ஆந்திராவில் சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் சி3!! எத்தனால்-பெட்ரோலில் இயங்கவுள்ள முதல் காம்பெக்ட் எஸ்யூவி!

சிட்ரோன் சி3 சப்-4மீ எஸ்யூவி காரின் சோதனை மாதிரி ஒன்று முழு மறைப்புகளுடன் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமது டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆந்திராவில் சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் சி3!! எத்தனால்-பெட்ரோலில் இயங்கவுள்ள முதல் காம்பெக்ட் எஸ்யூவி!

சி5 ஏர்க்ராஸ் மாடலின் மூலம் இந்திய சந்தையில் நுழைந்த பிரெஞ்சு கார் பிராண்டான சிட்ரோன் அடுத்ததாக நமது இந்தியாவில் அறிமுகப்படுத்த பல கார்களை சோதித்து வருகிறது. இதில் சி3 காம்பெக்ட் எஸ்யூவி மிக முக்கியமானது ஆகும். ஏனெனில் சிட்ரோனின் முதல் மாடலான சி5 ஏர்க்ராஸ் சற்று விலைமிக்க நடுத்தர-அளவு எஸ்யூவி காராகவே பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் சி3!! எத்தனால்-பெட்ரோலில் இயங்கவுள்ள முதல் காம்பெக்ட் எஸ்யூவி!

சிட்ரோன் சி5 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.32.24 லட்சங்களில் இருந்து ரூ.33.78 லட்சங்கள் வரையில் உள்ளன. ஆனால் சிட்ரோன் சி3 ஆனது பலத்தரப்பட்ட மக்கள்கள் வாங்கக்கூடிய விலையில், அளவில் சிறியதாக காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்பட உள்ளது. இதனால் சி3 -இன் அறிமுகத்திற்கு பிறகே இந்தியாவில் சிட்ரோன் பிராண்ட் பிரபலமடைய துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் சி3!! எத்தனால்-பெட்ரோலில் இயங்கவுள்ள முதல் காம்பெக்ட் எஸ்யூவி!

கடந்த பல மாதங்களாக, சிட்ரோன் சி3 கார்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது ஆந்திர பிரதேசத்தில் முழு மறைப்புகளுடன் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள சி3 சோதனை மாதிரியின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவு கடந்த சில வருடங்களில் பலத்த போட்டி மிகுந்ததாக மாறியுள்ளது.

ஆந்திராவில் சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் சி3!! எத்தனால்-பெட்ரோலில் இயங்கவுள்ள முதல் காம்பெக்ட் எஸ்யூவி!

இதனால் அறிமுகத்திற்கு பிறகு சிட்ரோன் சி3-க்கு வலுவான போட்டி உள்ளது. தற்சமயம் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சொனெட் உள்ளிட்டவை முக்கியமான மாடல்களாக விளங்குகின்றன. சி3 காரினை இந்திய வாடிக்கையாளர்களுக்கும், இந்திய சாலைகளுக்கும் ஏற்ப பிரத்யேகமாக சிட்ரோன் வடிவமைத்து வருகிறது.

ஆந்திராவில் சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் சி3!! எத்தனால்-பெட்ரோலில் இயங்கவுள்ள முதல் காம்பெக்ட் எஸ்யூவி!

இந்த பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனத்தின் காமன் மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுவரும் சி3 எஸ்யூவி கார் குறைவான விலையில் கொண்டுவர வேண்டி, குறைவான உற்பத்தி செலவில் வடிவமைக்கப்பட்டு வருகிறதாம். அதுமட்டுமின்றி, போட்டி அதிகம் என்பதால், தனது மாடலினை கூட்டத்தில் தனித்து தெரிய வைப்பதற்காக சிட்ரோன் கூடுதல் கவனம் செலுத்துகிறது.

ஆந்திராவில் சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் சி3!! எத்தனால்-பெட்ரோலில் இயங்கவுள்ள முதல் காம்பெக்ட் எஸ்யூவி!

அத்துடன் முக்கியமாக, ஏகப்பட்ட தனிப்பயனாக்க தேர்வுகள் சிட்ரோன் சி3 காருக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக சுமார் 78 வெவ்வேறான ஆக்ஸஸரீகள் கூடுதல் விலைகளில் கொடுக்கப்பட உள்ளன. ஆதலால் மற்ற சி3 கார் உரிமையாளர்களிடம் இருந்து தனித்து தெரிய விரும்புவோரும் கவலைப்பட தேவையில்லை. இதில் ஒரு பகுதியாக, மொத்தம் 4 வெளிப்புற உடல் நிறத்தேர்வுகள் சி3 -க்கு கொடுக்கப்பட உள்ளன.

ஆந்திராவில் சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் சி3!! எத்தனால்-பெட்ரோலில் இயங்கவுள்ள முதல் காம்பெக்ட் எஸ்யூவி!

அதேபோல் இதன் மேற்கூரையையும் இரு நிறங்களில் ஒன்றில் வாங்கலாமாம். உட்புறத்தில் சிட்ரோன் சி3 எஸ்யூவி கார் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வழிக்காட்டுதல் உள்ளிட்ட வசதிகளை வழங்கக்கூடிய அளவில் பெரிய 10-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுவரவுள்ளது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கிய அம்சமாக புதிய சிட்ரோன் சி3 நெகிழ்வு-எரிபொருள் என்ஜினை ஏற்றுவர உள்ளதாம்.

ஆந்திராவில் சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் சி3!! எத்தனால்-பெட்ரோலில் இயங்கவுள்ள முதல் காம்பெக்ட் எஸ்யூவி!

இது நடக்குமேயானால், நெகிழ்வு-எரிபொருள் என்ஜினை பெற்ற இந்தியாவின் முதல் எஸ்யூவி காராக சி3 விளங்கும். இதன் மூலமாக இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரினை பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த பெட்ரோல் என இரு விதமான எரிபொருள்களிலும் பயன்படுத்தலாம். சர்வதேச சந்தைகளில் எத்தனால் கலந்த பெட்ரோலின் விலை வழக்கமான பெட்ரோலை காட்டிலும் குறைவானதாக உள்ளது.

ஆந்திராவில் சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் சி3!! எத்தனால்-பெட்ரோலில் இயங்கவுள்ள முதல் காம்பெக்ட் எஸ்யூவி!

புதிய சி3 காரில் சிட்ரோனின் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 130 எச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கு ஏற்ப இந்த என்ஜின் அதிக மைலேஜ் மற்றும் குறைந்த ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் சி3!! எத்தனால்-பெட்ரோலில் இயங்கவுள்ள முதல் காம்பெக்ட் எஸ்யூவி!

இதனுடன் சி3 காம்பெக்ட் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேர்வையும் இந்த பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம் வழங்கலாம். சி5 ஏர்க்ராஸில் மிகவும் சவுகரியமான இருக்கை அமைப்பு வழங்கப்படுகிறது. இதனை சி3-க்கும் தொடர சிட்ரோன் விரும்பினால், காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவிலேயே மிகவும் சொகுசான இருக்கை அமைப்பினை கொண்ட காராக சி3 விளங்கலாம்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen C3 spotted in Andhra Pradesh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X