டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

இந்திய சந்தையில் மிக விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிட்ரோன் சி3 கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

பிரான்ஸை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று சிட்ரோன் (Citroen). இந்த நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டுதான் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. இந்திய சந்தைக்கான சிட்ரோன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக சி5 ஏர்க்ராஸ் (C5 Aircross) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

இதற்கு அடுத்தபடியாக சி3 (C3) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு சிட்ரோன் நிறுவனம் தயாராகி வருகிறது. இது காம்பேக்ட் க்ராஸ்ஓவர் (Compact Crossover) கார் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சிட்ரோன் சி3 கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் நிலவி வருவதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். சிட்ரோன் சி3 கார் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படவுள்ளது. எனவே சிட்ரோன் நிறுவனத்தால் சி3 காருக்கு மிக சவாலான விலையை நிர்ணயம் செய்ய முடியும். சிட்ரோன் சி3 காரின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

இருப்பினும் சிட்ரோன் சி3 காரின் ஆரம்ப விலை வெறும் 5.5 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 8 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. சிட்ரோன் நிறுவனம் வெகு விரைவில் சி3 காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அப்போது அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படும்.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா பன்ச் (Tata Punch) காருடன் சிட்ரோன் சி3 போட்டியிடும். அத்துடன் மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும்.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

சிட்ரோன் நிறுவனம் களமிறக்கிய முதல் காரான சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 32.24 லட்ச ரூபாய் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 33.78 லட்ச ரூபாயாக உள்ளது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இப்படிப்பட்ட ஒரு பிரீமியம் எஸ்யூவி காரை அறிமுகம் செய்த நிறுவனத்திடம் இருந்து குறைவான விலையில் ஒரு கார் வரவுள்ளதால், வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

இப்படி அனைத்து தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சிட்ரோன் சி3 கார் குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சிட்ரோன் சி3 காரின் டிசைனை பொறுத்தவரையில், இது அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். சிட்ரோன் நிறுவனத்தின் குடும்ப டிசைன் மொழியை இது கொண்டிருக்கும்.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

இந்த காரின் முன் பகுதியில் நேர்த்தியான க்ரில் அமைப்பு ஸ்பிளிட் ஹெட்லைட்கள் வழங்கப்படும். அத்துடன் காரை சுற்றிலும் பாடி கிளாடிங்கும் இடம்பெற்றிருக்கும். இது காருக்கு கம்பீரமான தோற்றத்தை தருவதுடன், எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் போலவும் காட்சியளிக்க வைக்கும். இன்டீரியரை பொறுத்தவரையில், பல்வேறு வசதிகளை இந்த கார் பெற்றிருக்கும்.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

இதில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் கூடிய 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது. அத்துடன் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீலையும் இந்த கார் கொண்டிருக்கும். இதில், பல்வேறு கண்ட்ரோல்களுக்கான பட்டன்களும் வழங்கப்பட்டிருக்கும்.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

இந்த காரின் இன்டீரியரில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்தான். காரின் வேகம் மற்றும் காரை பற்றிய பல்வேறு தகவல்களை இது காண்பிக்கும். இது அடிப்படையில், ஒரு சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். சிஎம்பி எனப்படும் 'காமன் மாடுலர் பிளாட்பார்ம்' (CMP - Common Modular Platform) அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,540 மிமீ ஆகும். பின் இருக்கையில் அமரும் பயணிகளுக்கும் மிக சிறப்பான லெக்ரூம் கிடைக்கும் என சிட்ரோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் பின் இருக்கையில் 653 மிமீ லெக்ரூம் கிடைக்கும். அதே நேரத்தில் சிட்ரோன் சி3 காரின் பூட் ஸ்பேஸ் 315 லிட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

அதே சமயம் சிட்ரோன் நிறுவனம் சி3 காரில் இரண்டு இன்ஜின் தேர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை இரண்டுமே பெட்ரோல் இன்ஜின்களாக இருக்கும். இதன்படி 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளை இந்த கார் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டாடாவிற்கு தலைவலி... மிக குறைவான விலையில் இந்தியாவை கலக்க வரும் புதிய கார்... ஆச்சரியமா இருக்கே!

கியர் பாக்ஸை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் சி3 கார் வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக நிறைய வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen c3 here s everything you need to know
Story first published: Friday, May 27, 2022, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X