துவங்கியது சிட்ரோயன் சி3 எஸ்யூவி கார்கள் உற்பத்தி!! இந்தியாவில் இதுதான் விற்பனைக்குவர உள்ளது!

பயணிகளின் பாதுகாப்பிற்கு இரு முன்பக்க காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் சி3 விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிரான்ஸ்மிஷனுக்கு மேனுவல் & ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படலாம்.

பிரேசிலில் துவங்கியது சிட்ரோயன் சி3 எஸ்யூவி கார்கள் உற்பத்தி!! இந்தியாவில் இதுதான் விற்பனைக்குவர உள்ளது!

இந்தியாவில் சி3 காம்பெக்ட் எஸ்யூவி காரினை தமிழகத்தில், திருவள்ளூரில் உள்ள தொழிற்சாலையில் சிட்ரோயன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், நடப்பு 2022ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சிட்ரோயன் சி3 மாடலின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.5 லட்சங்களில் இருந்து ரூ.10 லட்சங்கள் வரையில் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen c3 compact suv production starts in brazil india launch soon details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X