டாடா டிகோர் இவி காரின் இடத்தை பிடிக்க பிரபல நிறுவனம் திட்டம்... விரைவில் வருகிறது புதிய எலெக்ட்ரிக் கார்!

டாடா டிகோர் இவி (Tata Tigor EV) எலெக்ட்ரிக் காருக்கு டஃப் கொடுக்கும் விதமாக பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று புதிய மின்சார காரை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த நிறுவனம், என்ன மாதிரியான மின்சார கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது பற்றிய பல முக்கிய விபரங்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா டிகோர் இவி காரின் இடத்தை பிடிக்க பிரபல நிறுவனம் திட்டம்... விரைவில் வருகிறது புதிய எலெக்ட்ரிக் கார்!

இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் மின்சார கார் மாடல்களில் ஒன்றாக டாடா மோட்டார்ஸின் டிகோர் இவி (Tata Tigor EV) இருக்கின்றது. நெக்ஸான் இவி-யே இந்தியாவின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராகும். இதற்கு அடுத்த இடத்தில் டிகோர் இவி இருக்கின்றது. நாட்டிலேயே குறைவான விலையில் இது விற்பனைக்குக் கிடைப்பதால் மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

டாடா டிகோர் இவி காரின் இடத்தை பிடிக்க பிரபல நிறுவனம் திட்டம்... விரைவில் வருகிறது புதிய எலெக்ட்ரிக் கார்!

இந்த வரவேற்பிற்கே ஆப்பு வைக்கும் முயற்சியில் பிரபல கார் நிறுவனம் ஒன்று களமிறங்கியிருக்கின்றது. அது, டாடா டிகோர் இவியின் இடத்தைப் பிடிக்கும் விதமாக விரைவில் புதிய காம்பேக்ட் ரக எலெக்ட்ரிக் காரை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா டிகோர் இவி காரின் இடத்தை பிடிக்க பிரபல நிறுவனம் திட்டம்... விரைவில் வருகிறது புதிய எலெக்ட்ரிக் கார்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் (Citroen), இதுவே விரைவில் டிகோர் இவி-க்கான போட்டி மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது. சி3 இவி (C3 EV) எனும் புதுமுக எலெக்ட்ரிக் காரையே அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகம் நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

டாடா டிகோர் இவி காரின் இடத்தை பிடிக்க பிரபல நிறுவனம் திட்டம்... விரைவில் வருகிறது புதிய எலெக்ட்ரிக் கார்!

சிட்ரோன் தற்போது சி5 ஏர்கிராஸ் எனும் பிரீமியம் அம்சங்கள் எஸ்யூவி கார் மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 32.24 லட்சம் ஆகும். இந்த காரைத் தொடர்ந்து சி3 மாடலின் ஐசிஇ (எரிபொருள் எஞ்ஜின் கொண்ட) கார் மாடலை அது விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

டாடா டிகோர் இவி காரின் இடத்தை பிடிக்க பிரபல நிறுவனம் திட்டம்... விரைவில் வருகிறது புதிய எலெக்ட்ரிக் கார்!

இதன் வருகை இன்னும் சில வாரங்களில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இக்கார் மாடலின் மின்சார வெர்ஷனும் நாட்டில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை சிட்ரோன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஸ்டெல்லன்டிஸ் நிர்வாகத்தின் சிஇஓ கேர்லஸ் டவரெஸும் உறுதிப்படுத்தியுள்ளார்.

டாடா டிகோர் இவி காரின் இடத்தை பிடிக்க பிரபல நிறுவனம் திட்டம்... விரைவில் வருகிறது புதிய எலெக்ட்ரிக் கார்!

நிறுவனம் சி3 கார் மாடலில் டீசல் எஞ்ஜினை விற்பனைக்குக் கொண்டு வரப்போவதில்லை. அதை பெட்ரோல் எஞ்ஜினில் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டது. இந்த நிலையிலேயே தற்போது மின்சார வெர்ஷனில் அது வர இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

டாடா டிகோர் இவி காரின் இடத்தை பிடிக்க பிரபல நிறுவனம் திட்டம்... விரைவில் வருகிறது புதிய எலெக்ட்ரிக் கார்!

இந்த கார் மாடலை இன்னும் பல வாகன மாடல்களையும் நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஹேட்ச்பேக், எஸ்யூவி மற்றும் எம்பிவி ஆகிய ரகங்களில் அது கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால், இது என்ன மாதிரியான வசதிகள் கொண்ட வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.

டாடா டிகோர் இவி காரின் இடத்தை பிடிக்க பிரபல நிறுவனம் திட்டம்... விரைவில் வருகிறது புதிய எலெக்ட்ரிக் கார்!

இதேபோல் டாடா டிகோர் இவி-க்கு போட்டியாக வர இருப்பதாகக் கூறப்படும் சி3 இவி-யும்கூட என்ன மாதிரியான பேட்டரி பேக், என்ன மாதிரியான திறன்கள் கொண்ட மின் மோட்டார் ஆகியவற்றுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது பற்றிய விபரமும் வெளியாகவில்லை. இருப்பினும், இதன் வருகை குறித்த தகவல் மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை தூண்டியிருக்கின்றது.

டாடா டிகோர் இவி காரின் இடத்தை பிடிக்க பிரபல நிறுவனம் திட்டம்... விரைவில் வருகிறது புதிய எலெக்ட்ரிக் கார்!

அதேவேலையில், இதன் பெட்ரோல் வெர்ஷனுக்கு நாட்டில் எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவுகின்றது. இக்காரை நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. மிக முக்கியமாக சாலைகளில் வைத்து பல பரீட்சையில் அக்கார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு சாலையில் சோதனையோட்டம் செய்துக் கொண்டிருந்தபோது சமீபத்தில் சிட்ரோன் சி3 கேமிராவின் கண்களில் சிக்கியது. எந்தவொரு மறைப்புகளும் இன்றி அது காட்சியளித்தது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen planning to launch c3 ev next year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X