மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!

இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த அஜிங்க்யா ரகானே, பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்போ அவரு வாங்கியிருக்க காரை பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) விற்பனைச் செய்து வரும் புகழ்பெற்ற லக்சூரி கார் மாடல்களில் 6 சீரிஸ் (BMW 6 Series)-ம் ஒன்று. இந்த மாடலின் 630ஐ எம் ஸ்போர்ட் (630i M Sport) வேரியண்டையே கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரகானே தற்போது வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்போ அவரு வாங்கியிருக்க காரை பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!

சோபர் வெள்ளை நிறத்திலான காரையே அவர் வாங்கியிருக்கின்றார். இதனை டெலிவரி பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. கிரிக்கெட் வீரர் வாங்கியிருக்கும் ஆடம்பர காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ. 69.90 லட்சம் ஆகும். இது ஆன்-ரோடில் இன்னும் பல லட்சங்கள் அதிக விலையில் விற்பனைச் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்போ அவரு வாங்கியிருக்க காரை பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!

பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த ஆண்டில்தான் 6 சீரிஸின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. கூடுதல் லக்சூரி அம்சங்கள் மற்றும் அதி-நவீன வசதிகள் கொண்ட தயாரிப்பாக அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இத்தகைய ஓர் மதிப்புமிக்க சொகுசு காரையே கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரகானே தற்போது வாங்கியிருக்கின்றார்.

மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்போ அவரு வாங்கியிருக்க காரை பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!

அவரிடத்தில் இந்த கார் மட்டுமின்றி இன்னும் சில கார்களும் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், ஆடி க்யூ5 சொகுசு கார் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த காரை வாங்குவதற்கு முன்னர் வரை அவர் மாருதி சுஸுகி வேகன்ஆர் காரையே பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, கிரிக்கெட் உலகில் சாதிக்கும் முன்னர் வரை அவர் பட்ஜெட் கார் பிரியர்களின் விருப்பமான வாகனமான வேகன்ஆர் கார் மாடலையே பயன்படுத்தி வந்திருக்கின்றார்.

மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்போ அவரு வாங்கியிருக்க காரை பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!

இந்த காரே அவர் கடந்த காலங்களில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் என்பதற்கு சான்றாக இருக்கின்றது. ஆனால், இப்போது அவரிடத்தில் பல சொகுசு கார்கள் பயன்பாட்டிற்கு வர தொடங்கியிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே அவர் தற்போது புதிதாக பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் சொகுசு காரை வாங்கியிருக்கின்றார்.

மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்போ அவரு வாங்கியிருக்க காரை பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!

கிரிக்கெட் உலகில் அஜிங்க்யா ரகானே மட்டுமே பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் சொகுசு காரை பயன்படுத்தவில்லை. இன்னும் பலரும் இந்த மாடல் காரை பயன்படுத்தி வருகின்றனர். சொகுசு வசதிகள் ஏராளம் என்பதால் பலர் இக்காருக்கு மிகப் பெரிய ஃபேனாக இருக்கின்றனர். அண்மையில் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா-கூட பிஎம்டபிள்யூவின் 630ஐ எம் ஸ்போர்ட் வெள்ளை நிற காரையே வாங்கினார்.

மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்போ அவரு வாங்கியிருக்க காரை பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!

பிஎம்டபிள்யூ நிறுவனம் 6 சீரிஸ் சொகுசு காரை மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்குகின்றது. 630ஐ எம் ஸ்போர்ட் (630i M Sport), 620 டி லக்சூரி லைன் (620d Luxury Line) மற்றும் 630டி எம் ஸ்போர்ட் (630d M Sport) ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைத்து வருகின்றது. 5 சீரிஸைக் காட்டிலும் பெரிய தோற்றம் கொண்ட வாகனமாக 6 சீரிஸ் காட்சியளிக்கின்றது.

மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்போ அவரு வாங்கியிருக்க காரை பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!

வீல் பேஸ் மற்றும் நீளம் அதிகமானதகக் கொண்டுள்ளது. ஆகையால், இதற்கு ரசிகப் பட்டாளம் சற்று பெரியது. அதேநேரத்தில் சற்று மாறுபட்ட தோற்றத்தையும் இது கொண்டிருக்கும். குறிப்பாக, காரின் பின் பக்கம் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. இந்த மாறுபட்ட தோற்றத்தினாலேயே 6 சீரிஸ் கிரான் டூரர் ரக காராக மாறியிருக்கின்றது. காரின் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்கு ஏற்ப இந்த தோற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்போ அவரு வாங்கியிருக்க காரை பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!

வேரியண்டிற்கு இக்கார் மாறுபட்ட எஞ்ஜினைக் கொண்டிருக்கின்றது. 6 சீரிஸ் ஜிடி வேரியண்ட் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 258 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார், 190 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் மோட்டார் மற்றும் 265 பிஎஸ்-620 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.

மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்போ அவரு வாங்கியிருக்க காரை பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!

மேலே அனைத்து எஞ்ஜின் தேர்வுகளிலும் 8 ஸ்பீடு இசட்எஃப் டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றது. இத்தகைய தரமான அம்சங்கள் கொண்ட சொகுசு காரையே அஜிங்க்யா ரகானே வாங்கியிருக்கின்றார். ஐபிஎல் போட்டி கொல்கத்தா அணியின் மிக சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர். இவரின் இந்த காஸ்ட்லியான கொள்முதல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cricket player ajinkya rahane buys bmw 6 series luxury car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X