புதிய அறிமுகங்களினால் விற்பனையில் சரிவை கண்டுள்ள க்ரெட்டா, செல்டோஸ்- ஸ்கார்பியோவின் சேல்ஸும் பாதியாக குறைந்தது

காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவு கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் பல புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் கடந்த 2021ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்டவற்றின் பெயர்களை சொல்லலாம்.

புதிய அறிமுகங்களினால் விற்பனையில் சரிவை கண்டுள்ள க்ரெட்டா, செல்டோஸ்- ஸ்கார்பியோவின் சேல்ஸும் பாதியாக குறைந்தது

இவற்றினால், க்ரெட்டா, செல்டோஸ் போன்ற பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை சற்று குறைந்துள்ளது என்றாலும், மொத்த காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை எண்ணிக்கையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. இதைதான் கடந்த 2021 டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகளும் வெளிக்காட்டுகின்றன.

புதிய அறிமுகங்களினால் விற்பனையில் சரிவை கண்டுள்ள க்ரெட்டா, செல்டோஸ்- ஸ்கார்பியோவின் சேல்ஸும் பாதியாக குறைந்தது

கடந்த மாதத்தில் மொத்தம் 21,878 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2020 டிசம்பர் மாதத்தில் 21,393 காம்பெக்ட் எஸ்யூவி கார்களே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 2.27% அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் தற்சமயம் 9 காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

புதிய அறிமுகங்களினால் விற்பனையில் சரிவை கண்டுள்ள க்ரெட்டா, செல்டோஸ்- ஸ்கார்பியோவின் சேல்ஸும் பாதியாக குறைந்தது

இதில் வழக்கம்போல் ஹூண்டாய் க்ரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 7,609 க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 28.12% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் சுமார் 10,592 க்ரெட்டா காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

புதிய அறிமுகங்களினால் விற்பனையில் சரிவை கண்டுள்ள க்ரெட்டா, செல்டோஸ்- ஸ்கார்பியோவின் சேல்ஸும் பாதியாக குறைந்தது

இந்திய சந்தையில் கடந்த 2021 டிசம்பர் மாத மொத்த காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை எண்ணிக்கையில் க்ரெட்டா மட்டுமே கிட்டத்தட்ட 34.78 சதவீத பங்கை ஆக்கிரமித்துள்ளது. இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் கியா செல்டோஸ் 4,012 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இதன் விற்பனை எண்ணிக்கையும் மொத்தம் 5,608 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 28.46% குறைவாகும்.

புதிய அறிமுகங்களினால் விற்பனையில் சரிவை கண்டுள்ள க்ரெட்டா, செல்டோஸ்- ஸ்கார்பியோவின் சேல்ஸும் பாதியாக குறைந்தது

ஏற்கனவே கூறியதுதான், இவ்வாறு க்ரெட்டா, செல்டோஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கைகள் கணிசமாக குறைந்துள்ள போதிலும், மொத்த காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை எண்ணிக்கை குறையாததற்கு காரணம், கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களாகும். க்ரெட்டா, செல்டோஸ் கார்களை வாங்க திட்டமிட்டிருந்தவர்களில் சிலர் புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் பக்கம் சென்றுள்ளனர்.

புதிய அறிமுகங்களினால் விற்பனையில் சரிவை கண்டுள்ள க்ரெட்டா, செல்டோஸ்- ஸ்கார்பியோவின் சேல்ஸும் பாதியாக குறைந்தது

செல்டோஸிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 3வது மற்றும் 4வது இடங்களில் ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மாடல்கள் உள்ளன. இவற்றின் கடந்த 2021 டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 2,840 மற்றும் 2,828 ஆகும். இதில் ஸ்கோடா குஷாக் கடந்த 2021 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட, டைகுன் சில மாதங்களுக்கு முன்புதான் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

புதிய அறிமுகங்களினால் விற்பனையில் சரிவை கண்டுள்ள க்ரெட்டா, செல்டோஸ்- ஸ்கார்பியோவின் சேல்ஸும் பாதியாக குறைந்தது

மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த லிஸ்ட்டில் 1,757 யூனிட்களின் விற்பனை எண்ணிக்கை உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆனால் 2020 டிசம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் 48.58% அதிகமாக 3,417 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஸ்கார்பியோவை மிக நெருக்கமாக பின்தொடர்ந்தவாறு மாருதி எஸ்-கிராஸ் 1,521 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

புதிய அறிமுகங்களினால் விற்பனையில் சரிவை கண்டுள்ள க்ரெட்டா, செல்டோஸ்- ஸ்கார்பியோவின் சேல்ஸும் பாதியாக குறைந்தது

குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாக மாருதி சுஸுகியின் வாகன தயாரிப்பு பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் எஸ்-கிராஸ் கார்களின் விற்பனை 2020 டிசம்பரை காட்டிலும் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் 28.35% அதிகரித்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 1,185 எஸ்-கிராஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

புதிய அறிமுகங்களினால் விற்பனையில் சரிவை கண்டுள்ள க்ரெட்டா, செல்டோஸ்- ஸ்கார்பியோவின் சேல்ஸும் பாதியாக குறைந்தது

கடந்த ஆண்டின் மற்றொரு புதிய அறிமுகமான எம்ஜி ஆஸ்டர் இந்த லிஸ்ட்டில் 1,125 யூனிட்களின் விற்பனை உடன் 7வது இடத்தில் உள்ளது. இவற்றிற்கு அடுத்துள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் 200க்கும் குறைவான விற்பனை எண்ணிக்கைகளையே கடந்த டிசம்பர் மாதத்தில் பதிவு செய்துள்ளன. இந்த வகையில் 8வது இடத்தில் உள்ள நிஸான் கிக்ஸ் காம்பெக்ட் எஸ்யூவி காரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 130 யூனிட்களாகும்.

புதிய அறிமுகங்களினால் விற்பனையில் சரிவை கண்டுள்ள க்ரெட்டா, செல்டோஸ்- ஸ்கார்பியோவின் சேல்ஸும் பாதியாக குறைந்தது

ஆனால் உண்மையில் 2020 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் கிக்ஸின் இந்த விற்பனை எண்ணிக்கை 34.02% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 97 கிக்ஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடைசி 9வது இடத்தில் உள்ள ரெனால்ட் டஸ்டர் 56 யூனிட்களின் விற்பனையை கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளது. ஆனால் 2020 டிசம்பரில் இதனை காட்டிலும் சுமார் 88.66% அதிகமாக 494 டஸ்டர் கார்கள் விற்கப்பட்டு இருந்தன.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Compact SUV Sales Dec 2021, Creta, Seltos Leads.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X