ஜூலை 20 இல் அறிமுகமாகிறது புதிய கார் மாடல்... இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா அசந்துருவீங்க!

நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருக்கும் சிட்ரோன் சி3 (Citroen C3) எஸ்யூவி கார் வரும் ஜூலை 20ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

ஃபிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் (Citroen) வெகு விரைவில் இந்தியாவிற்கான அதன் இரண்டாவது தயாரிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதற்காக நிறுவனம் சி3 (C3) எனும் மாடலை தயார் செய்திருக்கின்றது. இந்த காரின் வருகை முன்னரே அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் காரின் அறிமுகம் தள்ளிப்போகியது.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

இதனால் சி3 இன் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகினர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அவர்களை மகிழ்விக்கும் வகையில் சிட்ரோன் நிறுவனம் சி3 காரின் வருகையை உறுதிப்படுத்தியிருக்கின்றது. அதாவது அதிகாரப்பூர்வ அறிமுக தேதியை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

வரும் ஜூலை 20 ஆம் தேதி அன்றே சி3 அறிமுகமாக இருக்கின்றது. இதன் அறிமுகத்தைத் தொடர்ந்து அதே ஜூலை மாதம் 1ம் தேதியில் இருந்து காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. சிட்ரோன் நிறுவனம் இந்த காரை நாட்டில் பொது பார்வைக்குக் கொண்டு வந்த ஒரு வருடங்கள் ஆகப் போகின்றன.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

இத்தகைய நீண்ட காலம் கழித்தே சி3 கார் மாடலின் வருகையை அதிகாரப்பூர்வமாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. நிறுவனம் தற்போது வரை ஒற்றை மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. சி5 ஏர்கிராஸ் (C5 Aircross) எனும் எஸ்யூவி ரக காரையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்த கார் மாடலுடன் வெகு விரைவில் சி3 எஸ்யூவியும் இணைய இருக்கின்றது. இக்கார் மாடலும் சி5 ஏர்கிராஸைப் போலவே அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய வாகனமாகக் காட்சியளிக்கின்றது. சிட்ரோன் நிறுவனம் சி3-யை இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே தயார் செய்திருக்கின்றது. ஆமாங்க இந்த காரை தனது திருவள்ளூர் மற்றும் ஓசூர் ஆலையில் வைத்தே சிட்ரோன் உருவாக்குகின்றது.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

இதன் 90 சதவீதம் உற்பத்தி உள்நாட்டிலேயே வைத்து செய்யப்படுவது குறிப்பிடத்தகுந்தது. காரின் கட்டுமானத்திற்கு காமன் மாடுலர் பிளாட்பாரத்தையே சிட்ரோன் நிறுவனம் பயன்படுத்துகின்றது. ஆகையால், கவர்ச்சிக்கும், அதிக இட வசதிக்கும் சற்றும் குறைவில்லாத வாகனமாக சி3 காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

சிட்ரோன் சி3 காரின் வீல் பேஸ் 2,540 மி.மீட்டரைக் கொண்டுள்ளது. பயணிகளுக்கு அதிக இட வசதியை வழங்கும் பொருட்டு இத்தகைய பெரிய ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பின் பக்க பயணிகளுக்கு அதிக லெக்-ரூமை வழங்கும் வகையிலும் இக்காரை சிட்ரோன் வடிவமைத்திருக்கின்றது. துள்ளியமாகக் கூற வேண்டும் எனில் 653 மி.மீ., லெக்ரூம் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்திலும் மிக சிறப்பான அளவுகளை சி3 கொண்டுள்ளது.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

ஆகையால், தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் டாடா பஞ்ச் போன்ற சிறிய ரக எஸ்யூவி கார்களுக்கு இதன் வருகைக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் அதிக இட வசதியைக் கொண்ட வாகனம் மட்டுமல்ல, மிக தாரளமான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட காராகவும் அது காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

காருக்குள் 10 அங்குல பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, யுஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜர் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

சிட்ரோன் சி3 வைப், எனர்ஜி மற்றும் எலகன்ஸ் ஆகிய மூன்று அடிப்படை ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், இதனை 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேடட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலும் சிட்ரோன் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

இதில், முதல் மோட்டார் அதிகபட்சமாக 82 பிஎஸ் பவரையும், இரண்டாவது பெட்ரோல் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும் வெளியேற்றும் திறனைக் கொண்டவை ஆகும். இந்த மோட்டார்கள் அதி திறன் வாய்ந்தவை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வெறும் பத்தே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இக்காரை பெற்றுக் கொள்ள முடியும். தற்போது அராய் அறிவித்திருக்கும் தகவலின்படி, 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேடட் பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 19.8 கிமீ மைலேஜையும், டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 19.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

பிரீமியம் வசதிகள் அதிகம் கொண்ட சிட்ரோன் சி3 இவ்வளவு சூப்பரான மைலேஜை வழங்குவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. இதன் போட்டியாளரான டாடா பஞ்சும் இதுமாதிரியான 20க்கும் குறைவான கிமீ மைலேஜையே வழங்கும் வாகனமாக உள்ளது.

இந்தியாவில் வரும் ஜூலை 20 அன்று அறிமுகமாகிறது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்... இதோட மைலேஜ் திறன் தெரிஞ்சா அசந்துருவீங்க!

ஒட்டுமொத்தமாக ஆறு விதமான நிற தேர்வுகளில் சிட்ரோன் சி3 எஸ்யூவி காரை பெற முடியும். இதில் இரண்டு மட்டும் இரு நிற கலவை தேர்வில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸெஸ்டி ஆரஞ்சு, பிளாட்டினம் கிரே, ஸ்டீல் கிரே மற்றும் போலார் வெள்ளை ஆகிய ஒற்றை நிற தேர்விலும், ஸெஸ்டி ஆரஞ்சு - பிளாக் ரூஃப் மற்றும் போலார் ஒயிட் - ஸெஸ்டி ஆரஞ்சு ரூஃப் ஆகிய ட்யூவல் டோனிலும் அந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen c3 launch date revealed here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X