Just In
- 1 hr ago
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- 2 hrs ago
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- 4 hrs ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- 5 hrs ago
மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!
Don't Miss!
- Movies
வருண் அக்ஷராவுக்கு திருமணமா ?... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!
- News
ஆளுங்கட்சி பிரமுகரின் காரில் சடலம்.. "அடிச்சு கொன்றது இவர்தான்" உறவினர்கள் புகாரால் அதிர்ச்சி!
- Finance
புதிய சாதனை படைத்த இந்தியா.. ஆனா இப்போ நிலைமை வேற..!
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Sports
"ஓய்வு நியாயமாக இருக்காது".. சிஎஸ்கேவின் கடைசிப்போட்டி.. கேப்டன் தோனி கூறிய முக்கிய கருத்து!
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு வருகிறது சிட்ரோன் சி3 கார்... என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
இந்தியாவில் சிட்ரோன் சி3 கார் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு காலடி எடுத்து வைத்தது. அந்த நிறுவனத்தின் முதல் காராக சி5 ஏர்க்ராஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய சந்தையில் ஹூண்டாய் டூஸான் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுடன் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் பிரீமியம் மிட்-சைஸ் எஸ்யூவி கார் போட்டியிட்டு வருகிறது.

இந்த சூழலில் சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது தயாரிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. சிட்ரோன் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சி3 காரை உலகளாவிய அளவில் வெளியிட்டது. இந்த கார்தான் இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சிசி21 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் இந்த க்ராஸ்ஓவர் இந்தியாவில் சோதனை செய்யப்படும்போது பலமுறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக சிட்ரோன் சி3 கார் அர்ஜென்டினாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டபோது சி3 காரை எஸ்யூவி என அழைப்பதில் இருந்து சிட்ரோன் ஒதுங்கியே இருந்தது.

மாறாக இந்த கார் ஹேட்ச்பேக் என குறிப்பிடப்பட்டது. ஆனால் எஸ்யூவி காரை மனதில் வைத்து சி3 காரை டிசைன் செய்திருப்பதாக சிட்ரோன் நிறுவனம் குறிப்பிட்டது. கம்பீரமான தோற்றம், பாடி கிளாடிங்குகள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை சிட்ரோன் சி3 காருக்கு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் போன்ற தோற்றத்தை வழங்குகின்றன.

வெளிப்புறத்தை பொறுத்தவரையில், இந்த காரின் எல்இடி டெயில்லேம்ப்கள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளன. இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சிட்ரோன் சி3 காரில், வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான பயணத்தை வழங்கும் வகையில் ஏராளமான வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிட்ரோன் சி3 காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. சிட்ரோன் நிறுவனம் சி3 காருக்கு சவாலான விலையை நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே சிட்ரோன் நிறுவனத்திற்கு அதிக விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் தயாரிப்பாக சி3 இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டாடா பன்ச் மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் உள்ளிட்ட கார்களுடன் சிட்ரோன் சி3 கார் போட்டியிடவுள்ளது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கலாம்.

இதன்படி நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கும் சிட்ரோன் சி3 போட்டியாக அமையும். சிட்ரோன் சி3 காரின் ஆரம்ப விலை 5 லட்ச ரூபாயாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் ஐ10 நியோஸ் ஆகிய கார்களுக்கும் சிட்ரோன் சி3 போட்டியாக அமையலாம். நடப்பு 2022ம் ஆண்டின் முதல் பாதியில் சிட்ரோன் நிறுவனம் சி3 காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன்படி பார்த்தால் வரும் ஜூன் மாதத்திற்கு உள்ளாக சிட்ரோன் சி3 இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம்.
Note: Images used are for representational purpose only.