குறைவான விலையில் புதிய காரை களமிறக்குவதற்கு முன்னதாக பிரான்ஸ் நிறுவனம் செய்யப்போகும் காரியம்! என்னனு தெரியுமா?

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிப்ட் மாடலின் அறிமுக விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்குவதற்கு முன்னதாக பிரான்ஸ் நிறுவனம் செய்யப்போகும் காரியம்! என்னனு தெரியுமா?

இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள எஸ்யூவி ரக கார்களில் ஒன்று சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் (Citroen C5 Aircross). இந்த எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை சிட்ரோன் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பிரீமியம் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்குவதற்கு முன்னதாக பிரான்ஸ் நிறுவனம் செய்யப்போகும் காரியம்! என்னனு தெரியுமா?

சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிப்ட் மாடலின் ஒரு சில டிசைன் மாற்றங்கள் செய்யப்படலாம். அத்துடன் பல்வேறு வசதிகளும் கூடுதலாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். தற்போதைய நிலையில் இந்த ஒரே ஒரு காரை மட்டுமே சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்குவதற்கு முன்னதாக பிரான்ஸ் நிறுவனம் செய்யப்போகும் காரியம்! என்னனு தெரியுமா?

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் 2022 மாடலில், முன் பகுதியில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி முன் பக்க பம்பர் மாற்றியமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் 18 இன்ச் அலாய் வீல்களுக்கு புதிய டிசைன் வழங்கப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் 2022 மாடலில், சிட்ரோன் நிறுவனம் புதிய வண்ண தேர்வுகளை வழங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்குவதற்கு முன்னதாக பிரான்ஸ் நிறுவனம் செய்யப்போகும் காரியம்! என்னனு தெரியுமா?

உட்புறத்தை பொறுத்த வரையில், தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், அதிக யூஎஸ்பி போர்ட்கள் போன்ற பல்வேறு வசதிகளும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் பல்வேறு இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்குவதற்கு முன்னதாக பிரான்ஸ் நிறுவனம் செய்யப்போகும் காரியம்! என்னனு தெரியுமா?

ஆனால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. அது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் யூனிட் ஆகும். இதே இன்ஜின் தேர்வுதான் எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் 2022 மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள மாடலில், இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்குவதற்கு முன்னதாக பிரான்ஸ் நிறுவனம் செய்யப்போகும் காரியம்! என்னனு தெரியுமா?

ஃபேஸ்லிப்ட் மாடல் என்பதால், இந்த கியர் பாக்ஸிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (Volkswagen Tiguan), ஹூண்டாய் டூஸான் (Hyundai Tucson) மற்றும் ஜீப் காம்பஸ் (Jeep Compass) போன்ற பிரீமியம் எஸ்யூவி கார்களுடன், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிப்ட் மாடல் விற்பனையில் தொடர்ந்து போட்டியிடும்.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்குவதற்கு முன்னதாக பிரான்ஸ் நிறுவனம் செய்யப்போகும் காரியம்! என்னனு தெரியுமா?

இதற்கிடையே சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிப்ட் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னதாக, சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது தயாரிப்பை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது சிட்ரோன் சி3 (Citroen C3) கார் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சிட்ரோன் சி3 கார் வரும் ஜூலை 20ம் (July 20) தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்குவதற்கு முன்னதாக பிரான்ஸ் நிறுவனம் செய்யப்போகும் காரியம்! என்னனு தெரியுமா?

சிட்ரோன் சி3 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, அதனை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம். பல்வேறு விதங்களில் இந்த கார் எங்களை கவர்ந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலையே 32.24 லட்ச ரூபாயாக நிர்ணயம் இருக்கிறது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 33.78 லட்ச ரூபாயாக உள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்குவதற்கு முன்னதாக பிரான்ஸ் நிறுவனம் செய்யப்போகும் காரியம்! என்னனு தெரியுமா?

அதாவது சிட்ரோன் நிறுவனம் தனது முதல் தயாரிப்பை பிரீமியம் மாடலாக நிலைநிறுத்தியுள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான சி3 கார், மிகவும் விலை குறைவான மாடலாக விற்பனைக்கு வரவுள்ளது. சிட்ரோன் சி3 காரின் ஆரம்ப விலை வெறும் 5.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் சி3 காரின் டாப் வேரியண்ட்டின் விலையை சிட்ரோன் நிறுவனம் 9 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்குவதற்கு முன்னதாக பிரான்ஸ் நிறுவனம் செய்யப்போகும் காரியம்! என்னனு தெரியுமா?

ஆனால் இது அதிகாரப்பூர்வமான விலை அல்ல என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் சிட்ரோன் நிறுவனம் சி3 காரின் அதிகாரப்பூர்வமான விலையை அறிவிக்கவுள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) போன்ற கார்களுடன் சிட்ரோன் சி3 கார் போட்டியிடும். அத்துடன் ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கும் சிட்ரோன் சி3 கார் விற்பனையில் சவால் அளிக்கவுள்ளது.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen c5 aircross facelift launch details
Story first published: Sunday, June 19, 2022, 21:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X