இந்தியாவில் தரமான சம்பவங்களை செய்யும் சிட்ரோன்.. மலிவு விலை சி3 காரை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்ய திட்டம்!

சிட்ரோன் (Citroen) நிறுவனம் இந்தியாவில் யாரும் எதிர்பார்த்திராத சில செயல்களைச் செய்து வருகின்றது. அந்தவகையில் அண்மையில் சி3 புதுமுக காரை மிக மிக குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அதே காரை விரைவில் மலிவு விலை எலெக்ட்ரிக் காராகவும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் தரமான சம்பவங்களை செய்யும் சிட்ரோன்... மலிவு சி3 காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகம் செய்ய திட்டம்!

ஃப்ரெஞ்சு நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் (Citroen) அண்மையில் இந்திய சந்தையில் அதன் புதுமுக கார் சி3 ( C3)-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. யாரும் எதிர்பாரத்திராத மிகக் குறைவான விலையில் அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரையே நிறுவனம் வெகு விரைவில் மின்சார வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தரமான சம்பவங்களை செய்யும் சிட்ரோன்... மலிவு சி3 காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகம் செய்ய திட்டம்!

தற்போது டாடா நிறுவனம் அதன் புகழ்பெற்ற நெக்ஸான் காரை மின்சார வெர்ஷனில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பதைப் போல, சிட்ரோன் நிறுவனமும் அதன் சி3 காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. மேலும், தற்போதையே பெட்ரோல் வெர்ஷனைப் போலவே இந்த காரும் குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் தரமான சம்பவங்களை செய்யும் சிட்ரோன்... மலிவு சி3 காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகம் செய்ய திட்டம்!

சிட்ரோன் நிறுவனம் சி3 எலெக்ட்ரிக் காரை முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்புகளைக் கொண்டு கட்டமைக்க இருக்கின்றது. இதன் தயாரிப்பிற்காக குளோபல் மாடுலர் சிஎம்பி பிளாட்பாரத்தை அது பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேலையில், நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமான பியூஜியோட் இ-208 காரின் சிறப்பம்சங்களைப் பயன்படுத்தி இந்த காரை உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்தியாவில் தரமான சம்பவங்களை செய்யும் சிட்ரோன்... மலிவு சி3 காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகம் செய்ய திட்டம்!

இந்த வாகனம் தற்போது ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 50 kWh பேட்டரி பேக் மற்றும் 136 பிஎஸ் மற்றும் 260 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டார் ஆகிய வசதிகளுடன் இ208 எலெக்ட்ரிக் கார் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான அம்சங்களுடனேயே சிட்ரோன் சி3 நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை.

இந்தியாவில் தரமான சம்பவங்களை செய்யும் சிட்ரோன்... மலிவு சி3 காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகம் செய்ய திட்டம்!

அதேவேலையில் ஒரு முழு சார்ஜில் 300 அதிகமான கிமீ ரேஞ்ஜை அது வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இதன் வருகை தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் நெக்ஸான் இவி-க்குக் கடுமையானப் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி டாடாவின் மற்றுமொரு எலெக்ட்ரிக் வாகனமான டிகோர் இவி-க்கும் சி3 எலெக்ட்ரிக் காரின் வருகை போட்டியை ஏற்படுத்த இருக்கின்றது.

இந்தியாவில் தரமான சம்பவங்களை செய்யும் சிட்ரோன்... மலிவு சி3 காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகம் செய்ய திட்டம்!

தற்போது விற்பனையில் இருக்கும் சி3-இன் ஃப்யூவல் வெர்ஷன் ரூ. 5.71 லட்சம் தொடங்கி ரூ. 8.06 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அதிக பிரீமியம் அம்சங்களுடன் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் காராக சி3 இருக்கின்றது. சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் வெர்ஷனின் வருகை இந்தியாவில் 2023ஆம் ஆண்டிற்கு அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தரமான சம்பவங்களை செய்யும் சிட்ரோன்... மலிவு சி3 காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகம் செய்ய திட்டம்!

இதற்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக 2022 டிசம்பர் மாதம் பொதுப்பார்வைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 13 லட்சத்திற்கும் குறைவான விலையில் அக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது ஆட்டோமேட்டிக் ஏசி, ரியர் பகுதியில் வைப்பர், எலெக்ட்ரானிக்கலி அட்ஜெஸ்டபிள் ஓஆர்பிஎம், ரியர் டிஃபாக்கர் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் தரமான சம்பவங்களை செய்யும் சிட்ரோன்... மலிவு சி3 காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகம் செய்ய திட்டம்!

சிட்ரோன் சி3 ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் விலை குறைவான வாகனமாக விற்பனைக்கு வந்திருந்தாலும் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. 10.25 அங்குல இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஒயர் லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே சப்ஃபோர்ட் உடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த திரை வாயிலாக எக்கசக்க சிறப்பு வசதிகளை சி3 பயனர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவில் தரமான சம்பவங்களை செய்யும் சிட்ரோன்... மலிவு சி3 காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகம் செய்ய திட்டம்!

மேலும், மற்ற கார்களில் இருந்து இந்த சி3 காரை மாறுபட்டுக் காட்சியளிக்க வைக்கும் விதமாக இக்காரின் ஜன்னல்களை திறக்கும் பவர் பட்டன்கள் கியர் லிவருக்கு பின்னால் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவேதான் இக்கார் டாடா பஞ்ச், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் போன்றவற்றிற்கு சிறந்த போட்டியாளனாகப் பார்க்கப்படுகின்றது. பொதுவாக, இந்த பட்டன்கள் கதவுகளில் வழங்கப்படும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமாக சி3 விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Source: CarDekho

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen c3 electric to be unveiled by december 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X