டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம்.... இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா?

டாடா நிறுவனத்தின் பஞ்ச் காருக்கு போட்டியாக சிட்ரோன் என்ற நிறுவனம் தனது சி3 காரை இந்திய மார்கெட்டில் வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணலாம்

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

இந்தியாவில் டாடா நிறுவனம் பஞ்ச் காரை அறிமுகப்படுத்தியது முதல் அந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் இந்த காரை ஆர்வமாக புக் செய்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த காருக்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனம் தனது சி3 மைக்ரோ எஸ்யூவி காரை மார்கெட்டில் களம் இறக்க முடிவு செய்துள்ளது.

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

சிட்ரோன் என்பது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் இந்நிறுவனம் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் தனது கார் தயாரிப்பு ஆலையை நிறுவி சி5 ஏர்கிராஸ் என்ற காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் விரைவில் தனது இரண்டாவது காரை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

இதற்காக அந்நிறுவனம் தனது சர்வதேசச் சந்தையில் உள்ள சி3 என்ற காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த கார் ஏற்கனவே தெற்கு அமெரிக்க நாடுகளில் விற்பனையாகிவரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் தனது விற்பனையைத் துவங்கவுள்ளது. சி3 என்ற கார் மார்டன் ஹேட்ச்பேக் காரான இது எஸ்யூவி காரின் சில அம்சங்களைப் பெற்று மைக்ரோ எஸ்யூவி காராக உருவெடுத்துள்ளது.

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

இந்த காரில் எஸ்யூவி காரில் இருக்கும் அம்சங்களா உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், உயரமான பானட், எலிவேட் செய்யப்பட்ட டிரைவர் போசிஷன் ஆகியவை இந்த காரிலும் இடம் பெற்றுள்ளதால் இது மைக்ரோ எஸ்யூவி காரின் ரகத்திற்கு வந்துவிட்டது.

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

இந்நிலையில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள சி3 காரில் ஏற்கனவே இந்நிறுவனத்தின் சார்பில் விற்பனையாகும் சி5 ஏர்கிராஸ் காரின் ஸ்பிலிட் ஸ்டைல் ஹெட்லைட்கள், ரூஃப்ரெய்ல், கருப்பு நிறத்திலான பில்லர்கள், இன்டிகேட்டர்களுடன் கூடி ஓஆர்விஎம், கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக்கால் ஆன கிளாடிங், மற்றும் ஸ்போட்டி அலாய் வீல் ஆகிய அம்சங்கள் இந்த காரிலும் இடம் பெறவுள்ளது.

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

மேலும் இந்த காரின் பின்பகுதியைப் பொறுத்தவரை வெர்ப் செய்யப்பட்ட டெயில் லைட், சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகிய அம்சங்கள் இந்த காரில் உள்ளன. இது இந்த காருக்கு எஸ்யூவி லுக்கை கொடுத்து ஹேட்ச்பேக் காரிலிருந்து வேறுபாட்டைக் காட்டுகிறது.

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

இந்த காரின் உட்புறத்தைப் பொறுத்தவரை டூயல் டோன் டேஷ்போர்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் மேனுவல் ஏசி மற்றும் டிஸ்டிங்டிவ் ஏர் வென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் கீலெஸ் என்ட்ரி ஆப்ஷன் மற்றும் 3 ஸ்போர்க் ஸ்டியரிங் வீலுடன் விற்பனைக்கு வருகிறது.

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

இந்த காரின் தொழிற்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை இதில் 10.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆப்ஷன்களும் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை இந்த காரில் இரண்டு ஏர் பேக்குகள், ஏபிஎறா், இபிடி, மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்றார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

இந்த கார்கள் இரண்டுவிதமான பெட்ரோல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. அதன்படி முதல் வேரியன்ட் 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பயர்டு இன்ஜின் மற்றும் இரண்டாவது வேரியன்ட்1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகிய இரண்டு வேரியன்ட்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

இந்த கார் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த நிறுவனத்தின் இந்தியாவிற்கான சிஇஓ மற்றும் எம்டி ரோனால்டு பவுச்சர்டு கூறும் போது : "இந்த சி3 கார் இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் கண்டிப்பாக உதவும், அதனால் இதை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் உள்ள கார்களுக்கு 70 சதவீத டிமாண்ட் உள்ளது. அதில் 50 சதவீதமான மக்கள் முதன் முறை கார் வாங்குபவர்களாக உள்ளனர்" எனக் கூறினார்.

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

மேலும் அவர் கூறுகையில் "இந்த மைக்ரோ அல்லது மினி எஸ்யூவி ரக கார்கள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் இதன் குறைந்த விலையும் அட்டகாசமான தோற்றமும் தான். இந்த காரின் 90 சதவீதமான பாகங்கள் இந்தியாவிலேயே தயாராகிறது. இந்த காருக்கான r&d சென்டரை சென்னையும், வாகன அசெம்பிளி சென்டரை திருவள்ளூரிலும், பவர் டிரைன் பிளாண்டை ஓசூரிலும் அமைத்துள்ளோம். " எனக் கூறினார்.

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

இந்த கார் வரும் ஜூன் மாதம் மார்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே பல இடங்களில் டெஸ்ட் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இந்த கார் ஜூன் மாதம் மார்கெட்டிற்கு வரும் போது இதன் விலை ரூ5.5 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா பஞ்ச் -ஐ பறக்கவிடும் புதிய கார் ஜூனில் அறிமுகம். . . . இப்படி ஒரு கம்பெனி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ?

இந்த கார் மார்கெட்டிற்கு வந்தால் இதே செக்மெண்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள டாடா நிறுவனத்தின் பஞ்ச் காருக்கு சற்று சறுக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மார்கெட்டில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen plans to launch C3 micro suv car in june 2022 know full details
Story first published: Monday, May 9, 2022, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X