இந்த புதிய காரின் ரேட் இவ்ளோதானா? மிகவும் குறைவான விலையில் நாளைக்கு லான்ச்! டாடாவின் 5 ஸ்டார் காருக்கு செக்!

இந்திய சந்தையில் தற்போது பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் கார்கள் புதிது புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

Recommended Video

Citroen C3 தமிழ் Review | எதிர்பார்க்கப்படும் விலை,பூட் ஸ்பேஸ், சௌகரியம், செயல்திறன்,மைலேஜ் *Review

இந்த சூழலில், பிரான்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான கார் இந்தியாவில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த புதிய காரின் ரேட் இவ்ளோதானா? எல்லாரும் வாங்கற விலையில் நாளைக்கு லான்ச்! டாடாவின் 5 ஸ்டார் காருக்கு செக்!

பிரான்ஸை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று சிட்ரோன் (Citroen). சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி (Citreon C5 Aircross SUV) காரின் மூலமாக இந்திய சந்தையில் சிட்ரோன் நுழைந்தது. இது மிகவும் விலை உயர்ந்த கார் ஆகும். எனவே இந்திய சந்தையில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.

இந்த புதிய காரின் ரேட் இவ்ளோதானா? எல்லாரும் வாங்கற விலையில் நாளைக்கு லான்ச்! டாடாவின் 5 ஸ்டார் காருக்கு செக்!

இதன் காரணமாக தனது 2வது தயாரிப்பை மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய சிட்ரோன் திட்டமிட்டது. சிட்ரோன் சி3 (Citroen C3) என பெயரிடப்பட்டுள்ள அந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு தயாராகி விட்டது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சிட்ரோன் சி3 கார் நாளை (ஜூலை 20) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த புதிய காரின் ரேட் இவ்ளோதானா? எல்லாரும் வாங்கற விலையில் நாளைக்கு லான்ச்! டாடாவின் 5 ஸ்டார் காருக்கு செக்!

விலை குறைவான கார் என்றாலும் கூட, சிட்ரோன் சி3 காரில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையிலான டிரைவர் இருக்கை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த புதிய காரின் ரேட் இவ்ளோதானா? எல்லாரும் வாங்கற விலையில் நாளைக்கு லான்ச்! டாடாவின் 5 ஸ்டார் காருக்கு செக்!

இதுதவிர 4 ஸ்பீக்கர்கள் மற்றும் டில்ட் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஸ்டியரிங் வீல் ஆகியவையும் சிட்ரோன் சி3 காரில் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் சிட்ரோன் சி3 காரில், 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும்.

இந்த புதிய காரின் ரேட் இவ்ளோதானா? எல்லாரும் வாங்கற விலையில் நாளைக்கு லான்ச்! டாடாவின் 5 ஸ்டார் காருக்கு செக்!

1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனும், 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சிட்ரோன் சி3 காரில், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு கிடைக்காது. எதிர்காலத்தில் வேண்டுமானால் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த புதிய காரின் ரேட் இவ்ளோதானா? எல்லாரும் வாங்கற விலையில் நாளைக்கு லான்ச்! டாடாவின் 5 ஸ்டார் காருக்கு செக்!

இதற்கிடையே இந்த 2 இன்ஜின்களில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 81 பிஹெச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 109 பிஹெச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த புதிய காரின் ரேட் இவ்ளோதானா? எல்லாரும் வாங்கற விலையில் நாளைக்கு லான்ச்! டாடாவின் 5 ஸ்டார் காருக்கு செக்!

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், டாடா பன்ச் (Tata Punch) மைக்ரோ எஸ்யூவி கார்தான், சிட்ரோன் சி3 காரின் மிக முக்கியமான போட்டி மாடலாக இருக்கும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு குறுகிய காலமே ஆகிறது என்றாலும் கூட, டாடா பன்ச் காருக்கு தற்போது பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய காரின் ரேட் இவ்ளோதானா? எல்லாரும் வாங்கற விலையில் நாளைக்கு லான்ச்! டாடாவின் 5 ஸ்டார் காருக்கு செக்!

இதன் காரணமாக இந்திய சந்தையில் தற்போது அதிகம் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக டாடா பன்ச் உருவெடுத்துள்ளது. இது குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் பெற்ற கார் ஆகும். அதாவது மிகவும் வலிமையாக உள்ள ஒரு காரை எதிர்த்து, சிட்ரோன் நிறுவனம் சி3 காரை களமிறக்கவுள்ளது.

இந்த புதிய காரின் ரேட் இவ்ளோதானா? எல்லாரும் வாங்கற விலையில் நாளைக்கு லான்ச்! டாடாவின் 5 ஸ்டார் காருக்கு செக்!

எனவே விலையை சரியாக நிர்ணயம் செய்தால் மட்டுமே, டாடா பன்ச் காருக்கு கடுமையான நெருக்கடியை சிட்ரோன் சி3 காரால் வழங்க முடியும். சிட்ரோன் சி3 காரை பற்றிய பல்வேறு தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிய வந்து விட்டாலும் கூட விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. சி3 காரின் அதிகாரப்பூர்வமான விலையை சிட்ரோன் நிறுவனம் நாளை வெளியிடவுள்ளது.

இந்த புதிய காரின் ரேட் இவ்ளோதானா? எல்லாரும் வாங்கற விலையில் நாளைக்கு லான்ச்! டாடாவின் 5 ஸ்டார் காருக்கு செக்!

ஆனால் யூகங்களின் அடிப்படையில் பார்த்தால், சிட்ரோன் சி3 காரின் ஆரம்ப விலை வெறும் 5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சிட்ரோன் சி3 காருக்கு மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த புதிய காரின் ரேட் இவ்ளோதானா? எல்லாரும் வாங்கற விலையில் நாளைக்கு லான்ச்! டாடாவின் 5 ஸ்டார் காருக்கு செக்!

விலை தொடர்பான யூகங்களுக்கு எல்லாம் நமக்கு நாளை பதில் கிடைத்து விடும். இதற்கிடையே டாடா பன்ச் தவிர, நிஸான் மேக்னைட் (Nissan Magnite), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் மாருதி சுஸுகி ஃஸ்விப்ட் (Maruti Suzuki Swift) ஆகிய கார்கள் உடனும், சிட்ரோன் சி3 விற்பனையில் போட்டியிடவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen c3 to launch tomorrow in india check all details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X