இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி சாலையில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3! இதுதான் முதல் முறை

சிட்ரோன் சி3 (Citroen C3) கார் இந்தியாவில் எந்தவித மறைப்புகளுமின்றி சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் பிரத்யேகமாக உங்களின் பார்வைக்காக இப்பதிவில் வழங்கியுள்ளோம். இத்துடன் கார்குறித்த சில முக்கிய தகவல்களையும் வழங்கியுள்ளோம். வாருங்கள் அதுகுறித்த தகவல்களைக் காணலாம்.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

பிரஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சிட்ரோன் (Citroen) நிறுவனம், சி5 ஏர்கிராஸ் (Citroen C5 Aircross SUV) எனும் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதுவே நிறுவனம் நாட்டில் கால் தடம் பதித்து விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் கார் மாடலாகும்.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

இந்த ஒற்றை கார் மாடலையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. ஆம் வேறு எந்த கார் மாடலையும் நிறுவனம் இதுவரை புதிதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், இந்த நிலை வெகு நாட்களுக்கு நீடிக்காது என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

அதாவது, நிறுவனம் புதிய கார் மாடல் ஒன்றை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களில் ஒன்றான சி3 (Citroen C3) இந்தியாவில் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

இவ்வாறு இக்காரை நிறுவனம் சோதனையோட்டம் செய்வது இது முதல் முறையல்ல. ஆனால், எந்தவொரு மறைப்புகளும் இன்றி சி3 சோதனையோட்டம் செய்யப்பட்டு, எங்களின் கேமிராவின் கண்களில் சிக்குவது இதுவே முதல் முறையாகும். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரத்யேகமாக உங்கள் பார்வைக்காக இந்த செய்தில் வழங்கியிருக்கின்றோம்.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

ஆரஞ்சு நிற மேற்கூரை மற்றும் சாம்பல் நிற வெளிப்புற பெயிண்ட் பூச்சில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் சிட்ரோன் சி3 காரே கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. சிட்ரோன் நிறுவனம் இக்காரை வெகு நாட்களாகவே சோதனையோட்டத்திற்கு உட்படுத்தி வருகின்றது. ஆனால், இந்த முறையே மிக மிக தெளிவாக காட்சியளித்திருக்கின்றது.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

இக்கார் விற்பனைக்கு வரும் எனில் தற்போது இந்தியாவில் சப்-4 மீட்டர் கார்கள் விற்பனையில் உள்ள ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விளங்கும்.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

சி3 காரை சிட்ரோன் நிறுவனம் இந்தியர்களுக்காக மேட்-இன் இந்தியா காராக உருவாக்கி வருகின்றது. ஆகையால், இந்தியர்களைக் கவரக் கூடிய அம்சங்கள் பல இக்காரில் எதிர்பார்க்கலாம். மேலும், இக்காரை 'காமன் மோடுலர் பிளாட்பாரத்தில்' வைத்தே சிட்ரோன் கட்டமைத்திருக்கின்றது.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

இது குறைவான விலையில் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட வாகனங்களை உருவாக்குவதற்கான தளம் ஆகும். எனவேதான், சிட்ரோன் சி3 காரை குறைவான விலையில் அதிக வசதிகளுடன் எதிர்பார்க்கலாம் சில நம்பதகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் பிரீமியம் தர அம்சங்கள் கொஞ்சம் அதிகமாகவே இக்காரில் இருக்கும் என்பதால் சற்று அதிக விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

இதுமட்டுமின்றி பரந்தளவு இக்காருக்கான அக்ஸசெரீஸ்களை ஆப்ஷனாக வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக சிட்ரோன் சி3 காரை மேலும் கவர்ச்சியான மற்றும் சிறப்புகள் வாய்ந்த காராக மாற்ற முடியும். அந்தவகையில், 78 வகையான வித்தியாசமான அக்ஸசெரீஸ்களை சிட்ரோன் வழங்க இருக்கின்றது.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

இதுமட்டுமில்லாமல் நிறுவனமும் அதன் சார்பில் சில முக்கிய அம்சங்களை காரில் வழங்க இருக்கின்றது. அந்தவகையில், 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் முக்கியமான சிறப்பம்சமாக சி3 காரில் வழங்கப்பட இருக்கின்றது. இது, கார் இணைப்பு, நேவிகேஷன், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகள் கொண்டது.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

இத்துடன், சில தகவல்கள் இக்கார் குறித்து வதந்தியாக பரவிக் கொண்டிருக்கின்றன. அதாவது, சிட்ரோன் சி3 ஃப்ளக்ஸ் ஃப்யூவல் (flex-fuel) எஞ்ஜினுடன் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த மோட்டார்கள் பெட்ரோல் மற்றும் எத்தனாலில் இயங்கக் கூடியவை ஆகும். இதுவே அந்த மோட்டாரின் சிறப்பாகும்.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

அந்தவகையில், சி3 காரில் 130 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய 1.2 லிட்டர் டர்போசார்ஜட் மோட்டாரே எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, 1.6 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பயர்டு மோட்டார் தேர்வு சில மாற்றங்களுடன் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது நம்ம டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: மறைப்புகளின்றி இந்தியாவில் சுற்றி திரிந்த சிட்ரோன் சி3... இதுதான் முதல் முறை!

இந்த கார் விற்பனைக்கு வரும் பட்சத்தில் தனித்து இந்திய சந்தையைக் களம் கண்டு வரும் சி5 ஏர்கிராஸ் கார் மாடலுக்கு ஓர் துணையாக மாறும். சி5 ஏர்கிராஸ் ஓர் பிரீமியம் தர எஸ்யூவி ரக காராகும். இந்தியர்கள் மத்தியில் இக்கார் மாடலுக்கு கணிசமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. ஐந்து இருக்கைகள் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், ஹூண்டாய் டக்சன், ஜீப் காம்பஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு இது போட்டியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

குறிப்பு: முதல் ஐந்து படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Drivespark exclusive citroen c3 spotted while testing without camouflage here is full details
Story first published: Saturday, April 23, 2022, 19:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X