டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார்... விலை இவ்வளவு கம்மியா?

இந்தியாவில் தற்போது ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் கார்களை சந்தைப்படுத்தி வருகின்றன.

Recommended Video

Citroen C3 தமிழ் Review | எதிர்பார்க்கப்படும் விலை,பூட் ஸ்பேஸ், சௌகரியம், செயல்திறன்,மைலேஜ் *Review

இந்த சூழலில், பிரான்ஸின் சிட்ரோன் நிறுவனம் சிட்ரோன் சி3 காரை தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் வேரியன்ட் வாரியாக விலை விபரம் என்ன? மேலும் என்னென்ன வசதிகளை இந்நிறுவனம் வழங்குகிறது? எனக் காணலாம் வாருங்கள்.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் சிட்ரோன். இந்நிறுவனம் இந்திய சந்தையில் தங்களது முதல் தயாரிப்பாக சி5 ஏர்கிராஸ் என்ற பிரிமியம் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தினர். இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்த கட்டமாக இந்நிறுவனம் சி3 என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

இந்நிறுவனம் இந்த காரை கம்பேக்ட் எஸ்யூவி ரக காராக அறிமுகப்படுத்தியுள்ளது. மார்கெட்டில் ஏற்கனவே நல்ல விற்பனையில் உள்ள டாடா பஞ்ச், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் போன்ற கார்களுக்கு போட்டியாக இந்த காரும் களம் இறங்குகிறது. ஏற்கனவே இந்த காரின் புகைப்படங்கள் மற்றும் ரிவியூகள் வெளியான நிலையில் சிட்ரோன் நிறுவனம் இந்த காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

சிட்ரோன் நிறுவனம் இந்த காரை தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தயாரிப்பு ஆலையில் தான் தயாரிக்கிறது. என்னதான் இது வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் இந்த காரின் 90 சதவீதமான உதிரிப் பாகங்கள் இந்தியாவில் தயாரானது தான். சி-க்யூப்டு ஃபேமிலி காராக அறிமுகமாகியுள்ள இந்த கார் லுக்கிலேயே பலரைக் கவர்ந்துள்ளது.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

இந்த கார் மொத்தம் 6 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதன் விலைகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ5.70 லட்சம் முதல் ரூ8.05 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. பேஸ்வேரியன்டாக லைவ் வேரியன்ட் ரூ5,70,500 என்ற விலையிலும், அடுத்ததாக ஃபீல் வேரியன்ட் ரூ6,62,500 என்ற விலையிலும். ஃபீல் வைப் பேக் வேரியன் ரூ6,77,500 என்ற விலையிலும், டூயல் டோன் வேரியன்ட் ரூ6,77,500 என்ற விலையிலும், டூயல் டோன் வைப் பேக் ரூ6,92,500 என்ற விலையிலும், டர்போ ஃபீல் டூயல் டோன் வைப் பேக் ரூ8,05,500 என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் 10 கலர் ஆப்ஷன், 3 பேக்ஸ் உடன் 56 கஸ்டமைசேஷன் உடன் விற்பனைக்கு வருகிறது.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

இந்த காரின் டிசைனை பொருத்தவரை சிட்ரோன் நிறுவனத்திற்கான பிரத்தியேக டிசைன் மொழியே இந்த காருக்கும் உள்ளது. இந்த காரின் முன்பக்கத்தில் பிரத்தியேகமான லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. காரின் கலரிங் முழுவதும் காண்ட்ராஸ்ட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் அலாய் வீல்கள் கொடுக்கப்படவில்லை.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

காரின் உட்புறத்தைப் பொருத்தவரை 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் தான் ஹைலேட் இது வயர் லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே சப்ஃபோர்ட் செய்யக்கூடியது. இந்த செக்மெண்டிலேயே இது இந்த காரில் மட்டுமே உள்ள வசதியாகும். மற்றகாரிலிருந்து வித்தியாசமாக உட்புறத்தில் ஜன்னல்களை திறக்கும் பவர் பட்டன்கள் கதவுகளில் இல்லாமல் கியர் லிவருக்கு பின்னால் இருக்கிறது. இது டிரைவர் மட்டுமல்லாமல் அனைவரும் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. பேஸ் வேரியன்டில் 1.2 லிட்டர் நேச்சுரஸ் அஸ்பயர்டு 3 சிலிண்டர் PURETECH 82 இன்ஜின் உள்ளது. இது 115 என்எம் டார்க் திறனையும் 82 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்துகிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

இரண்டாவது ஆப்ஷன் டாப் வேரியன்டில் மட்டும் வருகிறது. இது அதே இன்ஜினில் டர்போ ஆப்ஷன் உடன் வருகிறது. இந்த இன்ஜினிற்கு PURETECH 110 எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த இன்ஜின் 108.4 பிஎச்பி பவரையும் 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

இந்நிறுவனம் இந்த காரை இரண்டு விதமாக விற்பனை செய்கிறது. நேரடியாக தங்களது ஷோரூம்கள் மூலமும் இந்த காரை புக் செய்யலாம் அல்லது நேரடியாக ஆன்லைன் மூலமும் இந்த காரை புக் செய்ய முடியும். சிட்ரோன் நிறுவனம் La Maison Citroën phygital என்ற பெயரில் இந்தியாவில் 19 நகரங்களில் அதாவது புதுடில்லி, குர்கான், மும்பை, புனே, ஆமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, சென்னை, சண்டிகர், ஜெய்பூர், லக்னோ, புவனேஷ்வர், சூரத், நாக்பூர், விசாகபட்டிணம், கோழிக்கோடு, கொச்சி ஆகிய பகுதிகளில் தனது ஷோரூமை வைத்துள்ளது.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

மேல் குறிப்பிட்ட நகரங்களில் உள்ளவர்கள் நேரடியாக ஷோரூமிற்கு சென்று காரை புக் செய்து கொள்ளலாம், மற்றவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் காரை புக் செய்து கொள்ளலாம். இது மட்டுமல்ல வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை புக் செய்யும் போது தங்கள் கார் எப்படி இருக்கவேண்டும் என high-definition 3D Configurator மூலம் உங்களுக்கான காரை நீங்களே டிசைன் செய்யலாம். கார் டெலிவரி வரும் போது அப்படியே வரும். இது ஆன்லைன் மற்றும் ஷோரூம் ஆகிய இரண்டு இடங்களிலும் அந்த புக்கிங் வசதி இருக்கிறது.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

விற்பனைக்குப் பிறகு இந்த காருக்கான தனித்துவமாக சர்வீஸாக ரிமோட் டைனஸ்டிக் மற்றும் 100% உதிரிப்பாகங்கள் கிடைக்க இந்த நிறுவனத்தின் L'Atelier Citroën என்ற நெட்வோர்க் உறுதி செய்கிறது. இது போக Citroën Service on Wheels மூலம் கார் உரிமையாளர்கள் வீட்டிற்கே சென்று சர்வீஸ் செய்து வரும் வசதியையும் வழங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் சென்டர் இல்லை. உதிரிப்பாகங்கள் கிடைப்பது கடினம் போன்ற விஷயங்கள் குறித்துக் கவலைப்படவேண்டாம்.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

சிட்ரோன் நிறுவனம் இந்த காருக்கான வாரண்டியாக 2 ஆண்டு அல்லது 40 ஆயிரம் கி.மீ வரையிலான வாரண்டிமற்றும் உதிரிப் பாகங்களுக்காக 12 மாதங்கள் அல்லது 10,000 கி.மீ வரையிலான வாரண்டியை வழங்குகிறது. இது போக எக்ஸடென்டட் வாரண்டி பேக்கேஜ்களும் கிடைக்கிறது. 24/7 ரோடு சைடு அசிஸ்டெஸ்ட் வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு சிட்ரோன் வழங்குகிறது.

டாடா பஞ்ச் காரை தூக்கி வீச அறிமுகமானது சிட்ரோன் சி3 கார் . . . விலை இவ்வளவு கம்மியா ?

இதுபோக சிட்ரோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குCitroën Future Sure என்ற ஒரு திட்டத்தை வழங்குகிறது. அதன்படி சிட்ரோன் நிறுவனமே நேரடியாகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கே வந்து காரை பராமரிப்பு செய்வது, எக்ஸ்டென்டட் வாரண்டி, ரோடு சைடு அசிஸ்டெண்ட், ஆன்ரோடுக்கான பைனான்ஸ் 5 ஆண்டுகளுக்கு இந்த வசதியை வழங்குகிறது. இதற்காக மாத இஎம்ஐயாக ரூ11,999 செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
CITROEN launches c3 car price color variant details warranty and other details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X