பயன்படுத்தவே முடியாது.. வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட மினி காருக்கு புத்தம் புதிய பொலிரோவை வழங்கிய மஹிந்திரா!

குடும்பத்திற்காக பழைய வாகனங்களின் கழிவுகளைக் கொண்டு சிறிய ஜீப் ரக வாகனத்தை உருவாக்கிய நபருக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா புத்தம் புதிய மஹிந்திரா பொலிரோ காரை அன்பளிப்பாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சொல்லியபடியே புத்தம் காரை வழங்கிய ஆனந்த் மஹிந்திரா... பயன்படுத்தவே முடியாது வாகனத்திற்கு இப்படி ஒரு எக்ஸ்சேஞ்சா!!

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் தொழிலதிபர்களில் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். வழக்கமான நெட்டிசன்களை போல் கிண்டல், கேலி, விநோத நிகழ்வுகளை பகிர்தல் என அனைத்தையும் துளியளவும் தயக்கமின்றி இவர் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் புதுமைகளை பாராட்டவும் இவர் தவறுவதில்லை.

சொல்லியபடியே புத்தம் காரை வழங்கிய ஆனந்த் மஹிந்திரா... பயன்படுத்தவே முடியாது வாகனத்திற்கு இப்படி ஒரு எக்ஸ்சேஞ்சா!!

அந்தவகையில், கடந்த இவரின் மனதை மஹராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தத்தேத்ரயா லோஹர் எனும் நபர் கவர்ந்திருந்தார். இவரே தனது குடும்பத்திற்காக பழைய வாகனங்களின் கழிவைக் கொண்டு சிறிய ஜீப் ரக வாகனத்தை உருவாக்கியவர். இந்த வாகனம் பற்றிய வீடியோ சமூக வலை தளத்தில் மிக வேகமாக பரவியது.

சொல்லியபடியே புத்தம் காரை வழங்கிய ஆனந்த் மஹிந்திரா... பயன்படுத்தவே முடியாது வாகனத்திற்கு இப்படி ஒரு எக்ஸ்சேஞ்சா!!

அவ்வாறு காட்டு தீயைப் போல் அந்த வீடியோ பரவிய நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கண்களிலும் அது பட்டது. வீடியோவைக் கண்ட உடன், தத்தேத்ரயாவின் தனி திறமைக்கு பாராட்டை தெரிவித்தார். இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், எக்ஸ்சேஞ்ஜின் அடிப்படையில் புதிய மஹிந்திரா பொலிரோ காரையும் வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.

சொல்லியபடியே புத்தம் காரை வழங்கிய ஆனந்த் மஹிந்திரா... பயன்படுத்தவே முடியாது வாகனத்திற்கு இப்படி ஒரு எக்ஸ்சேஞ்சா!!

ஆனால், ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்து வந்த தத்தேத்ரயா லோஹர் தற்போது ஆனந்த் மஹிந்திராவின் ஆஃபரை ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், தனது தனி திறமையால் உருவாக்கப்பட்ட சிறிய ஜீப்பை மஹிந்திரா நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு, புத்தம் புதிய மஹிந்திரா பொலிரோ காரை அவர் வீட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்.

சொல்லியபடியே புத்தம் காரை வழங்கிய ஆனந்த் மஹிந்திரா... பயன்படுத்தவே முடியாது வாகனத்திற்கு இப்படி ஒரு எக்ஸ்சேஞ்சா!!

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்தும் ஆனந்த் மஹிந்திரா அவரது டுவிட்டர் பக்கத்தில் ஓர் பதிவை வெளியிட்டிருக்கின்றார். அதில், "தனது வாகனத்தை எக்ஸ்சேஞ்ஜ் செய்து புதிய பொலிரோ காரை ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. நேற்று அவர், அவருடன் குடும்பத்துடன் வந்து பொலிரோவை பெற்றுக் கொண்டார். அவர் உருவாக்கிய சிறிய ஜீப் எங்களின் ஆராய்ச்சி கூடத்தில் நிலை நிறுத்தப்பட இருக்கின்றது. இது பெரும்பாலானோரை ஊக்குவிக்க உதவும்" என்று பதிவிட்டுள்ளார்.

சொல்லியபடியே புத்தம் காரை வழங்கிய ஆனந்த் மஹிந்திரா... பயன்படுத்தவே முடியாது வாகனத்திற்கு இப்படி ஒரு எக்ஸ்சேஞ்சா!!

பழைய வாகனங்களின் பாகங்களை உருவாக்கப்பட்டிருக்கும் மினி ஜீப்பை தத்தேத்ரயா லோஹரால் தொடர்ச்சியாக இந்தியாவில் பயன்படுத்த முடியாது. ஆம், இந்தியாவில் உரு மாற்றம் செய்யப்பட்ட அல்லது கலப்பின வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆராய்ச்சிக்காக இதுமாதிரியான வாகனங்கள் உறிய அனுமதியுடன் உருவாக்கப்படலாமே, தவிர, அவற்றை எந்த அனுமதியும் இன்றி சாலையில் பயன்படுத்தக் கூடாது.

சொல்லியபடியே புத்தம் காரை வழங்கிய ஆனந்த் மஹிந்திரா... பயன்படுத்தவே முடியாது வாகனத்திற்கு இப்படி ஒரு எக்ஸ்சேஞ்சா!!

இந்த நிலையை தத்தேத்ரயா லோஹருக்கு உணர்த்திய ஆனந்த் மஹிந்திரா, எப்போதும் வேண்டுமானாலும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தங்களின் வாகனத்தை பறிமுதல் செய்யலாம். ஆகையால், தங்களின் இச்சிறிய வாகனத்தை ஒப்படைத்துவிட்டு புதிய பொலிரோவை ஓட்டிச் செல்லுமாறு கடந்த ஆண்டே ஆனந்த் மஹிந்திரா அறிவித்திருந்தார்.

சொல்லியபடியே புத்தம் காரை வழங்கிய ஆனந்த் மஹிந்திரா... பயன்படுத்தவே முடியாது வாகனத்திற்கு இப்படி ஒரு எக்ஸ்சேஞ்சா!!

ஆனால், இது எங்களுடைய முதல் முயற்சி, புதிய பொலிரோவை பராமரிக்கும் அளவிற்கு எங்களிடம் வசதி இல்லை என ஆனந்த் மஹிந்திராவின் ஆஃபரை தத்தேத்ரயாவும், அவரது குடும்பமும் ஏற்றுக் கொள்ளாமல் வந்தது. இந்த நிலையிலேயே திடீர் மாற்றமாக குடும்பத்துடன் சேர்ந்து சென்று புதிய மஹிந்திரா பொலிரோ காரை அவர் பெற்றிருக்கின்றார்.

சொல்லியபடியே புத்தம் காரை வழங்கிய ஆனந்த் மஹிந்திரா... பயன்படுத்தவே முடியாது வாகனத்திற்கு இப்படி ஒரு எக்ஸ்சேஞ்சா!!

மினி ஜீப்பின் உருவாக்கத்திற்காக தத்தேத்ரயா லோஹர் ரூ. 60 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவு செய்திருக்கின்றார். இக்காரில் கிக்-ஸ்டார்ட் செய்யும் வசதிக் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில் இவ்வாகனத்தில் இருசக்கர வாகனத்தின் எஞ்ஜினை பயன்படுத்தியிருப்பது தெரிகின்றது. ஆனால், எந்த மோட்டார்சைக்கிளின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலை அவர் வெளியிடவில்லை.

சொல்லியபடியே புத்தம் காரை வழங்கிய ஆனந்த் மஹிந்திரா... பயன்படுத்தவே முடியாது வாகனத்திற்கு இப்படி ஒரு எக்ஸ்சேஞ்சா!!

இதைத்தொடர்ந்து, ஆட்டோக்களின் சக்கரம், பழைய கார்களின் இருக்கை மற்றும் ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்யூவல் டேங்க் உள்ளிட்டவற்றை இந்த வாகனத்தில் பயன்படுத்தியிருக்கின்றார். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வாகனங்களில் இருந்து பெறப்பட்டவையாகும். இத்தகைய ஓர் வாகனத்திற்கே புத்தம் புதிய பொலிரோ காரை வழங்கி அழகு பார்த்திருக்கின்றார் ஆனந்த் மஹிந்திரா.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Dattatreya lohar gets brand new bolero suv as a gift from anand mahindra
Story first published: Thursday, January 27, 2022, 15:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X