டாடாவையே சீண்டி பார்க்கும் சிட்ரோன்! இந்தியாவின் மலிவு விலை இ-காருக்கு போட்டியாக தனது காரை களமிறக்க திட்டம்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் வரும் செப்டம்பர் 29ம் தேதி புதுமுக எலெக்ட்ரிக் கார் ஒன்றை வெளியீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடாவையே சீண்டி பார்க்கும் சிட்ரோன்... இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக தனது காரை களமிறக்க திட்டம்!

சிட்ரோன் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக ஓர் மின்சார காரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மின்சார காரின் வருகைகுறித்த தகவலை மறைமுகமாக தெரிவித்துள்ளது.

டாடாவையே சீண்டி பார்க்கும் சிட்ரோன்... இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக தனது காரை களமிறக்க திட்டம்!

வரும் 29ம் தேதி புதிய எலெக்ட்ரிக் காரை நிறுவனம் வெளியீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், எந்த மாடலை மின்சார காராக இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது, என்ன மாதிரியான அம்சங்களுடன் அதனை உருவாக்கியிருக்கின்றது என்பது பற்றிய விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.

டாடாவையே சீண்டி பார்க்கும் சிட்ரோன்... இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக தனது காரை களமிறக்க திட்டம்!

சிட்ரோன் நிறுவனம் இன்றைய நிலவரப்படி இந்திய சந்தையில் சி5 ஏர்கிராஸ் மற்றும் சி3 ஆகிய இரு கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நீண்ட நாட்களாக சி5 ஏர்கிராஸ் கார் மாடலை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கி வந்தநிலையில், மிக சமீபத்தில் தனது இரண்டாவது தயாரிப்பாக சி3 மாடலை நாட்டில் களமிறக்கியது.

டாடாவையே சீண்டி பார்க்கும் சிட்ரோன்... இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக தனது காரை களமிறக்க திட்டம்!

இந்த காருக்கு பட்ஜெட் வாகன பிரியர்கள் மத்தியில் தற்போது கணிசமான அளவு நல்வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அக்காரின் மலிவு விலையே முக்கிய காரணமாக உள்ளது. சிட்ரோன் நிறுவனம் யாருமே எதிர்பார்த்திராத மிகக் குறைவான விலையில் இக்காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ரூ. 5.71 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே சி3 விற்கப்பட்டு வருகின்றது.

டாடாவையே சீண்டி பார்க்கும் சிட்ரோன்... இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக தனது காரை களமிறக்க திட்டம்!

இத்தகைய மலிவு விலைக் கொண்ட காரைக் கொண்டே இந்தியர்களை முழுமையாக வளைத்துபோட சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இந்த காரை 7 சீட்டர் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட வெர்ஷன்களிலும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த கார் மாடலையே சிட்ரோன் நிறுவனம் மின்சார வெர்ஷனிலும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டாடாவையே சீண்டி பார்க்கும் சிட்ரோன்... இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக தனது காரை களமிறக்க திட்டம்!

இதை உறுதிப்படுத்தும் வகையில் சி3 காரை ஒத்த தோற்றம் தோற்றமுடைய எலெக்ட்ரிக் கார் சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. இதை வைத்தே நிறுவனம் சி3 கார் மாடலை மின்சார வெர்ஷனில் கொண்டுவர இருப்பது உறுதியாக கூறப்படுகின்றது. ஆகையால், இதன் அறிமுகமே வரும் 29ம் தேதி அரங்கேற இருப்பதாக யூகிக்கப்பட்டுள்ளது.

டாடாவையே சீண்டி பார்க்கும் சிட்ரோன்... இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக தனது காரை களமிறக்க திட்டம்!

இந்த எலெக்ட்ரிக் காரின் வருகை டாடா மோட்டார்ஸ் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் டியாகோ இவி-க்கு போட்டியாக அமைய இருக்கின்றது. இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி-யை டாடா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆகையால், இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் மக்கள் உச்சத்தை எட்டி வருகின்றது.

டாடாவையே சீண்டி பார்க்கும் சிட்ரோன்... இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக தனது காரை களமிறக்க திட்டம்!

இந்த மாதிரியான ஓர் தயாரிப்பிற்கு டஃப் கொடுக்கும் வகையிலேயே வெகுவிரைவில் சி3 மின்சார கார் இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கின்றது. இக்காரின் உற்பத்தி பணிகள் திருவள்ளூரில் உள்ள சிகே பிர்லா உற்பத்தி ஆலையில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இங்கு வைத்தே வழக்கமான சி3 கார் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடாவையே சீண்டி பார்க்கும் சிட்ரோன்... இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக தனது காரை களமிறக்க திட்டம்!

இந்த சி3 எலெக்ட்ரிக் கார் வழக்கமான சி3 உடன் ஒத்துபோகின்ற அளவிலேயே வர இருக்கின்றது. அதேவேலையில், அது ஓர் மின்சார கார் என்கிற காரணத்தினால் சில தனித்துவமான உருவ மாற்றங்களை அது பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக, பாடி பேனல், முன் பக்க க்ரில், சிறப்பு அணிகலன் ஆகியவற்றை பெற்ற வாகனமாக சி3 எலெக்ட்ரிக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடாவையே சீண்டி பார்க்கும் சிட்ரோன்... இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக தனது காரை களமிறக்க திட்டம்!

இதுமட்டுமின்றி, வரும் 29ம் தேதி அறிமுகமாக இருக்கும் சி3 எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 300 கிமீட்டருக்கும் அதிகமான பயணத்தை வழங்கும் பேட்டரி பேக், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், கார் இணைப்பு தொழில்நுட்பம் போன்ற நவீன கால அம்சங்கள் மற்றும் பிரீமியம் வசதிகள் பல எதிர்பார்க்கப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen will launch a new electric car on the 29th
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X