காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

தற்கால மாடர்ன் கார்களில் லெதரால் மூடப்பட்ட இருக்கைகளே வழங்கப்படுகின்றன. லெதர் இருக்கைகள் கூடுதல் சவுகரியமானவைகளாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை சுத்தம் செய்வதும் எளியது ஆகும். இருப்பினும், லெதர் இருக்கைகளை முறையாக எவ்வாறு சுத்தம் செய்வது என்பது பலருக்கு தெரிவதில்லை.

காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

காரின் லெதர் இருக்கை மட்டுமல்ல, எந்தவொரு பொருளையும் அவ்வப்போது சுத்தம் செய்து வைப்பது அதன் மீது அழுக்கு படிவதை தடுப்பது மட்டுமின்றி, அதன் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கும். லெதர் இருக்கைகளை பொருத்தவரையில், அதன் குஷின்களை வாக்யும் க்ளீனர் (Vacuum Cleaner)-ஐ வைத்து சுத்தம் செய்த பின்னர், லெதருக்கு தனியாக சில பல ட்ரீட்மெண்ட்களை செய்ய வேண்டும்.

காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

உதாரணத்திற்கு லெதரின் மீது மெழுகை தேய்ப்பது போன்றவற்றை செய்யலாம். இவ்வாறான செயல்கள் லெதரில் விரிசல்கள் ஏற்படுவதை தடுக்கும். அதுமட்டுமின்றி இருக்கைகளின் லெதர் உறை கறைப் படிவதையும் தவிர்க்கும். லெதர் இருக்கையின் மீது ஏதேனும் கறைப்படிய நேரந்தால், அந்த பகுதியினை உடனடியாக துடைக்க முடியாமல் போகலாம்.

காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

ஆனால் அதன்பின் எவ்வளவு விரைவாக அந்த கறையினை நீக்க முயற்சி மேற்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து, அந்த கறை லெதரில் இருந்து நீங்கும். கறையை நீக்க உடனடியாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு பெரியதாக எந்த உபகரணங்களும் தேவையில்லை. வாக்யும் க்ளீனர் மற்றும் தண்ணீருடன் சிறிது துணி இருந்தாலே போதுமானது. முறையாக லெதர் இருக்கையை சுத்தம் செய்ய இந்த 3 முறைகளை பின்பற்றுங்கள்.

காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

1. சொல்யூஸனை பரிசோதிக்கவும்

உங்களால் கார் இருக்கையின் லெதரில் படிந்துள்ள கறையை முழுவதுமாக நீக்க முடியவில்லை எனில், நேராக அருகில் உள்ள ஏதேனும் ஒரு ஆட்டோ உதிரி பாகங்கள் கடைக்கு சென்று கேபினின் கறையை அகற்றும் சொல்யூஸனை வாங்குங்கள். மிக பெரும் சூப்பர் மார்க்கெட்டில் ஆட்டோமொபைல் பிரிவில் இத்தகைய சொல்யூஸனை வாங்குவதை காட்டிலும், ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு என்றே பிரத்யேகமாக இயங்கும் உதிரி பாக கடைகளுக்கு செல்வது சிறந்தது.

காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

கறையை நீக்கும் சொல்யூஸன் என்பதற்காக அம்மோனியா அல்லது ப்ளீச்சிங் பவுடரை வாங்கிவிடாதீர்கள். ஏனெனில் கறையை நீக்கிய பின் துர்நாற்றத்திற்கு இடையே உங்களால் காரை ஓட்ட முடியாது. காருக்குள் வெளிப்புற காற்று அதிகளவில் வராது என்பதை மறந்துவிட வேண்டாம். லெதரில் படிந்த கறையை நீக்குவதற்கான சொல்யூஸன் என்று கேட்டு வாங்குங்கள்.

காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

அதனுடன் சில மைக்ரோஃபைபர் துணிகளையும் வாங்க பாருங்கள். ஏனெனில் சாதாரண டிஸ்யூ பேப்பர் இதற்கு சரிப்பட்டு வராது. பின்னர் வீட்டிற்கு வந்து க்ளீனிங் வேலையை ஆரம்பிக்கும் முன், சொல்யூஸனை கறை படிந்த இருக்கையில் பார்வைப்படாத இடத்தில் ஊற்றி முதலில் செக் செய்து பார்க்கவும். அதேபோல் கறை படிந்த இடத்தில் நேரடியாக க்ளீனிங் சொல்யூஸனை ஊற்ற வேண்டாம்.

காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

மைக்ரோஃபைபர் துணியில் சிறிதளவு ஊற்றி தேவையான இடத்தில் மட்டும் கவனமாக துடைத்து பார்க்கவும். ஏனெனில் தவறான சொல்யூஸனை வாங்கி இருந்தீர்கள் எனில் ஏற்கனவே படிந்த கறை உடன் அதுவும் புதியதாக கறையை உண்டாக்கலாம். அதனாலேயே பார்வைப்படாத இடத்தில் அதனை முதலில் உபயோகித்து பாருங்கள் என கூறுகின்றோம்.

காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

2. மெதுவாக கறையை நீக்கவும்

வாங்கிய சொல்யூஸன் உங்களது காரின் லெதருக்கு சரியானதே என முடிவான பின் மற்ற இடங்களில் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். ஆனால் அப்போதும் நேரடியாக பயன்படுத்தி விடாதீர்கள். நீர் உடன் கலக்கக்கூடாது என கடைக்காரர் பரிந்துரைந்திருந்தால், சொல்யூஸனை நீருடன் கலக்க வேண்டாம்.

காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

ஆதலால், வாங்கும்போதே சொல்யூஸனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கடைக்காரரிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் இத்தகைய சொல்யூஸன் உடன் நீர் கலக்க வேண்டாம் என்றே கூறுவர். ஏனெனில் பொதுவாகவே உயர் தரத்திலான லெதர்களுக்கு நீர் செட் ஆகாது.

காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

இவை அனைத்தையும் உறுதிப்படுத்தி கொண்ட பின் மைக்ரோஃபைபர் துணியால் முன்பை காட்டிலும் சற்று அதிகமாகவே சொல்யூஸனை ஊற்றி கறைப்படிந்த இடத்தில் மெதுவாக அழுத்து தேய்து கறையை நீக்கவும். இவ்வாறான வேலைப்பாடுகளில் நிதானமே மிகவும் முக்கியமாகும். அவசரப்பட்டு வேகமாக தேய்த்து லெதருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட வேண்டாம்.

காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

3. கறைகள் அனைத்தையும் வெளியேற்றவும்

மைக்ரோஃபைபர் துணியை கொண்டு அனைத்து இடங்களிலும் உள்ள கறையை நீக்கவும். இருக்கையில் ஏதேனும் பகுதி ஈரமாக இருப்பினும், அந்த பகுதியையும் இதே முறைகளை பயன்படுத்தி மெதுவாக துடைத்து கறைகளை வெளியேற்றவும். முடிந்தவரையில் ஒரே துணியை பயன்படுத்தாமல் பல மைக்ரோஃபைபர் துணிகளை பயன்படுத்தவும். இவ்வாறான துணிகள் சற்று விலைமிக்கவையே. இருப்பினும் கறைகளை நீக்குவதற்கு இவையே சரியானவை.

காரின் லெதர் இருக்கையை க்ளீன் பண்ணும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க...

4. வாக்யும் க்ளீனரை பயன்படுத்துதல்

சொல்யூஸனை உபயோகப்படுத்தி இந்த முறைகள் அனைத்தையும் செயல்படுத்தும் முன் வாக்யும் க்ளீனரை பயன்படுத்தி முதலில் இருக்கையில் உள்ள தூசியையும், அழுக்குகளையும் வெளியேற்றவும். ஏனெனில் தூசிகளும், மண் துகள்களும் சொல்யூஸனுடன் இணைந்து வேறு விதமாக வினை புரியலாம். அதேபோல், எல்லா கறையையும் நீக்கிய பின் சிறிது நேரம் கழித்து வாக்யும் க்ளீனரை பயன்படுத்தி இருக்கைகளை சுத்தப்படுத்தவும்.

Most Read Articles

English summary
Cleaning car s leather seats propurely
Story first published: Tuesday, September 27, 2022, 17:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X