Dubai DutyFree LuckyDraw: தரமான பரிசுகளை வென்ற இந்தியர்கள்! 62முதியவருக்கு ஒரு மில்லியன் டாலர் விழுந்திருக்கு!

துபாய் டூட்டி ஃப்ரீ லக்கி டிராவில் இந்தியர் ஒருவர் சூப்பரான மெர்சிடிஸ் சொகுசு காரையும், மேலும் இரு இந்தியர்கள் பிஎம்டபிள்யூ பைக்குகளையும் வென்றிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

துபாய் டூட்டி ஃப்ரீ லக்கி டிராவில் சூப்பரான சொகுசு காரை வென்ற இந்தியர்... இன்னொருத்தர் ஒரு மில்லியன் டாலரை வென்றிருக்காரு!

துபாய் டூட்டி ஃப்ரீ லக்கி டிராவ் (Dubai Duty-Free Lucky Draw) வெற்றியாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியர்கள் சிலர் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கின்றனர். வெற்றியாளர்களுக்கு என்ன மாதிரியான பரிசு வழங்கப்பட்டிருக்கின்றது. என்பது பற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

துபாய் டூட்டி ஃப்ரீ லக்கி டிராவில் சூப்பரான சொகுசு காரை வென்ற இந்தியர்... இன்னொருத்தர் ஒரு மில்லியன் டாலரை வென்றிருக்காரு!

உலகின் மிகவும் பிரபலமான டூட்டி ஃப்ரீ ஸ்டோர்களில் 'துபாய் டூட்டி ஃப்ரீ' ஸ்டோரும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் 2.5 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்கள் வர்த்தகத்தைப் பெறும் ஸ்டோராகவும் இது காட்சியளிக்கின்றது. 1983 ஆம் ஆண்டில் இருந்து இது செயல்பட்டு வருகின்றது. துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதே விமான நிலையங்களில் அது இயங்கிக் கொண்டிருக்கின்றது.

துபாய் டூட்டி ஃப்ரீ லக்கி டிராவில் சூப்பரான சொகுசு காரை வென்ற இந்தியர்... இன்னொருத்தர் ஒரு மில்லியன் டாலரை வென்றிருக்காரு!

துபாய் டூட்டி-ஃப்ரீ, சில்லறை வர்த்தகம் மட்டுமின்றி லக்கி டிரா (Dubai Duty-Free Lucky Draw) போட்டி ஒன்றையும் மேற்கொண்டு வருகின்றது. மில்லினியம் மில்லியனர் (Millennium Millionaire) என்கிற பெயரில் இந்த போட்டியை அது நடத்தி வருகின்றது. வாடிக்கையாளர்கள் லக்கி டிராவிற்கான டிக்கெட்டை தனியாக பணம் கொடுத்து பெற வேண்டும்.

அவ்வாறாக டிக்கெட்டை வாங்குவோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு கடைசியாக, கடைசியாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய போட்டியிலேயே இந்தியாவைச் சேர்ந்த சிலர் தரமான பரிசுகளை வென்றிருக்கின்றனர். குறிப்பாக, சமீபத்திய போட்டியால் கேரளாவைச் சேர்ந்த 62 வயதான முதியவர் ஒருவர் மில்லியனராக மாறியிருக்கின்றார்.

துபாய் டூட்டி ஃப்ரீ லக்கி டிராவில் சூப்பரான சொகுசு காரை வென்ற இந்தியர்... இன்னொருத்தர் ஒரு மில்லியன் டாலரை வென்றிருக்காரு!

அவருக்கு முதல் பரிசாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு தோராயமாக ரூ. 7.83 கோடி ஆகும். ஜான் வர்கீஸ் என்ற முதியவரே இத்தகைய மாபெரும் பரிசை வென்றவர் ஆவார்.

துபாய் டூட்டி ஃப்ரீ லக்கி டிராவில் சூப்பரான சொகுசு காரை வென்ற இந்தியர்... இன்னொருத்தர் ஒரு மில்லியன் டாலரை வென்றிருக்காரு!

பெருந்தொகை வெற்றிகுறித்து முதியவர் ஜான் வர்கீஸ் கூறியதாவது, "என்னுடைய வாழ்நாளில் ஒரு முறைகூட இதுபோன்று பரிசுகளை நான் வென்றதில்லை. இதுவே என் வாழ் நாளின் முதல் மற்றும் மிக முக்கியமான பரிசு" என தெரிவித்தார். இதேபோல் மற்றுமொரு இந்தியர் விலையுயர்ந்த காரையும், துபாய் வாசிகளாக மாறியிருக்கும் இன்னும் இரு இந்தியர்கள் பைக்கையும் பரிசாக வென்றிருக்கின்றார்.

துபாய் டூட்டி ஃப்ரீ லக்கி டிராவில் சூப்பரான சொகுசு காரை வென்ற இந்தியர்... இன்னொருத்தர் ஒரு மில்லியன் டாலரை வென்றிருக்காரு!

விலையுயர்ந்த மெர்சிடிஸ் ஏஎம்ஜி சிஎல்எஸ் 53 4மேட்டிக் (Mercedes-AMG CLS 53 4MATIC) சொகுசு காரே பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றன. இதனை 40 வயதான திம்மையா நஞ்சப்பா என்பவரே லக்கி டிரா போட்டியில் தட்டிச் சென்றவர். மேலும், பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி (BMW R nineT) மற்றும் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர் (BMW R 1250 R) மோட்டார்சைக்கிள்களையும் இந்தியர்கள் பரிசாக வென்றிருக்கின்றனர்.

துபாய் டூட்டி ஃப்ரீ லக்கி டிராவில் சூப்பரான சொகுசு காரை வென்ற இந்தியர்... இன்னொருத்தர் ஒரு மில்லியன் டாலரை வென்றிருக்காரு!

இந்த வாகனங்களில் அதிகப்படியானோரின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி சிஎல்எஸ் 53 4மேட்டிக் கார் உள்ளது. இது ஓர் 4 கதவுகள் கொண்ட பெர்ஃபார்மன்ஸ் திறன் கொண்ட சொகுசு காராகும். இதில், 3.0 லிட்டர் பை-டர்போ வி6 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 429 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

துபாய் டூட்டி ஃப்ரீ லக்கி டிராவில் சூப்பரான சொகுசு காரை வென்ற இந்தியர்... இன்னொருத்தர் ஒரு மில்லியன் டாலரை வென்றிருக்காரு!

இதுமட்டுமின்றி, இந்த சொகுசு கார் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. தொடர்ந்து, வெறும் 4.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் திறனைக் கொண்ட சொகுசு வாகனமாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த காருக்கு அடுத்தபடியாக இருவருக்கு பிஎம்டபிள்யூ பைக் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது.

துபாய் டூட்டி ஃப்ரீ லக்கி டிராவில் சூப்பரான சொகுசு காரை வென்ற இந்தியர்... இன்னொருத்தர் ஒரு மில்லியன் டாலரை வென்றிருக்காரு!

ஜமைல் ஃபோனஸ்கா என்ற 40 வயதுடைய இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த துபாய் வாசி பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி பைக்கும், ஷாகித் அபித் ஹூசைன் அன்சாரி என்பவர் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர் பைக்கையும் வென்றிருக்கின்றனர். இதில், ஆர் நைன் டி மோட்டார்சைக்கிள் என்பது நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிள் ஆகும். அதேநேரத்தில், பிஎம்டபிள்யூ ஆர் 1250ஆர் மோட்டார்சைக்கிளானது பவர்ஃபுல் ரோட்ஸ்டர் வாகனமாகும். இந்த மாதிரியான வாகனங்களையே இந்தியர்கள் பரிசாக வென்றிருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dubai duty free lucky draw indians win mercedes amg cls 53 and bmw bikes
Story first published: Monday, June 27, 2022, 14:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X