டொயோட்டா ஃபார்ச்சூனரை காட்டிலும் பெஸ்ட்டா புதிய ஜீப் மெரிடியன்? ஒற்றுமை & வேற்றுமைகள்!!

பிரபல காம்பஸ் 5-இருக்கை எஸ்யூவி காரின் 7-இருக்கை வெர்சனாக மெரிடியன் கடந்த 2021ஆம் ஆண்டு உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவிற்கான மெரிடியன் மாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. விற்பனையில் இந்த ஜீப் காருக்கு ஸ்கோடா கோடியாக், எம்ஜி க்ளோஸ்டர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட கார்கள் போட்டியாக விளங்கவுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனரை காட்டிலும் பெஸ்ட்டா புதிய ஜீப் மெரிடியன்? ஒற்றுமை & வேற்றுமைகள்!!

ஆனால் உண்மையான போட்டி மெரிடியனுக்கு டொயோட்டா ஃபார்ச்சூனரிடம் இருந்தே இருக்கும். ஏனெனில் சற்று விலைமிக்கதாக இருப்பினும், இப்போதும் இந்தியர்களின் ஃபேவரட் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக ஃபார்ச்சூனர் உள்ளது. இந்த பிரபலமான டொயோட்டா தயாரிப்புடன் ஒப்பிடுகையில் ஜீப் மெரிடியன் எந்த அளவிற்கு வேறுப்பட்டது என்பதை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா ஃபார்ச்சூனரை காட்டிலும் பெஸ்ட்டா புதிய ஜீப் மெரிடியன்? ஒற்றுமை & வேற்றுமைகள்!!

வெளிப்புற தோற்றம் & பரிமாண அளவுகள்

காம்பஸை போல புதிய ஜீப் மெரிடியனும் கூர்மையான லைன்களுடன் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை பெற்றுள்ளது. இதற்கேற்ப நேர்த்தியான ஹெட்லேம்ப்கள் மற்றும் தடிமனான முன்பக்க க்ரில்லை மெரிடியன் கொண்டுள்ளது. ஃபார்ச்சூனரை பொறுத்தவரையில், இதுவும் மெரிடியனுக்கு எந்த விதத்திலும் சளைத்தது கிடையாது என்பதுபோல் அனைவருக்கும் பிடித்த விதத்தில் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனரை காட்டிலும் பெஸ்ட்டா புதிய ஜீப் மெரிடியன்? ஒற்றுமை & வேற்றுமைகள்!!
Dimensions Meridian Fortuner
Length 4,769 mm 4,795 mm
Width 1,859 mm 1,855 mm
Height 1,652 mm 1,835 mm
Wheelbase 2,794 mm 2,745 mm

பரிமாண அளவுகளை ஒப்பிட்டு பார்த்தோமேயானால், நீளம், அகலத்தில் மெரிடியனுக்கும், ஃபார்ச்சூனருக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்றாலும், ஃபார்ச்சூனர் கிட்டத்தட்ட 15 செ.மீ வரையில் உயரம் அதிகம் கொண்டதாக உள்ளது. மெரிடியனின் வீல்பேஸ் அளவு 2,794மிமீ மற்றும் ஃபார்ச்சூனரின் வீல்பேஸ் அளவு 2,745மிமீ ஆகும்.

டொயோட்டா ஃபார்ச்சூனரை காட்டிலும் பெஸ்ட்டா புதிய ஜீப் மெரிடியன்? ஒற்றுமை & வேற்றுமைகள்!!

உட்புற அமைப்பு & வசதிகள்

புதிய மெரிடியன் மாடல் வழக்கமான காம்பஸில் இருந்தே டேஸ்போர்டு மற்றும் ஸ்டேரிங் சக்கரத்தை அப்படியே ஏற்றுள்ளது. ஆனால் அவற்றையும் சேர்த்து மொத்த கேபினையும் மூடியிருக்கும் லெதர் வேறுப்பட்டது. கருப்பு & பழுப்பு என்கிற இரட்டை-நிறத்தில் மெரிடியனின் கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனரை காட்டிலும் பெஸ்ட்டா புதிய ஜீப் மெரிடியன்? ஒற்றுமை & வேற்றுமைகள்!!

ஃபார்ச்சூனரின் உட்புற கேபினும் ப்ரீமியம் தரத்திலானதே, இருப்பினும் மெரிடியன் உடன் ஒப்பிடுகையில் சற்று எளிமையானதாக உள்ளது. சாமோய்ஸ் மற்றும் கருப்பு என்கிற இரு நிறத்தேர்வுகள் ஃபார்ச்சூனரின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்களுக்கு வழங்கப்படுகின்றன. அதேநேரம் இதன் லெஜண்டர் வெர்சன் கருப்பு & மெரூன் என்கிற இரட்டை-தீம்-ஐ பெறுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனரை காட்டிலும் பெஸ்ட்டா புதிய ஜீப் மெரிடியன்? ஒற்றுமை & வேற்றுமைகள்!!

என்ஜின் & டிரான்ஸ்மிஷன்

முதற்கட்டமாக ஒரேயொரு 2.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் தேர்வில் மட்டுமே மெரிடியனை விற்பனை செய்ய ஜீப் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. காம்பஸிலும் வழங்கப்படுகின்ற இந்த டர்போ-டீசல் என்ஜின் தேர்வு அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் & 9-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

Specs Meridian Fortuner
Engine 2.0L turbo diesel 2.7L Petrol / 2.8L Diesel
Power 170bhp 164bhp / 201bhp
Torque 350Nm 245Nm / 500Nm
Gearbox 6MT & 9AT 6MT & 6AT
Drive Layout FWD & AWD RWD & AWD
டொயோட்டா ஃபார்ச்சூனரை காட்டிலும் பெஸ்ட்டா புதிய ஜீப் மெரிடியன்? ஒற்றுமை & வேற்றுமைகள்!!

ஃபார்ச்சூனரில் 2.7 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (5-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்) மற்றும் 2.8 லிட்டர் டர்போ-டீசல் (6-ஸ்பீடு மேனுவல் & ஆட்டோமேட்டிக்) என 2 விதமான என்ஜின் தேர்வுகளை டொயோட்டா வழங்குகிறது. மெரிடியன், ஃபார்ச்சூனர் இரண்டிலும் அனைத்து-சக்கர-ட்ரைவ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனரை காட்டிலும் பெஸ்ட்டா புதிய ஜீப் மெரிடியன்? ஒற்றுமை & வேற்றுமைகள்!!

விலை

ஜீப் மெரிடியனின் எக்ஸ்-ஷோரூம் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த அறிவிப்பினை வருகிற மே மாதத்தில் எதிர்பார்க்கிறோம். நிச்சயமாக இதன் விலை காம்பஸின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலைகளான ரூ.17.79 லட்சம்- ரூ.30.72 லட்சத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும்.

டொயோட்டா ஃபார்ச்சூனரை காட்டிலும் பெஸ்ட்டா புதிய ஜீப் மெரிடியன்? ஒற்றுமை & வேற்றுமைகள்!!

டொயோட்டா ஃபார்ச்சூனரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.31.39 லட்சங்களில் இருந்து ரூ.39.28 லட்சங்கள் வரையில் உள்ளன. ஏறக்குறைய இந்த அளவில்தான் மெரிடியனின் விலைகளும் இருக்கும். இது ஸ்டாண்டர்ட் ஃபார்ச்சூனர் மாடல்களின் விலைகளாகும். லெஜண்டர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.39.71 லட்சத்தில் இருந்து ரூ.43.43 லட்சங்கள் வரையில் உள்ளன.

Most Read Articles
English summary
Comparison of specs features and dimensions between jeep meridian and toyota fortuner
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X